‘நச்’ன்னு ஒரு கருத்து

ஆசிரியர் தினத்தன்று பிரதமர் மோடியின் உரையை  மாணவர்கள் கட்டாயம் கேட்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு, பள்ளிகளில் மாணவர்கள் கட்டாயமாக இருத்திவைக்கப்பட்டனர். இந்தியில் மோடி ஆற்றிய உரையிலிருந்து தப்பி, விவரமான மாணவர்கள் விளையாட்டுத் திடலுக்கும், கழிவறைகளுக்குமாக ஓடிவிட்டனர். மிச்சமிருந்த மாணவர்கள் தூங்கி வழிந்தபடி அமர்ந்திருந்தனர். தென்மாநிலங்கள் முழுவதும் இது தான் நிலைமை என்று பக்கம் பக்கமாக ஏடுகள் படம்பிடித்திருக்கின்றன. அவற்றையெல்லாம் ஒரே ஒரு காட்சியில் காட்டியது போல் இருக்கிறதல்லவா, கர்நாடகாவில் எடுக்கப்பட்ட இந்தப் படம்? இனி, வாய்ப்பு உங்களுக்கு! […]

மேலும்....

பெரியார் வாழ்வில்….

நம் பிள்ளைகள் அரசுப் பணிக்குப் போகவேண்டும் தென்மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தந்தை பெரியாருக்கு உதவியாளராக வந்து பணியாற்றிக் கொண்டிருந்தார். இந்நிலையில் அந்த இளைஞருக்கு அரசுப் பணி வாய்ப்பு வந்து, அதற்கான ஆணையும் கிடைத்தது. அந்த ஆணையை எடுத்துக்கொண்டு இளைஞரை அழைத்துச் செல்ல அவருடைய உறவினர் வந்திருந்தார். ஆனால் அய்யாவுக்கு உதவியாக இருப்பதே தனக்குப் பெரிதும் மகிழ்ச்சி என்றும், அய்யாவுடனிருக்கும் வாய்ப்பைத் தான் இழக்க விரும்பவில்லை என்றும் அந்த இளைஞர் அரசுப் பணியை மறுக்கும் எண்ணத்தை வெளியிட்டார். இதனை […]

மேலும்....

நனவாகுமா? நீதிபதிகள் கேள்வி

பதவியேற்றவுடன் 2500 கோடி ரூபாயை கங்கையைச் சுத்தப்படுத்த ஒதுக்கப்(!) போகிறோம் என்றது பா.ஜ.க. அரசு. கங்கை நதியைச் சுத்தப்படுத்துவது தொடர்பாக நீங்கள் (மத்திய அரசு) தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தை ஆய்வு செய்து பார்த்தால் இன்னும் 200 ஆண்டுகள் ஆனாலும்கூட கங்கையைச் சுத்தப்படுத்துவது என்பது ஒரு கனவுத் திட்டம். மாசில்லாத சுத்தமான கங்கையை நம்மால் பார்க்க முடியுமா? முடியாதா? என்று தெரியவில்லை என சவுக்கைச் சுழற்றியிருக்கிறார்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.தாக்குர், ஆர் பானுமதி ஆகியோர்.

மேலும்....

ஜாதி – தனி மனித வழிபாடு – பெண்ணடிமை தமிழ் சினிமா: எங்கே செல்லும் இந்தப் பாதை?

  – கை.அறிவழகன் வணிகப் பின்னலும், முதலாளித்துவச் சிந்தனைகளும் கலந்து திரைப்படம் என்கிற ஊடகமே இன்னொரு வணிகப் பொருளாகவும், பண்டமாகவும் மாறி விட்டிருக்கிறது. கலைச் சேவை அல்லது நுண்கலை முயற்சி என்று திரைப்படத் துறையில் இயங்கும் யாரையும் அத்தனை எளிதில் அடையாளம் காண்பது அரிது. கடந்த காலங்களில் மிகப்பெரிய வணிக வெற்றியையும், அடையாளங்களையும் பெற்ற இயக்குனர்களே திரைப்படத் துறையின் அடுத்த கட்ட வளர்ச்சியையும், போக்கையும் முடிவு செய்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட அமைப்பில் உருவாக்கப்பட்ட திரைப்படம் வணிக அளவில் […]

மேலும்....

மேலே இருப்பவர்களுக்கு போர் தெரியாது(2)

சென்ற இதழின் தொடர்ச்சி

நாங்கள் பயணித்த வாகனம் மெல்ல அலைகடலை நோக்கியிருந்த பெரிய கட்டிடம் ஒன்றின் முன்வாசல் பகுதியை அடைந்தது. ஹோட்டலின் பெயர் மாடியின் உச்சிப் பகுதியில் பொறிக்கப்பட்டிருக்க வேண்டும். எல்லா நட்சத்திர விடுதியின் அழகையும், சுத்தத்தையும் அதுவும் கொண்டிருந்தது. பளபள கிரானைட் தரைகள், உச்சியில் தொங்கும் சர விளக்குகள், தூணுக்குத் தூண் அலங்காரங்கள், ஆங்காங்கே பித்தளைத் தொட்டிகளில் அலங்காரச் செடி வகைகள் ஒட்டுமொத்தக் குளிர்சாதன வசதி, மெல்லிய இசை எல்லாவற்றிற்கும் நடுவே எப்பொழுதும் புன்னகைக்கும் வரவேற்பாளர்கள் என எல்லாமே கச்சிதமாக இருந்தது.

மேலும்....