ராஜராஜன் மேல் மரியாதை இல்லை!

கேள்வி: தஞ்சாவூரில் பத்து ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறீர்கள். பெரிய கோவிலுக்குப் போயிருக்கிறீர்களா? பதில்: பெரிய கோவிலின் புல்வெளியில் இருக்கும் புல் ஒவ்வொன்றும் என்னை அறியும். ஆனால், ராஜராஜன் மேல் மட்டுமல்ல, எந்த மன்னன் மேலும் எனக்கு மரியாதை இல்லை. இன்னொரு நாட்டின் மேல் படையெடுத்து, அந்நாட்டு மக்களின் அமைதியைக் கெடுத்து, பெண்களை அடிமையாக்கி, பொருள்களைக் கொள்ளையடித்து வாழ்ந்த மன்னர்கள் என்பவர்கள் கிரிமினல்கள். அவர்கள் புகழப்படுவது, தவறு. பிரமாண்டமாக ஒன்றைச் செய்வது (கோவில் கட்டுவதுபோல), மக்கள் வரிப்பணம் ஊதாரித்தனமாகச் செலவழிக்கப்பட்டது […]

மேலும்....

கதையல்ல…

இன்னும் இருக்கிறார்கள்இப்படியும் மனிதர்கள் இடம் : நுங்கம்பாக்கம்நேரம் : மதியம் 1.30 மணிநாள் : வியாழக்கிழமை அலுவலகத்துக்குச் சென்றுகொண்டிருந்தேன். சம்மந்தமே இல்லாமல் அந்த நேரத்திற்குக் கடும் போக்குவரத்து நெரிசல். மழை வேறு தூறிக் கொண்டிருந்தது. ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரி முன்பாக சிக்னலில், என் பக்கத்தில் 50 வயது மதிக்கத்தக்க பச்சை நிறச் சட்டை அணிந்த நபர், கருஞ்சிவப்பு நிற சேலையும், கனமான நகைகளும் சூழ அமர்ந்திருந்த அவரின் 40 வயது மதிக்கத்தக்க மனைவி இருவரும் ஹீரோ ஹோண்டாவில் […]

மேலும்....

சிறுகதை – சேமிப்பு

சிங்காரத்திற்கு அன்று மனசே சரியில்லை, மிகவும் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தார், வாழ்க்கை இப்படி தன்மீது மட்டும்தான் சூறைக் காற்றையும் சுனாமியையும் ஏவி விடுகிறதா? தான் அப்படி யாருக்கும் எந்தத் தீங்கும் இழைக்கவில்லையே, பிறகு தனக்கு மட்டும் ஏன் சோதனை மேல் சோதனையாகத் தொடர்கிறது என தன்னைத்தானே நொந்து கொண்டிருந்தார். வானம் லேசாகத் தூறத் தொடங்கியிருந்தது. கொஞ்சம் வேகமாய் வீசத் தொடங்கிய காற்றில், அந்தப் புளிய மரம் அவர் மீது பூவையும் இலைகளையும் தூவிக் கொண்டிருந்தது. மழை பெருசா புடிச்சிரும் […]

மேலும்....

விருதுகள் இப்படி

தயான் சந்த் என்பவரைத் தெரியுமா? விளையாட்டுத் துறைக்கு பாரத ரத்னா விருது கொடுப்பதில்லை என்று தயான் சந்த்தை நிராகரித்த இந்திய அரசுதான் இன்று சச்சின் டெண்டுல்கரைத் தேடிக் கொடுக்கப்போவதாக அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக ஒரு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் பதிவாகியுள்ளது. இது ஒருபுறம் இருக்க, யார் அந்த தயான் சந்த் என்பதைப் பார்க்கலாம். விதிகளை மாற்றி விளையாட்டுத் துறைக்கு பாரத ரத்னா வழங்கப்படும் என்றால் முதல் விருது தயான் சந்த்துக்குத்தான் தரப்பட வேண்டும் என்கிறது அவரது சாதனைப் […]

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில கவிதைகள்

துளிரத் தொடங்கும் எங்களுக்கான தேசம்! நூல்: வண்ணங்களை விழுங்கிப் பெருத்திருக்கும் இருட்டு ஆசிரியர்: ரகசியன்  |  செல்பேசி: 9445182142 வெளியீடு: பொன்னி,2/1758, சாரதி நகர், என்ஃபீல்டு அவன்யூ, மடிப்பாக்கம், சென்னை-91 பக்கங்கள்: 88  |  விலை: ரூ.60/- ஒருவரியேனும் உங்களோடு சேர்ந்து வாக்களிக்கிறேன்உங்களோடு சேர்ந்து திரைப்படம் பார்க்கிறேன் அவ்வப்போதுஉங்களோடு சேர்ந்து மது அருந்துகிறேன் உங்கள் விரல்களில் இருக்கும் வெண்சுருட்டைபோதை நிறைந்த அப்பொழுதில்புகைக்கவும் செய்கிறேன்என்பதினால்நீங்களாக நான் எப்போதும் ஆனதில்லை என்றாவது மலர்கள் மொழிந்ததுண்டாஉங்களிடம்?நிலவின் இதழ் உங்கள் கன்னம்தீண்டியிருக்கிறதா? இப்பெரிய […]

மேலும்....