இவ்விடம் அரசியல் பேசலாம்

இவ்விடம் அரசியல் பேசலாம் – கல்வெட்டான் சலூன்கடை சுந்தரம் ஏதோ தீவிர சிந்தனையில் இருந்தார். அந்நேரம் அங்கே வந்த வாடிக்கையாளர் மதியழகன், “என்ன நண்பரே தீவிர சிந்தனையில் இருக்கறாப்புல தெரியுதே?” எனக் கேட்க, “இப்பல்லாம் வியாபாரமே டல்லடிக்குது சார். பேசாமல் இந்தத் தொழிலை விட்டுட்டு சாமியாரா போயிடலாம்னு தோனுது!” என்றார் சுந்தரம். “அட, அதான் இப்போ நம்ம முதல்வரே ஷேவிங் பண்ணத் தொடங்கிட்டார்ல, இனி தொழில் பழையபடி பிக்-அப் ஆகிடும்!” “அதேதான் சார்! என்னவோ பெரிய துக்கம் […]

மேலும்....

ராஜம் கிருஷ்ணன்

ஒரு பெண் அடிமைத்தனத்திலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் என்று எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனிடம் ஒரு பேட்டியின்போது கேட்கப்பட, அவள் தன் மதத்தைவிட்டு வெளியேற வேண்டும். எல்லா காலகட்டங்களிலும் ஒரு பெண்ணை மதத்தின் கோட்பாடுகள் அடிமையாகவே வைத்திருக்கின்றன  (அவள் விகடன்) என்றவர் அவர். தனது எழுத்துகளில் புதுமைக் கருத்துகளைப் புகுத்தி, பெண்ணுரிமைக் காகக் குரல்கொடுத்தவர். கடந்த மாதம் அவர் தனியார் முதியோர் காப்பகம் ஒன்றில் மறைவுற்றார் என்ற செய்தி மூலம் கவனத்தில் கொள்ளவேண்டிய சமூகப் பிரச்சினை ஒன்றை […]

மேலும்....

கதறக் கதறக் கட்டிய தாலி!

  வேண்டாம்…. வேண்டாம்… என்று கதறக் கதற ஒரு பெண்ணுக்குத் தாலி கட்டி திருமணம் நடத்திய காட்சி ஒன்று அண்மையில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது. ஏதோ தனியாகச் சென்ற பெண்ணுக்கோ, ஆளில்லாத இடத்திலோ நடந்தது அல்ல. கர்நாடக மாநிலம் தும்கூரில் அண்மையில் ஒரு திருமண மண்டபத்தில் உறவினர்கள் கூடி அமுக்கிப் பிடித்துக் கொள்ள மணமகள் வேண்டாம் வேண்டாம்மா என்று கதற, மணமகன் தாலி கட்டுகிறார். இந்தக் காட்சியை டிவி9 தொலைக்காட்சி ஒளிபரப்பியது. (https://www.youtube.com/watch?v=McW9Rm5TUdE) விருப்பமில்லாத ஒருவருக்கு வலுக்கட்டாயமாக […]

மேலும்....

எது தமிழ்த் திருமணம் – 8

வாழ்க்கை ஒப்பந்தமே

– சு.அறிவுக்கரசு

இந்துமதத்தில் செய்யப்படும் திருமணங்கள் எல்லாமே புனிதப்பூட்டுகள் (Sacrament). இந்தப் பூட்டுகளைத் திறக்கக்கூடாது. வாழ்வின் இறுதிவரை இல்லறக் கட்டடம் பூட்டப்-பட்டேதான் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறது இந்துமதம். இந்த நியதி பார்ப்பனப் புரோகிதர் நடத்திவைக்கும் சமஸ்கிருத மொழிச் சடங்குத் திருமணத்திற்கும் பொருந்தும். தமிழ்ப் புரோகிதர் நடத்திவைக்கும் தமிழ்மொழிச் சடங்குத் திருமணத்திற்கும் பொருந்தும். மேலைநாட்டிலே நடைபெறும் திருமணங்களைப்போல, கிறித்துவ, இசுலாமிய திருமணங்களைப்போல ஒப்பந்தம் (Contract) அல்ல.

மேலும்....

பகவான் பிரசாதம் (லட்டு) தொடர்பான விளம்பரத்தில் மறைத்தது ஏன்?

திருப்பதி கோவில் அண்மையில் லட்டு விளம்பரமொன்றைச் செய்தது. திருப்பதி லட்டிற்கு புவிசார் காப்பீடு பெறுவதற்காக உலகம் முழுவதிலும் உள்ள பக்தர்கள் ஆதரவினைத் தரவேண்டுமாம். அதாவது, 300 ஆண்டு பாரம்பரியமிக்க திருப்பதி லட்டு காப்பீடு பெறுவதற்கு உங்களது ஆதரவு தேவை. 100 கிலோ மைதா மற்றும் கடலை மாவு, பத்து டன் அஸ்கா(சீனி), 700 கிலோ முந்திரிப்பருப்பு, 180 கிலோ ஏலக்காய், 500 லிட்டர் பசும்நெய், 500 கிலோ கற்கண்டு, 540 கிலோ உலர் திராட்சை மற்றும் 150 […]

மேலும்....