நெக்ஸ்ட்’ தேர்வு எழுதினால்தான் டாக்டராக முடியும்

  நாட்டின் மருத்துவக் கல்வியைச் சீரமைப்பதற்காக, தேசிய மருத்துவக் கமிஷனை அமைக்க, பிரதமர் மோடி தலைமையில் 17.7.2019இல் கூடிய, மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின், பத்திரிகையாளர்களைச் சந்தித்த, பா.ஜ.க.வை சேர்ந்த மத்திய, தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது: தேசிய மருத்துவ கமிஷனை ஏற்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மருத்துவக் கல்வியைச் சீரமைப்பதற்கான இந்த நடவடிக்கை, தற்போது செயல்பாட்டில் உள்ள, இந்திய மருத்துவ கவுன்சிலை மாற்றி அமைக்கும். இதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ள […]

மேலும்....

உயர்ஜாதிக்கு இடம் கொடுக்க – இருப்பவர்களுக்குக் ‘கல்தா’

பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்த, தில்லிப் பல்கலைக்கழகம் மிகவும் அவசரகதியில் நடவடிக்கை எடுத்திருப்பதன் காரணமாக தற்சமயம் பணியிலிருக்கும் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் வேலைநீக்கம் செய்யப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனைக் கண்டித்து, தில்லிப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைமையில், ஆசிரியர்கள், இரண்டு நாள்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீட்டை அமல்படுத்துகிறோம் என்கிற பெயரில், தில்லிப் பல்கலைக்கழக நிருவாகமானது, தற்போது பணியிலிருக்கும் தற்காலிக ஊழியர்கள் நூற்றுக்கணக்கான வர்களை வேலையை விட்டு நீக்கும் […]

மேலும்....

செய்திச் சிதறல்கள்

ஒரு வரிச் செய்திகள் நாயைவிட பல மடங்கு மோப்ப சக்தி கொண்டது மீன். கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையின் பழைய பெயர் ‘கிண்டி லாட்ஜ்’.  முன் கழுத்துக் கழலை (Goitre)  தைராய்டு சுரப்பி பெரிதாவதால் கழுத்தில் தொண்டைப் பகுதிக்கு கீழே ஏற்படும் வீக்கமே, கழுத்துக் கழலை (Goitre) எனப்படுகிறது. அயோடின் குறைபாட்டால்தான் பெரும்பாலும் இது ஏற்படும். அயோடின் சத்தை உணவில் கலந்து கொடுப்பதன் மூலம் இந்த வீக்கத்தைக் குறைக்கலாம். அவசியம் ஏற்படும்போது, அறுவை மருத்துவத்தால் சரி செய்யலாம்.

மேலும்....

டாக்டர் சி.நடேசனார்

நினைவு நாள்: 18.2.1937 நீதிக்கட்சியின் பிதாமகர்கள் என்று போற்றப்படுபவர்கள் டாக்டர் சி.நடேசனார், பிட்டி.தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர் ஆகியோராவர். நீதிக்கட்சியின் தோற்றுவாய்க்கு மூலவித்து டாக்டர் சி.நடேசனார். சென்னை – திருவல்லிக்கேணி பெரிய தெருவில் பிறந்து வளர்ந்து வாழ்ந்த அந்தப் பெருமகனால் 1912இல் துவக்கப்பட்டதுதான் திராவிடர் சங்கம் (Dravidan Association) என்பதாகும். அந்தக் காலத்தில் கல்லூரியில் படிக்க வேண்டுமானால் வந்துசேர வேண்டிய இடம் சென்னைதான். பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் தங்கிப் படிக்க சென்னையில் விடுதிகள் கிடையாது. பார்ப்பனர் உணவு விடுதிகளில், பார்ப்பனர் […]

மேலும்....

நிகழ்வுகள் : ’ நீட்’டை ஒழிக்க நெடும்பயணம்!

– மஞ்சை வசந்தன் ‘நீட்’ தேர்வு மற்றும் புதியக்கல்விக் கொள்கையால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட கிராமப்புற மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள _ ஏற்படவுள்ள பேராபத்துகளை விளக்கி தமிழக மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பொதுமக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் தமிழர் தலைவர் ஆசிரியர். பாசிச மத்திய அரசின் மனுதர்ம ஆட்சியின் மக்கள் விரோதச் செயல்பாடுகளையும் அதற்குத் துணைபோகும் அ.தி.மு.க அரசையும் கண்டித்தும், நீட்டை விரட்டியே தீருவோம் என்கிற முழக்கத்தோடு 2020 ஜனவரி 20ஆம் தேதி நாகர்கோவிலில் தொடங்கி 2020 ஜனவரி […]

மேலும்....