சர்வ சாதாரண சரடுகள்!

கேள்வி : ராமர் பாலத்தை உடைக்காமல் சேது சமுத்திரத் திட்டத்தை நடைமுறைப்படுத்த பா.ஜ.க. அரசு முயற்சிக்கும் என நிதின்கட்கரி கூறியுள்ளது திட்டத்தினை முழுமையாக முடக்கும் சதித்திட்டம் இல்லையா? – நாத்திகன், பெரம்பலூர் பதில் : இராமன் பாலம் என்பது கற்பனையான கட்டுக்கதை. ஆடம்ஸ் பிரிட்ஜ் என்ற மணல் திட்டுகள். இந்த ஆறாம் வழித்தடத்தை -_ அதாவது இராமன் பாலம் என்று கூறப்படும் மணல் திட்டு _ பாறைகள் உள்ள வழித்தடத்தை-, வாஜ்பேயி அரசினால் நியமிக்கப்பட்ட ஆய்வில்(நாகபுரி நீரி […]

மேலும்....

மத்திய அமைச்சரவையில் மாமிசம் கூடாது!

மிகவும் அமைதியாக ஒரு மாற்றம் டில்லியில் நடந்ததிருக்கிறது, அமைச்சரவை நிகழ்ச்சிகளில் இனிமேல் அசைவம் கிடையாது என்பதுதான் அது. இந்தச் செய்தி பலருக்குத் தெரியாது. அமைச்சரவைக் கூட்டம் என்பது பார்ப்பனர்களின் யாகமேடை கிடையாது. அமைச்சரவைக் கூட்டத்தின் போது பல்வேறு மாநிலங்களில் உள்ள அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொள்வார்கள். அவர்களின் உணவு முறை அசைவத்துடன் சேர்ந்ததாக இருக்கலாம். மேற்கு வங்கப் பார்ப்பனர்கள்கூட மீன் இல்லாமல் சாப்பிடமாட்டார்கள். அப்படி இருக்க அமைச்சரவை நிகழ்ச்சிகளில் அசைவ உணவை நிறுத்தியது ஏன்? இதுவரை யாரும் கேள்வி கேட்கவில்லை. தமிழ்நாட்டிற்கு வருவோம். இங்கு என்ன நடக்கிறது? ஒரு பத்திரிகை அலுவலகம் அசைவ உணவு கொண்டு வருவதால் சைவம் சாப்பிடும் மற்றவர்களுக்கு அருவருப்பாக இருக்கிறதாம். ஆகையால் இனிமேல் அலுவலகத்திற்கு யாரும் அசைவ சாப்பாடு கொண்டுவர வேண்டாம் என்று கூறி அனைத்துப் பணியாளர்களுக்கும் சுற்றறிக்கை விட்டு, அலுவலக தகவல்பலகையிலும் ஒட்டிவிட்டனர். பொதுவாக ஊடக அலுவலகங்களில் அசைவம் கொண்டுவருவதை பல பத்திரிகை நிறுவனங்கள் நேரடியாக இல்லாமல் மறைமுகமாகத் தடுக்கின்றன.

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்….

புலிநகம் நூல்: சிவாஜி முடிசூட்டலும் பார்ப்பனீயமும்!ஆசிரியர்: அறிஞர் அண்ணாவெளியீடு: திராவிடர் கழக (இயக்க) வெளியீடுசென்னை – 600 007.தொலைப்பேசி: 044-26618163பக்கங்கள்: 56    விலை: ரூ.25/- 1946 அன்று இபுராகீமுக்கு, இந்து தேச சரித்திரத்தைப் போதிக்கிறார் சுந்தரேச அய்யர்! அப்சல்கானின் பெரும்படையைக் கண்ட அஞ்சா நெஞ்சன் சிவாஜி, என்ன செய்தான்? அப்சல்கானைத் தனியாகச் சந்திக்க வேண்டுமென்று கூறினான். பூஜபூரான் வந்தான்; அவனைத் தழுவுவதுபோல சிவாஜி நடித்து தன் கரத்திலே வைத்திருந்த புலிநகத்தால் கீறிக் கொன்றான் என்று வரலாற்று ஆசிரியர் […]

மேலும்....

ஃபாண்ட்ரி – குறிதவறாது எறியப்பட்ட கலைக் கல்

– கை. அறிவழகன்

ஜாதி குறித்த பெருமிதமும், உயர் நம்பிக்கையும் உங்களுக்கு இருக்குமேயானால் இந்தத் திரைப்படத்தின் கடைசிக் காட்சியில் நீங்கள் திரையரங்கிலிருந்து வெளியேறி விடுவது நல்லது. ஏனெனில், இந்தப் படத்தின் இயக்குனரான நாகராஜ் பொப்பட்ராவ் மஞ்சுளே குறிபார்த்து உங்கள்மீது கல்லெறிவார். உயர்ஜாதி மனநிலையின் மீதும் ஜாதிய ஒடுக்குமுறைகளின் மீதும் அவர் எரிகிற அந்தக் கல் உங்களுக்கு மிகுந்த வலியை உண்டாக்கக்கூடும்.

இந்தியத் திரைப்படங்களில் ஜாதியை உள்ளீடு செய்வதோ, ஜாதிய ஒடுக்குமுறைகளை கவிதையைப் போல கலைநுட்பத்தோடு சொல்வதோ அத்தனை எளிதானதன்று. ஆனாலும் ஒரு கவிதையைப் போல இந்தத் திரைப்படத்தைச் செதுக்கி திரைப்படக்கலை சமூக அவலங்களை உரக்கச் சொல்லும் உயர் தொழில்நுட்பக் கருவி என்று சமகால இயக்குனர்களுக்குச் சவால் விடுத்திருக்கிறார்.

மேலும்....