”ஆடி வெள்ளி” கருக்கிய அரும்புகள்!

”ஆடி வெள்ளி” கருக்கிய அரும்புகள்! அறிவுவழி சிந்திப்பார்களா ஆசிரியர்கள்? பள்ளி நிறுவனருக்கு ஆயுள் தண்டனையும் (மொத்தம் 940 ஆண்டுகள்), 8 பேருக்கு 5 ஆண்டுகள், ஒருவருக்கு 2 ஆண்டுகள் தண்டனையும், 11 பேருக்கு விடுதலையும் கொடுத்து 2014 ஜூலை 30 அன்று தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 2004ஆம் ஆண்டு கும்பகோணம் சிறீகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில் நடந்த தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்த வழக்கில்தான் மேற்கண்ட தீர்ப்பு வழங்கப்பட்டது. 2004-ஆம் ஆண்டு ஜூலை […]

மேலும்....

உரிமையும் பொறுப்பும்

இன்று நம் நாட்டில், எங்கு பார்த்தாலும் பஞ்சம், பட்டினி என்கிற முழக்கம் வளர்ந்து கொண்டே வருகிறது. இதைத் தொடர்ந்து மக்கள் சமுதாயத்திலே நாணயக்குறைவும் யோக்கியக்கேடும் மலிந்துவிட்டன. சுதந்திரம் பெற்றோம் என்று சொல்லிக்கொள்ளத் தலைப்பட்ட பிறகு, ஒருவரை ஒருவர் எப்படி ஏமாற்றுவது? எந்த மாதிரியான வேஷம் போட்டால் எப்படியெல்லாம் சுரண்ட முடியும்? என்கிற போக்கும், எந்த அயோக்கிய வேலைகளையும் செய்யலாம் என்கிற துணிச்சலும் பொதுவாகச் சமுதாயத்தில் வலுவாக வளர்ந்திருக்கின்றன. சட்டங்களுக்கு ஒரு மதிப்போ, சமுதாய ஒழுங்குக்கு ஒரு மரியாதையோ இன்று நம் நாட்டில் பெரும்பாலும் இல்லையென்றே சொல்லிவிடலாம்.

மேலும்....

கடவுள் இருந்தால்….!

கடவுள் நம்பிக்கையாளர்கள் பலரும் நம்பும் கடவுளின் முக்குணங்கள், முத்தன்மைகள் – மனித சக்திக்கு மேற்பட்டதாக கூறப்படுவன. (1)    சர்வ சக்தி – எல்லாம் வல்லவன். (2)    சர்வ வியாபி – எங்கும் நிறைந்த பரம்பொருள். (3)    சர்வ தயாபரன் – கருணையே வடிவானவன். உள்ளபடியே அப்படிப்பட்ட தன்மைகள் அக்கடவுளர் – கடவுளச்சிகளுக்கு உள்ளனவா என்று எந்த பக்தராவது புத்திகொண்டு சிந்திக்கின்றனரா? ஆராய்கின்றனரா? இல்லையா? வெறும் நம்பிக்கை அதுவும் குருட்டு நம்பிக்கைதானே. அதனால்தான் பக்தி வந்தால் புத்தி போகும், […]

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

இராசாராம் மோகன்ராய் வேதங்களின் கருத்துகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தபோது, தங்களைத் தவிர வேறுயாரும் அதைப் படிக்கக் கூடாது என்று காரணம் காட்டி, பார்ப்பனர்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....

தங்கத் தமிழன்

வெள்ளத்தணைய மலர்நீட்டம், எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் -இந்த இரண்டும், தமிழர்கள் மனவளத்தை (தன்னம்பிக்கையை) ஆண்டார்கள் என்பதற்கான கல்வெட்டுகளாகும். அந்த வழியில், வெற்றி பெற்றால் தங்கம்தான் _ என்ற தன்னம்பிக்கையுடன் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்று, தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா _ என்று தானும் நிமிர்ந்து, தமிழனையும் நிமிரச் செய்திருக்கிறார், சத்துவாச்சேரியைச் சேர்ந்த சதீசுகுமார்.

மேலும்....