ஆசிரியர் பதில்கள்

கேள்வி : மகாராஷ்டிரா மற்றும் அரியானாவில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தல்களில் பா.ஜ.க.வின் வெற்றிக்கு காங்கிரசு ஆட்சிகள் மீது ஏற்பட்ட கடுமையான எதிர்ப்பு அலை தான் காரணம் என்பதுதானே உண்மை? நாத்திகன் சா.கோ., பெரம்பலூர்

பதில் : 1. அடிப்படையான காரணம் காங்கிரசின் மீது – அங்கே ஆட்சியில் இருந்த நிலையில் (தொடர்ந்து) ஏற்பட்ட வெறுப்பு – எதிர்ப்பு.

2. மும்பையில் குஜராத்தி வியாபாரிகளின் திட்டமிட்ட பணச்செலவு, மற்ற வேலைகள். (இதனால்தான் ஒரு எம்.எல்.ஏ., குஜராத்திகள், மஹாராஷ்டிரத்தி-லிருந்து வெளியேறினால் மஹாராஷ்டிர மாநிலம் சுத்தமாகி விடும். என்று பேசியுள்ளார்.)

3. காங்கிரசின் உட்கட்சி கோஷ்டி சண்டை.

4. தேசியவாதக் காங்கிரசின் முறிவு  இத்தியாதி.

மேலும்....

காட்டிக் கொடுக்கும் புளூ-டூத்

மழை, வெயில் இரண்டுக்கும் பாதுகாப்புத் தருவது குடை என்றாலும், மழை பெய்யும்போதுதான் பெரும்பாலோர் குடையைப் பயன்படுத்துகிறோம். நண்பர்கள், உறவினர்கள் வீட்டிற்கோ அல்லது வெளியிடங்களுக்கோ செல்லும்போது மழை பெய்தால் எடுத்துச் செல்லப்படும் குடை, அங்கிருந்து திரும்பும்போது மழை பெய்யவில்லை என்றால் குடையை எடுத்துவர நிறையப் பேர் மறந்து விடுவ துண்டு. அப்படி மறந்துபோன குடையை அல்லது பிறரால் திருடப்படும் குடை இருக்கும் இடத்தைக் காட்டிக் கொடுக்கும் கருவியினை அமெரிக்க நிறுவனம் ஒன்று கண்டுபிடித்துள்ளது. அமெரிக்க நிறுவனத்தாள் குடையில் செல்பேசியில் […]

மேலும்....

புதுப்பாக்கள்

”டொக் டொக்” புருஷன் வீடுதான்இனி உனக்கு எல்லாமேபல்லிழந்த வாயிலிருந்துஉதிர்ந்து கொண்டிருந்ததுகிழவியின் வார்த்தைகள்.எல்லோரையும்அனுசரிச்சு நடந்துக்கணும்உடைந்த குரலைசரிசெய்து சொன்னார் அப்பா.சரிசரி நேரமாச்சி…வேகப்படுத்தினான்அண்ணன்.குளமான கண்கள்நெஞ்சத்தில் பதற்றம்மகளைக் கட்டியணைத்தஅம்மாவுக்குஅழுகையே வார்த்தையானது.ஆழ அகலமாய்வேர் பரப்பிய மரமொன்றைகோடாரி கொண்டுஅப்புறப்படுத்திக் கொண்டிருந்தார்கள்பக்கத்து வீட்டில்.டொக்… டொக்…டொக்… டொக்…டொக்.. டொக்…– பா.சு.ஓவியச்செல்வன் ———————— இந்து மதம் நீதியற்ற ஜாதியைப்பாதுகாக்கும் வேலையைவாளெடுத்த மன்னர்களின்மூளைகளில் நட்டுவைத்தவேதியரின் சூதுதான்இந்துமதம் என்பது.* * *கூடி வாழ்ந்த மக்களைகூறு போட்ட ஜாதியைஉயர்வு தாழ்வுப் பிரிவினைஉயர்ந்த தென்ற சதியினைநம்ப வைத்த ஆரியத்தின்நால்வருண சூழ்ச்சிதான்வேதங்களில் வேர்பிடித்தசனாதனம் என்பது – அ. […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில் …. தொடர் 118

பகுத்தறிவாளர்கள் ஆக்குங்கள்! விடுதலை  இதழில் 28.03.1978 அன்று மாணவர் பிரச்சாரப் பயிற்சிப் பள்ளி தொடங்குவது குறித்து அறிக்கை ஒன்று வெளியிட்டேன். அதில், கல்லூரி மாணவர்கள் _ இளைஞர்கள் இதில் கலந்து கொள்ளுவது குறித்து விளக்கிக் குறிப்பிட்டிருந்தேன். கொள்கைப் பிரச்சார பயிற்சிப் பள்ளி திராவிடர் கழகம் நடத்துகின்றது என்றால் அதற்கென்று ஒரு தனி முத்திரை உண்டு. தந்தை பெரியார் அவர்களே நேரடி மேற்பார்வையிலே அனேக பிரச்சார பயிற்சிப் பள்ளிகளை நடத்தி இருக்கிறார்கள். இன்றைக்கு பல்வேறு அரசியல் முகாம்-களிலே தலைசிறந்த […]

மேலும்....

துளிச் செய்திகள்

சூரிய சக்தியில் இயங்கும் சோலார் இம்பல்ஸ்2 (எஸ்அய்2) என்ற விமானம் தயாரிக்கப்பட்டு 2015 மார்ச் அபுதாபியிலிருந்து புறப்பட்டு உலகைச் சுற்றிவரத் திட்டமிடப்பட்டுள்ளது. மூளைப் புற்று நோயைக் குணப்படுத்தும் குருத்தணுவை (ஸ்டெம் செல்) இந்திய_அமெரிக்க மருத்துவ ஆய்வாளர் காலித் ஷா தலைமையிலான குழு உருவாக்கியுள்ளது. பன்னாட்டு விண்வெளி ஆய்வு நிலையத்-திற்குத் தேவையான பொருள்களை ஏற்றிச் சென்ற அமெரிக்காவின் ஆளில்லா சரக்கு ராக்கெட் அண்டாரெஸ் கிளம்பிய சில வினாடிகளில் தீப்பிடித்து வெடித்துச் சிதறியது. வங்க தேசத்தின் அரசியல் தலைவர் ரஹ்மான் […]

மேலும்....