அய்யாவின் அடிச்சுவட்டில்.. – 105

எம்.ஜி.ஆர். நிறுவிய பெரியார் சிலை

ஈ.வெ.கி.சம்பத் மறைவு – அம்மா அவர்கள் இரங்கல்

தமிழ்நாடு காங்கிரசின் துணைத் தலைவராக இருந்த தோழர் ஈ.வெ.கி.சம்பத் அவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு சென்னை அரசு பொது மருத்துவமனையில் இருதய நோய் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு பிரபல டாக்டர்களால் சிகிச்சையளிக்கப்பட்டு உடல் நலம் தேறி வந்தார்.

மேலும்....

தமிழ்நாடும் புதுவகையில் இந்தித் திணிப்பும்

இங்கே தரப்பட்டுள்ள படத்தைப் பாருங்கள். இடப் பக்கத்தில் உள்ள படம் அது இந்தியாவில் உள்ள மாநிலங்களில் ஒன்றான மத்தியப் பிரதேசம். இரு மொழிக் கொள்கையைக் கையாளும் அந்த மாநிலத்தில் ஆட்சிமொழியான இந்தியும் ஆங்கிலமும் பயன்பாட்டில் உள்ளன. வலதுபக்கத்தில் உள்ள படம் தமிழ்நாடு. இருமொழிக் கொள்கையைக் கையாள்வதாகக் கருதப்படும் மாநிலம். நடுவண் அரசின் மொழிக்கொள்கையினால், தமிழ் மட்டும் எழுதப் படிக்கத் தெரிந்தவன், தமிழ்நாட்டுக்குள்ளேயே முடக்கப்படுகிறான்; இந்தி மட்டும் எழுதப் படிக்கத் தெரிந்தவன் நாடுமுழுவதும் சுற்றுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. 1965இல் […]

மேலும்....

கற்றதனால் ஆன பயன்

அந்தப் பேருந்து சென்னையிலிருந்து திருவாரூருக்கு விரைந்து சென்று கொண்டிருந்தது. சாலை வளைந்து வளைந்து இருப்பதால் பேருந்தின் ஓட்டத்திற்குத் தகுந்தவாறு அதிகாலை நேரக் காற்று சிலுசிலுவென்று வீசிக் கொண்டிருந்தது. ஓவியாவையும் பேருந்து ஓட்டுநரையும் தவிர நடத்துநர் உள்பட அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். குமாரவேல் ஓவியாவின் தோளில் சாய்ந்திருந்தான். திருமணமாகி நாலாவது நாள் குமாரவேலின் ஊருக்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள். ஓவியா M.Sc., B.Ed. படித்துவிட்டு, சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள தந்தை பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து கொண்டிருந்தவள். […]

மேலும்....

வறுமையில் முதலிடம் மோடியின் குஜராத்

நாட்டிலேயே அதிகமாக வறுமையில் வாடுபவர்கள் குஜராத் மாநிலத்தில் வசிக்கிறார்கள் என்பதை சமீபத்திய ஆய்வு ஒன்று தெளிவுபடுத்தியது. குஜராத்தில் நர்மதா பள்ளத்தாக்கில் இருந்த 2 இலட்சம் பேர் அரசால் வெளியேற்றப்பட்டதால் இன்று மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் பிச்சை எடுத்துக் கொண்டு பிளாட்பாரங்களில் தூங்கிக் கொண்டு உள்ளனர். மோடியைப் போன்றவர்கள் நாட்டை ஆண்டால் என்னவாகும்! – ஹர்ஷ் மந்திர், அய்.ஏ.எஸ்.

மேலும்....

புதுப்பா

காசா? கடவுளா? காசியில் இருக்கும் கடவுளுக்கும்காசினியில் வாழும் மனிதனுக்கும்காசுமட்டும் இருந்தால் ஏகமதிப்பு!காசுமட்டும் இல்லாவிடில் ஏதுமதிப்பு! கடவுளுக்கும் காசுக்கும் ஓட்டம்கண்டுகழிக்க மானுடக் கூட்டம்காசிடம் கடவுள் தோற்கிறதுகாசைத்தான் அதுகள் ஏற்கிறது (பிச்சையெடுத்தல்) காசுபணம் பறிப்பதற் காகவேகற்பனைக் கடவுள்களை விதைத்தனர்விண்ணையும் மண்ணையும் காட்டியேவிற்பனையில் மனிதநேயத்தைப் புதைத்தனர் காசுபொருள் இருக்கும் கோவிலில்கடல்போல் மனிதக் கூட்டம்காசில்லா கோவில் என்றாலேகாணலையே மக்கள் நடமாட்டம் – மின்சாரம் வெ.முருகேசன், விருதுநகர்

மேலும்....