தமிழனா-தெலுங்கனா? தமிழனா-உருது இஸ்லாமியனா?

தமிழ் மண்ணில் வெள்ளையனை எதிர்த்து வீரப் போர் புரிந்ததினால் தூக்கிலிடப்பட்டான் கட்டபொம்மன். அந்த வீரனின் பிறந்த நாள் ஜனவரி 3 என்று ஒரு நம்பிக்கை இருக்கிறது. ஆனால், அவர் தமிழரல்ல, தெலுங்கர் என்கிறார்கள், பச்சைத் தமிழர்கள். கட்டபொம்மனை வெள்ளையனுக்குக் காட்டிக் கொடுத்த புதுக்கோட்டை மன்னன் ராஜாதி ராஜா ராஜகுல விஜயரகுநாத தொண்டைமான், பச்சைத் தமிழன்தான். கட்டபொம்மன் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டார் என்பதற்காக அவர் தியாகத்தைத் தள்ளி வைப்பதும், தமிழன் என்பதற்காக புதுக்கோட்டை மகாராஜாவின் துரோகத்தைக் கொண்டாடவும் […]

மேலும்....

அய்யா இல்லாத வெற்றிடம்…!

– கவிஞர் விக்ரமாதித்யன் அன்று ஞாயிற்றுக்கிழமை; காலை டூட்டி முடிந்து, பஜார் பக்கமுள்ள அடைத்த கடை வாசலில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன்; எதிரே, சுவரொட்டியில், தந்தை பெரியார் பேசுகிறார் என்றிருந்தது; சின்ன நோட்டீஸ்தான்; படம் கூட இல்லை. சென்னையில், 62 தேர்தலின்போதும் அதற்கு முன்பும் அண்ணா, நாவலர், கே.ஆர்.ராமசாமியிலிருந்து எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர். வரையிலும் எல்லோருடைய மேடைப் பேச்சையும் கேட்டிருக்கிறேன்; அய்யா பெரியார் பேச்சுக் கேட்க வாய்ப்புக் கிடைக்கவில்லை; சாயுங்கால டூட்டி முடிந்ததும் போய்விட வேண்டியதுதான். திரளான […]

மேலும்....

அவாளும் நம்மாளே?

– மதிமன்னன் தமிழர்தம் மொழியையும் வாழ்வையும் கலையையும் அறிவையும் அழித்தது ஆரியமே. ஆரியத்தின் அழிம்புகளை ஆதாரத்தோடு நாம் எடுத்துக்காட்டி எண்பித்தால் ஏற்க மறுத்திடும் ஏமாளிகளாக நம் மக்கள் இன்னமும் இருக்கின்றனர். எதிர்த்தும் பேசி விதண்டாவாதம் செய்கின்றனர் பார்ப்பனர் திருந்திவிட்டனர் என்கின்றனர் சிலர். இன்னும் சிலரோ, அவரைத் தனித்துப் பிரித்துச் சுட்டக்கூடாது என்றும் அவாளும் நம்மாளே என்கின்றனர். பார்ப்பனரும் தமிழரே என்கின்றனர். எப்படியாம்? பார்ப்பனர் திராவிட இனத்தவரா? தமிழர் திராவிட இனத்தவர். தமிழ்மொழி திராவிட மொழிகள் 40இல் ஒன்று. […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில் … -110

அம்மாவின் மறைவுக்குப் பின் எனது “விடுதலை” பொறுப்பு

அம்மா அவர்கள் மறைந்து அய்ந்து நாட்கள் ஆகிய நிலையில் 21.03.1978 முதல் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் என்ற முறையில் விடுதலையின் ஆசிரியராகவும், பிரசுரதாரராகவும் கொண்டு திராவிடன் அச்சகத்தில் எண்.2, ரண்டால்ஸ் ரோடு, வேப்பேரி, சென்னை – 600 007 இலிருந்து அச்சிடப்படும் என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

மேலும்....

கருப்பு என்பது வெறும் நிறமல்ல!

கலை என்பது சமுதாயத்தின் கண்ணாடி. சமூக அவலங்களுக்கு எதிரான ஆயுதம்.  மனிதர்களிடையே நல்லுறவை வளர்க்கும் உணர்வு. இந்த அடிப்படையில் உருவாக்கப்பட்டிருப்பதுதான், கருப்பு கலைக் குழுமம் (Karuppu Art Collective). கருப்பு என்பது வெறும் நிறமல்ல. அது வெளிச்சத்திற்கு முந்தைய புள்ளி. உணர்வை வெளிப்படுத்தும் வண்ணம். மனிதத் தோலின் நிறத்தை நிர்ணயிக்கும் மெலனின் தன்மை. தாயின் வயிற்றில் உள்ள கரு. எல்லாவற்றுக்கும் மேலாக ஜனநாயகம் தந்துள்ள உரிமையின் அடிப்படையில் வெளிப்படுத்தும் எதிர்ப்பின் அடையாளம். இவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் கருப்பு […]

மேலும்....