மூடநம்பிக்கைக்கு எல்லையே இல்லையா?

அண்மையில் (3.7.2014) நாளிதழ்களில் புதியதாக ஒரு மூடத்தனம் பற்றிய செய்தி வெளிவந்துள்ளது.

திருநெல்வேலி நகரத்தில் வாழும் 60 வயது முதியவருக்குப் பேய் பிடித்திருப்பதாகக் கூறிய மந்திரவாதி, அந்தப் பேயை ஓட்டுவதற்காக முதியவர் தலையில் மூன்று அங்குல நீளமுள்ள துருப்பிடித்த ஆணியை அடித்துள்ளார். வலியால் துடித்த அவருக்கு வலி நிவாரணி மாத்திரைகளைக் கொடுத்திருக்கிறார்கள். சில நாளில் முதியவருடைய இடது கையும், இடது காலும் செயலிழந்து போகவே, அவரைப் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளார்கள். அங்கு அந்த முதியவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும்....

சதாம் வில்லனானது எப்படி?

குறுந்தொடர் – 2

எரியும் எண்ணெய் பூமி

– ப.ரகுமான்

சதாம் வில்லனானது எப்படி?

இன்றளவும், கச்சா எண்ணெய் விலை டாலரில் நிர்ணயிக்கப்படுவதன் மூலம், அமெரிக்கப் பொருளாதாரம் அளவு கடந்த ஆதாயங்களை அடைகிறது. இதுதவிர, டாலரின் மதிப்பில் ஏற்படும் ஏற்ற-இறக்கம், அமெரிக்கர்களுக்கு மட்டும் எண்ணெய் விலையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

மேலும்....

ஏழை நாடு

இந்தியா – இந்த நிலையில் ஏழை நாடு உலக நாடுகளில் உள்ள கடைக்கோடி ஏழைகளில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியாவில் வசிப்பதாகவும், உலக அளவில் மரணமடையும் அய்ந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் இந்தியக் குழந்தைகளே அதிகம் என்றும் அய்.நா. மில்லினியம் மேம்பாட்டு லட்சியங்கள் என்ற அமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் 60 விழுக்காடு இந்தியர்கள் திறந்தவெளியில் மலம் கழிப்பதாகவும், பேறுகால இறப்புகளில் 17 விழுக்காடு இந்தியாவில்தான் நிகழ்வதாகவும் கூறியுள்ளது, மேலும், தெற்காசிய நாடுகளில் மிகப்பெரியதும் அதிக மக்கள்தொகை […]

மேலும்....

சர் ரோஜர் பென்ரோஸ்

நாத்திக அறிவியலாளர் சர் ரோஜர் பென்ரோஸ் –   நீட்சே ஆங்கிலேயரான சர் ரோஜர் பென்ரோஸ் ஒரு கணித இயல்பியலாளரும், கணித இயலாளரும், அறிவியல் தத்துவ இயலாளரும் ஆவார். ஆகக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின்  கணித நிறுவனத்தில் கணித எமிரடஸ் ரவுஸ் பால் பேராசிரியராகவும், வாட்ஹாம் கல்லூரியின் எமிரிடஸ் ஃபெலோவாகவும் இருந்தவர் இவர். கணித இயற்பியலில் ஆற்றிய அரும் பணிக்காக நன்கு அறியப்பட்டவரான பென்ரோஸ் விண்வெளியியல் மற்றும் பொதுவான தொடர்புத் தத்துவத்திற்கு அளித்த பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும். பிரபஞ்சத்தைப் பற்றி நாம் அறிந்திருப்பது […]

மேலும்....

நாடார்களின் ஆலய நுழைவுப் போராட்டம்

சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் நடைபெற்ற மிகப் பெரிய புரட்சி இது என்று தினத்தந்தி 8.7.2014 இதழில் திரு.வி.கே.ஸ்தாணுநாதன் அவர்கள் மதுரை வைத்தியநாத அய்யரைப் புகழ்ந்து தாழ்த்தப்பட்டவர்களை முதன்முறையாக கோவிலுக்கு அழைத்துச் சென்றார், என்று பதிவு செய்துள்ளார். அதற்குத் தக்க பதிலடியாக, …உண்மை வரலாறு என்ன? என்று சுயமரியாதை இயக்கத்தின் கோவில் நுழைவுப் போராட்டங்களையும் அதை மழுங்கடிக்க ராஜாஜி _ வைத்தியநாதய்யர் கூட்டணி நடத்திய கபட நாடகத்தையும் எடுத்துக்காட்டி 12.7.2014 விடுதலை ஞாயிறு மலரில் மானமிகு […]

மேலும்....