இணைந்த கரங்கள் – வலுப்பெறும் மதச் சார்பற்ற அணி

லாலு பிரசாத் யாதவுடன் நிதிஷ் குமார்

மதவெறி மனிதர்களைப் பிரிக்கிறது, அழிவுக்கு இட்டுச் செல்கிறது. மதச் சார்பின்மை மனிதர்களை இணைக்கிறது; ஒற்றுமைக்கு வழிவகுக்கிறது. இந்த உண்மையை நிரூபிக்கும் சமீபத்திய நிகழ்வுதான், பிரிந்த அரசியல் நண்பர்களான லாலு பிரசாத்தும், நிதிஷ்குமாரும் மீண்டும் அரசியலில் இணைந்திருப்பது.

நண்பர்கள் மீண்டும் இணைந்திருப்பதை வரவேற்பவர்கள் ஒருபுறம் இருக்க, பொறுக்க முடியாமல் பொருமுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். நிதிஷ்குமார்_லாலு கூட்டணியை விரும்பாதவர்கள், மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களும், உயர்ஜாதி வகுப்பினரும்தான் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.

மேலும்....

நிலவு தன்னைத்தானே சுற்றிக் கொள்வதில்லையாமே? (தவறான அறிவியல் தகவலுக்கு மறுப்பு)

– பேராசிரியர் ந.வெற்றியழகன் பார்க்க முடியாத மறுபக்கம் உங்களுக்குத் தெரியுமா? என்பது அறிவியல்பற்றிய வினா_விடைகளின் தொகுப்பு நூல். அறிவியல் வெளியீடு என்னும் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன் ஆசிரியர்கள்: வள்ளிதாசன்_-இரா.நடராசன். தொகுப்பாசிரியர்கள்: சு.சீனிவாசன், எஸ்.ஜனார்த்தனன், இரா.கேசவமூர்த்தி. இந்நூலில் வெளியாகியுள்ள ஓர் அய்ய வினா: நிலாவின் மறுபக்கத்தைக் காணமுடியுமா? இதற்கான விடை இந்நூலில் இவ்வாறு வெளிவந்துள்ளது. நிலவானது தன்னைத்தானே சுற்றுவதில்லை. எப்போதுமே பூமிக்குத் தன் ஒரு பக்கத்தையே காட்டுகிறது. -_ (நூல்: பக். 50) சரியா? தப்பா? இவ்விடையின் இரண்டாம் […]

மேலும்....

ஒருமுறை செய்தால் அடுத்ததும் சிசேரியன் தானா?

சிசேரியன் அறுவை சிகிச்சை குறித்த நம் மக்களிடம் நிலவி வரும் சில மூடநம்பிக்கைகளும், அது குறித்த மருத்துவ விளக்கங்களும்

 

மூடநம்பிக்கை 1: அறுவை சிகிச்சை செய்தபின்னர் தண்ணீர் குடித்தால் புண் சீழ் பிடிக்கும் : இந்த மூட நம்பிக்கை எப்படி வந்தது என்று தெரியவில்லை. ஆனால் இதுதான் பல பிரச்சினைகளுக்கும் அடிப்படையாக அமைந்துவிடுகிறது.

தண்ணீர் குடிப்பதற்கும் புண் சீழ் பிடிப்பதற்கும் சிறிதும் தொடர்பு கிடையாது. அதே போல் தையல் பிரித்த பின்னர் குளிக்கலாம்.

தாய்க்குத் தண்ணீரே தராமல் இருப்பதால் வரும் பிரச்சினைகள் பல. அதில் முக்கியப் பிரச்சினை தாய்ப்பாலின் அளவு குறைய வாய்ப்புள்ளது.

மேலும்....

புனைப்பெயரில் திரியும் ஜனநாயகம்

அழுதுகொண்டிருந்தான் அவன்.
யாரும் கவனிக்கவில்லை!
பரட்டைத் தலை
அழுக்கான முகம்
வருவார் போவோரெல்லாம்
அடித்த வாசனைத் திரவியம்
ஆறியும் ஆறாமலும்
உடல் முழுவதும் தீப்புண்கள்
சிகரெட்டால் சுட்ட வடுக்கள்
அங்கங்கே வெட்டுக் காயங்கள்

சில சமயம்
புதுச் சட்டையோடு அரண்மனையிலிருப்பான்
பல சமயம்
கிழிந்த சட்டையோடு தெருவிலிருந்தான்

மேலும்....

மேலே இருப்பவர்களுக்குப் போர் தெரியாது

கடல் மட்டத்திற்கு இருபத்தைந்தாயிரம் அடி உயரத்தில் ஒரே சீரான வேகத்தில் பறந்து கொண்டிருந்த சிறீலங்கா விமானமான யூ.எல்.130இல் குடும்பத்துடன் பயணித்துக் கொண்டிருந்தேன். விமானத்தின் உள்ளே நிலவிய அமைதியைத் தடுத்து பயண அறிவிப்பு ஒலிக்கலாயிற்று. டியர் பாசஞ்சர்ஸ், திஸ்சிஸ் க்ரு கேப்டன் ராம் முத்துக்கிருஷ்ணன், தௌ வி ஆர் கெட்டிங் ரெடி பார் லாண்டிங் இன் பிரேமதாச இன்டர்நேனஷல் ஏர்போர்ட் கொழும்பு. திருச்சியிலிருந்து புறப்பட்டு அரை மணி நேரம்கூட ஆகியிருக்காது. கொழும்புவின் கடற்பரப்பின் மேல் விமானம் மெல்ல வளைந்து […]

மேலும்....