சீறு சுமந்த சாதிசனமே ஆறு கடந்தா ஸ்கூலு வருமே…

வளர்ச்சி… பெப்பே…ப்பே..

சீறு சுமந்த சாதிசனமே ஆறு கடந்தா ஸ்கூலு வருமே…

– லெனின் (முகநூலிலிருந்து)

வளர்ச்சி நாயகன் நரேந்திர மோடியை முதல்வர் பதவியிலிருந்து பிரதமர் பதவிக்கு புரமோஷன் தந்த குஜராத் மாநிலத்தில் நாள்தோறும் அரைமணி நேரம் தண்ணீரில் நீந்திப் பள்ளிக்குச் செல்கிறார்கள் நூற்றுக்கும் மேற்பட்ட மலைஜாதி மாணவ/-மாணவியர். சீர் சுமப்பதுபோல தங்கள் புத்தகங்களையும் சீருடைகளையும் தனித்தனிக் குடத்திற்குள் போட்டு, அவை நனையாமல் பத்திரமாக ஆற்றைக் கடந்து பள்ளிக்குச் செல்கிறார்கள்.

மேலும்....

எரியும் எண்ணெய் பூமி – குறுந்தொடர் -3

  தற்போது ஈராக்கில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? அய்எஸ்அய்எஸ் (Islamic State of Iraq and Syria) எனும் அமைப்பு, பாக்தாத்திற்கு வடமேற்கே உள்ள மோசுல் நகரத்தைப் பிடித்துவிட்டது. சிரிய எல்லைப்பகுதியில் உள்ள அன்பர் மாகாணத்தின் தலைநகர் திக்ரித்-தையும் பிடித்துவிட்டது. பகுபா, பைஜி நகரங்களில் கடும் சண்டை நடைபெறுகிறது. ஈராக்கியர் என்ற தோற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன், அபுபக்கர் அல்-பாக்தாதி என்று புனைபெயர் சூட்டிக்கொண்ட, இப்ராஹிம் அவ்வாத் இப்ராஹிம் அலி அல்-பட்ரி தலைமையில், மேற்கு ஈராக்கிலிருந்து, வடஆப்பிரிக்கா வரை […]

மேலும்....

எது தமிழர் திருமணம்? (2)

நாளாம்! நாளாம்! திருநாளாம்!

– சு.அறிவுக்கரசு

பெண்ணுடன் உடல்உறவு கொள்வதற்கும் திருமணம் செய்து கொள்வதற்கும் தேவைப்பட்டால் பொய் சொல்வது குற்றமல்ல என்பது ஆரியர் பண்பாடு. ஆகவேதான் ஆயிரம் பொய் சொல்லியாவது கல்யாணம் செய் என்றே எழுதி வைத்திருக்கிறார்கள். இப்பேர்ப்பட்ட கேவலப் பண்பாடு தமிழர்க்கும் உடையதானது என்று ஆக்கிவைத்து விட்டார்கள். அவர்களது திருமண முறையையும் தமிழர் திருமணம் என்றாக்கி விட்டார்கள்.

மேலும்....

ஆயிரங்காலத்துப் புன்னகை

– கோவி.லெனின்

காயத்ரி மந்திரத்தைச் சொல்லிக் கொண்டிருந்தாள் ஊர்மிளா. எதிர்வீட்டு கௌசல்யா போல அவளுக்கு ஸ்பஷ்டமாகச் சொல்ல வரவில்லை. பழக ஆரம்பித்து இரண்டு நாட்கள்தானே ஆகிறது, போகப்போக கௌசல்யா போல சொல்ல முடியும் என்ற நம்பிக்கை ஊர்மிளாவுக்குக் கூடிக்கொண்டே இருந்தது. அதைவிட, தன் அம்மாவின் உடல்நிலை விரைவில் சீராகிவிடும் என்ற எண்ணம் அவளுக்கு அதிகமாக இருந்தது.

மேலும்....

புதுப்பாக்கள் :

பன்றி அவதாரம் எடுத்த கடவுள்… பைரவர் வாகனம் நாய்மாடு புனிதம்மிருகங்களிடம்கருணை காட்டும் இந்து மதம்தாழ்த்தப்பட்டவரை மனிதனாக அல்லமிருகமாகக்கூட மதித்ததில்லைபன்றி அவதாரம் எடுத்த கடவுள்தலித் அவதாரம் எடுத்ததே இல்லை.ஆனாலும் மகாத்மாகூச்சமில்லாமல் சொன்னார்தாழ்த்தப்பட்ட மக்களேகடவுளின் குழந்தைகள்ஹரிஜன் – வே.மதிமாறன்     உறுதியான கேள்வி! இல்லையென்ற பதில்அளவுக்கதிகமாய்உறுதியாய்சொன்ன பிறகுதான். ஏன்? என்ற கேள்வியும்அளவுக்கதிகமாய்உறுதியாய்கேட்கத் தோன்றியது! ***முரண்கோவிலுக்குள்புகைப்படம் எடுத்தால்ஆகம விரோதம் கண்காணிப்புக் கேமரா வைத்துபடமெடுத்தால்ஆகாதோ விரோதம்! – கற்பனைப்பித்தன், பெரம்பலூர்.

மேலும்....