சிந்தனை : இளைஞர்களே,வாருங்கள்….

முனைவர் வா.நேரு அனைவர்க்கும் தந்தை பெரியாரின் 142-ஆம் ஆண்டு பிறந்த நாள் வாழ்த்துகள். இன்றைய இளைஞர்கள், சமூக ஊடகங்களில் தந்தை பெரியாரைக் கொண்டாடுவதைக்காணும் போது பெரும் களிப்பு நமக்கு ஏற்படுகிறது. தந்தை பெரியாரின் உருவப்படமும், அவரது மேற்கோள்களும் அச்சிடப்பட்ட பனியன்களை இளைஞர்கள் அணிந்து கொண்டு வெளியிடங்களில் உலா வந்து கொண்டு இருப்பதைப் பார்க்கும்போது உவகையும் மகிழ்ச்சியும் நமக்கு ஏற்படுகின்றது, இன்றைய இளைஞர்கள் தந்தை பெரியாரைக் கொண்டாடுவதைப் போலவே தந்தை பெரியாரின் தத்துவங்களை, பெரியாரியலைப் புரிந்து-கொள்வதும், வாழ்க்கையில் மேற்கொள்-வதும் […]

மேலும்....

கவிதை : அய்யா பிறந்தநாள் உறுதி ஏற்போம்!

பேராசிரியர் முனைவர் கடவூர் மணிமாறன் தன்மானப்  போர்முரசு,  திராவி  டத்தின்                தன்னிகரே   இல்லாத  தலைவர்;  என்றும் அண்ணாவும்  அவர்தம்பி  கலைஞர்  தாமும்                அன்றாடம் தம்முரையில்  நினைவு கூர்ந்த பன்னரிய சீர்திருத்த வேழம்; நாட்டில்                பகுத்தறிவை விதைத்திட்ட அரிமா; நாளும் உண்மையினை  நன்மையினை  உரக்கச்  சொன்ன                ஒப்பற்ற இனவேங்கை  பெரியார் அன்றோ!   குடிஅரசில்  விடுதலையில்  அந்த  நாளில்                கொள்கையினைப்  பறைசாற்றித்  தமிழர் வாழ்வின் அடிமையிருள்  அகன்றிடவே  விழிப்பை  நல்கி                […]

மேலும்....

வரலாற்றுச் சுவடுகள் – ‘நடமாடும் பல்கலைக் கழகம்’ டாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் இறுதி சொற்பொழிவு (4)

மானம் பெரிதா? சோறு பெரிதா? சிலர் நம்முடைய நாட்டிலேகூட மானம் பெரிதா? _ சோறு பெரிதா? என்று – கேட்கின்றார்கள். மானம் அவ்வளவு பெரிதல்ல, சோறு தான் பெரிது என்று சொல்கின்றவர்களும் இருக்கின்றார்கள் (கை தட்டல்). ஆக மனித முயற்சியினால் தான் உலகம் வளர்ந்து கொண்டு வருகின்றது. அறிவியல் வளர்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி பெரியாருடைய கொள்கைகளுக்கு, கோட்பாடுகளுக்கு உறுதுணையாக இருந்து வருகின்றன. ஆகவேதான் அறிந்தும், அறியாமலும் அத்துணை பேரும் ஏற்றுக் கொள்கிறார்கள். சன்னதிக்கு மட்டும் தீவட்டி எதற்கு? […]

மேலும்....

மருத்துவம் – விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (14)

இதயத்தமனி (அடைப்பு) நோய் மரு.இரா.கவுதமன்   மருத்துவம்: பொதுவாக இந்நோய்க்கான மருத்துவம், அதன் தன்மைக்கேற்பவே மருத்துவர் முடிவு செய்வார். நெஞ்சு வலி எதனால் வருகிறது என முதலில் முடிவு செய்ய வேண்டும். “வாயுத் தொல்லை’’ என குறிப்பிடும் இரைப்பையில் (stஷீனீணீநீலீ) ஏற்படும் அழற்சியால் (stomach) கூட நெஞ்செரிச்சல், நெஞ்சு வலி வரலாம். ஆனால் நெஞ்சுவலி வந்தால், மருந்துக் கடைக்குச் சென்று நாமே மருந்து வாங்கி உண்பது ஒரு தவறான செயல். எதனால் வலி வருகிறது என மருத்துவ […]

மேலும்....

பெண்ணால் முடியும்! – எதிர் நீச்சல் போட்டால் வெற்றிதான்!

மதுரை மணிநகரம் பகுதியில் வசித்து வரும் முருகேசன், ஆவுடைதேவியின் மகள் பூரண சுந்தரி. தனது அய்ந்து வயதில் இரு கண் பார்வையையும் இழந்த நிலையிலும், வறுமை துரத்திய போதும் மனம் கலங்காமல் போராடி தமிழகத்தில் அய்.ஏ.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் பார்வையற்ற மாற்றுத்திறனாளிப் பெண் என்னும் சாதனையை படைத்துள்ளார். அதுமட்டுமின்றி தேர்வையும் தமிழிலேயே எழுதி வெற்றிபெற்றவர் என்னும் பெருமை-யையும் இவரையே சாரும். தனது லட்சியப் பயணத்தில் தான் எதிர் கொண்ட சவால்-களைப் பற்றி பூரணசுந்தரி கூறுகையில், […]

மேலும்....