ஆண் குழந்தைக்கு அலைவது ஏன்?

எது தமிழ்த் திருமணம்? – 3

ஆண் குழந்தைக்கு அலைவது ஏன்?

– சு.அறிவுக்கரசு

தன் துணைவரை இழந்த நிலையில் பெண்டிரை மலர் அணியக் கூடாது எனத் தடை விதித்துக் கைம்மை (வைதவ்யம்) நிலையின் அடையாளமாகக் கூறும் ஆரிய வாழ்க்கை முறையைத் திணித்துள்ள நிலையைக் கவனிக்க வேண்டும்.

பரிசம்

ஆரியரைப் பொறுத்தவரை, பெண்டிரை ஒரு பொரளாகத்தான் கருதி வாழ்ந்தனர். இன்றும் வாழ்ந்து வருகின்றனர். எவனாவது ஒருவன் கையில் பிடித்துக் கொடுத்துவிட வேண்டும் என்றும் அப்படிக் கொடுத்துவிட்டால், பெற்றோரின் கடமை முடிந்துவிட்டது என்றும் வாழ்கின்றனர்.

மேலும்....

திண்ணைகளில் முளைத்த திடீர் முட்கள்!

லண்டனில் அண்மையில் சில கடை மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் வாசலில் திடீரென்று சில உலோகக் கம்பிகள் தரையில் முளைத்தன. ஏன் இரும்புக் கம்பிகள்? வேறொன்றுமில்லை _- வீடற்றோர் யாரும் அந்த இடத்தில் வந்துபடுத்து உறங்கவோ உபயோகப்படுத்தவோ கூடாது என்பதற்காக விதைக்கப்பட்ட உலோக அம்புகளே அவை. கடைகளில் அல்லது வீடுகளில், நீண்ட ஈட்டி போன்ற கம்பிகளை நட்டுவைத்து இருப்பார்கள்; ஏன் என்றால், புறாக்கள் வந்து அமரக் கூடாது, வந்து அமர்ந்தால் அசுத்தம் செய்துவிடும் என்பதற்காக. புறாவின் இடத்தை மனிதர்களும் பிடிக்கிறார்கள் போலும்!

மேலும்....

நீதிமன்றம் விடுவித்தது; காவல்துறை கைது செய்தது!

மணிப்பூரின் தலைநகர் இம்பால் அருகே மலோம் என்னும் கிராமத்தில் 2000ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த என்கவுண்டரில் 10 பேர் ஆயுதப்படை வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்குக் கண்டனம் தெரிவித்தும் மணிப்பூரில் ஆயுதப்படை வீரர்களுக்குக் கொடுக்கப் பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தைத் திரும்பப் பெறக் கோரியும் இரோம் சானு சர்மிளா 2000ஆம் ஆண்டுமுதல் உண்ணாவிரதம் இருந்துவந்தார். உண்ணா விரதத்தைத் தொடங்கியபோது அவரது வயது 28. ஓர் ஆண்டின் 365 நாள்களும் உண்ணாவிரதம் இருந்துவந்த சர்மிளா மீது மணிப்பூர் காவல்துறையினர் […]

மேலும்....

உள்ளே.. வெளியே…

தற்போதுள்ள சட்டங்கள் மனித உரிமையை, சுதந்திரத்தைப் பறிப்பதாக உள்ளன. விசாரணை தாமதம் போன்றவற்றால் விரைவாக வழக்கை முடிக்க முடியாததால் பலர் சிறையில் வாடுகின்றனர். இது வருத்தமளிக்கிறது. மத்தியச் சிறை களில் உள்ளவர்களில் 50 சதவிகிதத்தினர் விசாரணைக் கைதிகளே. அதே நேரத்தில் மாவட்ட நீதிமன்றங்களில் விசாரணைக் கைதிகள் 72 சதவிகிதமாக உள்ளனர். தண்டனை விதிக்கப்பட்டவர்களை விட விசாரணைக் கைதிகளே அதிகளவில் சிறையில் உள்ளனர் என்று வருத்தப்பட்டிருப்பவர் வேறு யாருமல்ல. இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா. தண்டனைக்குரிய […]

மேலும்....

ஜாதி மற்றும் வர்க்க வேறுபாடுகளே காரணம்

ஆனந்த் பட்வர்த்தன் சென்னை தமிழ் ஸ்டுடியோ அமைப்பு ஆண்டுதோறும் வழங்கிவரும் மாற்றுத் திரைப்படங்களுக்கான வாழ்நாள் விருதான எடிட்டர் லெனின் விருதை இவ்வாண்டு ஆவணப்பட இயக்குநர் ஆனந்த் பட்வர்த்தனுக்கு வழங்கியது. மும்பையிலிருந்து இயங்கும் ஆனந்த் பட்வர்த்தன், ஜாதி – மதவாதத்திற்கு எதிராகவும், சுற்றுச் சூழலுக்கு ஆதரவாகவும் ஆவணப்படங்களை உருவாக்கி, வெளியிடும் துணிச்சல்காரர். விருது பெறுவதற்காக சென்னை வந்த ஆனந்த், ஜாதி மற்றும் வர்க்க வேறுபாடுகளே நம் நாட்டில் நடக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்குமான மூல காரணம். வர்க்க அடுக்கில் மேல் […]

மேலும்....