அசுரர் (திராவிடர்) அழிப்புதான் தேவர் (ஆரியர்) வேலையா?

– கி.வீரமணி தேவாசுர யுத்தம் என்று புராணங்களில் வருகின்றனவே அவைபற்றி தந்தை பெரியார் அவர்கள் தமது சுதந்திர சிந்தனை மூலம் மக்களுக்குத் தெளிவுபடுத்திப் பேசியும் எழுதியும் வந்துள்ளார்கள். தேவர் _அசுரர் போராட்டம் என்பது கடந்த பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நடந்துவரும் ஆரியர்_திராவிடர் போராட்டம் என்பதுதான். அக்காலத்தில் அவர்கள் தேவர்கள் என்று அழைக்கப்பட்டனர்; இன்னும் பார்ப்பனர்கள் பூதேவர்கள் என்று அழைக்கப் படுகின்றனரல்லவா? அசுரர்கள் என்றால் எளிதில் விளங்கிக் கொள்ள, சுரபானத்தைக் குடித்தவர்கள்_சுரர்கள் பூமியில் வாழுபவர்களுக்கு பூசுரர்கள் என்ற பெயர் உண்டு. […]

மேலும்....

நீர்ப் பசி

– கோவி.லெனின் மாப்ளே.. வந்தது வந்துட்டோம்டா.. காசு கூட குறைச்சு ஆனாலும் பரவாயில்லை. அதுவரைக்கும் போயிட்டு வந்துடுவோம்டா ஆமான்டா.. அதுவரைக்கும் போகலைன்னா, இவ்வளவு தூரம் நடந்து வந்தததுக்குப் பிரயோஜனமே இருக்காதுடா -காணும் பொங்கலுக்காக திருவாரூரிலிருந்து பிச்சாவரம் வந்திருந்த நண்பர்கள் கூட்டத்துக்குள்தான் இந்தப் பேச்சு. காலையில் பஸ் பிடித்து மயிலாடுதுறை, சிதம்பரம் என மாறி மாறி வந்தபிறகு, சிதம்பரத்திலிருந்து கிளம்பிய டவுன்பஸ் அந்த 10 பேரையும் கிள்ளையில் இறக்கிவிட்டுவிட்டு புழுதியைக் கிளப்பியபடி போய்விட்டது. அங்கிருந்து நடராஜா சர்வீசில் மொட்டை […]

மேலும்....

தூங்காதே தமிழா தூங்காதே!

– பேராசிரியர் தொ.பரமசிவன் பார்ப்பனியம் எங்கே சார் இருக்கிறது? அதெல்லாம் செத்துப் போய் நெடுநாட்களாகிவிட்டன. பிராமணர்கள் நம்மோடு கலந்து விட்டார்கள் என்கிற குரலை இப்போதெல்லாம் பல இடங்களில் கேட்கமுடிகிறது. இந்தக் குரலுக்கு உரியவர்கள் நடுத்தர வர்க்கத்தினர்தான். அறிவுஜீவிகள் என்று தங்களை நம்பிக் கொண்டிருப்பவர்களும் இவர்கள்தான். இவர்கள் சொல்ல வருவது என்ன? பெரியாரியம் காலாவதி ஆகிவிட்டது என்பதுதான். ஆனால், தன்னுணர்ச்சியோடு பார்ப்பனியத்தை இவர்கள் கணித்துப் பார்க்கத் தவறிவிட்டார்கள் என்பதுதான் உண்மை. இந்த நாட்டின் குடியரசுத் தலைவர் இராணுவ ரகசியங்கள் […]

மேலும்....

தரணிக்கு தமிழர் தந்த கொடை

– மஞ்சை வசந்தன் புத்தாண்டும், பொங்கலும் தமிழர் விழாக்கள் என்று குறுக்கிச் சுருக்கிச் சொல்லக்கூடாது. அவை தரணிக்குத் தமிழர் தந்த கொடை; தரணி முழுமைக்கும் ஏற்றது, உரியது. தமிழர் உருவாக்கியது என்று சொல்லலாம். மாறாக, அது தமிழர்க்கு மட்டும் உருவாக்கியது அல்ல. தமிழர் வாழ்வும், சிந்தனையும், கலையும், ஆய்வும், பண்பாடும், நாகரிகமும், மொழியும், மருத்துவமும் தமிழர்க்கு மட்டுமே உரியவை அல்ல. அவை உலகிற்கே உரியவை; உலகு உள்ளளவும் உகந்தவை. யாதும் ஊரே யாவரும் கேளிர், இது தமிழர்க்கு […]

மேலும்....

ஹெய்ல் ஹிட்லரய்யங்கார் – டான் அசோக்

அந்தச் சிறுவனுக்கு அகோரப் பசி. முதலாம் உலகப்போரில் அந்த நாடு வஞ்சிக்கப்பட்டதில் இருந்து பசி அவர்கள் நாட்டில் மூச்சுவிடுவதைப் போன்ற அன்றாட நிகழ்வாகிவிட்டது. இரண்டு வாய் சூப்புக்காக 3 மணி நேரம் வரிசையில் காத்திருக்கும் கொடுமை அந்தச் சிறுவனை வாட்டியது. எவ்வளவோ சாதித்த இனம். எவ்வளவோ பெருமைகள் வாய்ந்த இனம். ஏன் இப்படி வரிசையில் நின்று பிச்சையெடுத்துக் கொண்டிருக்கிறது என அவன் மூளை அவனது இதயத்திற்கு சதா தந்தி அனுப்பிக் கொண்டிருந்தது. வரிசையில் நின்று நின்றே நண்பனாகிக் […]

மேலும்....