நிழற்கொடை

குரங்கினைப் போல்சிறுவர் கூட்டம்ஏறி, ஆடி விளையாடிய மரம்நான்குகால் சீவன்களோடுஇரண்டுகால் மனிதர்களும்நிழலுக்கு ஒதுங்கிய மரம்பாதுகாப்பான இடமென்றுபறவைகள் கூட்டம்குடிலமைத்த மரம்காமக் கூத்தையும் காதலெனச் சொல்லி கட்டியணைத்து முத்தமிடஒத்துழைத்த மரம்வெளியூர்க்காரர்கள் விருந்தாளிகளாய் வீடுசெல்லஅடையாளம் காட்டிய மரம்அய்ந்தறிவுக்கும் ஆறறிவுக்கும்அரும்பசி தீர்க்கஅமுதமான பழம் தந்த மரம்மண்ணின் பசுமைக்கும்மழையின் வருகைக்கும்மூலதனமாய் நின்ற மரம்உயிருள்ளபோது உறவாகவும்,உயிரற்றபோது விறகாகவும்உடல் பொருள் ஆவி என தந்த மரம்நகராட்சியின் நகர்தலால் நகர்ந்துமீண்டும் நிழற்கொடையானதுகட்டடங்களால்! – சீர்காழி கு.நா.இராமண்ணா

மேலும்....

இந்தியச் சமுதாயம் பற்றி ஆப்பிரிக்கப் பாதிரியார்

டெஸ்மாண்ட் டுடு நோபல் பரிசு பெற்றவரும் தென் ஆப்பிரிக்காவின் நிற வேற்றுமை எதிர்ப்பாளருமான ஆர்ச்பிஷப் டெஸ்மாண்ட் டுடு, தான் அம்பேத்கரைப் பற்றிக் கேள்விப்பட்டதில்லை என்று இந்து நாளிதழ் நிருபரிடம் கூறியுள்ளார். இந்திய அரசியல் சட்ட வரைவுக் குழுவின் தலைவராக அம்பேத்கர் பங்கு பெற்று இருந்தார் என்பதை அறிந்தவுடன் டுடு மகிழ்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தார். மகாத்மா காந்திக்குச் செலுத்திய கவனத்தை நிற வேற்றுமைக்கு எதிராகப் போராடும் ஆப்பிரிக்கத் தலைவர்கள், அம்பேத்கர் மீது ஏன் செலுத்தவில்லை என்று டுடு-விடம் கேட்கப்பட்டது. […]

மேலும்....

பொய்யுரைக்கு மறுப்பாக ஒரு மெய்யுரை

தமிழ்மொழி பெரியாரின் பார்வை என்ன? – கி.தளபதிராஜ் தஞ்சையில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தந்தை பெரியார் படம் வைக்கப்படாதது பற்றி எழுந்துள்ள விமர்சனங்கள் குறித்து தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பெ.மணியரசன்  தனது தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். முள்ளிவாய்க்கால் முற்றத்தில் வைக்கப்பட்டிருப்பவை தமிழகத் தலைவர்களின் படங்கள் அல்ல. அவை மறைந்த தமிழறிஞர்களின் படங்கள். பெரியார் தமிழறிஞர் அல்லர் என்று குறிப்பிட்டுள்ளார். பெரியார் தமிழறிஞரா? இல்லையா என்கிற வாதம் இருக்கட்டும். ஈழத்தில் நடைபெற்றது […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில் … -109

எங்கள் பயணம் என்றும் நிற்காது

மத்திய நிர்வாகக் கமிட்டி நடப்பதற்கு முன்பாக, அம்மா அவர்களை அடக்கம் செய்துவிட்டு வந்த துயரம் சூழ்ந்த மனநிலையில் நான் ஆற்றிய முதல் உரை இதோ:

அய்யாவின் லட்சியங்களை நிறைவேற்றுவோம்! அம்மா அவர்கள் பாடுபட்டதை மனதில் கொள்வோம்!

மேலும்....

பள்ளிக்கூடம்

– பள்ளபட்டி கா.காளிராசன் பவுர்ணமி நிலவு மகள், மேகத் திரைக்குள் மறைந்துகொண்டு இருந்தாள். கந்தசாமிக்குத் தூக்கம் வரவில்லை, புரண்டு புரண்டு படுத்துப் பார்த்தான். அவனது இமைகள் மூட மறுத்தன. அவனது மகனின் எதிர்காலம் அவனை வாட்டி வதைத்தது. இதுவரை பள்ளிக்கூடம் பக்கமே சென்றதில்லை, எப்படி டவுன் பள்ளிக்கூடத்தில் போய் மகனைச் சேர்ப்பது என்கிற அச்சமே, அவனது மனதை ரணமாக்கியது. கந்தசாமி சிறுவயதாக இருக்கும்போது, உற்சாகமாய் தொடக்கப் பள்ளிக்குச் சென்று வந்தான். ஒன்றாம் வகுப்பில் நன்றாகப் படித்தான். மூன்றாம் […]

மேலும்....