ராகுல் காந்திககு சில கேள்விகள்

எனது பாட்டியைக் கொன்ற பேயந்த் சிங், சத்வந்த் சிங் ஆகியோர்  மீதான கோபம் தணிய எனக்கு சுமார் 15 ஆண்டுகள் ஆனது. பஞ்சாப் மக்கள் அப்போது கோபமாக இருந்தார்கள். இப்போது தணிந்துவிட்டது. சில மாதங்களுக்கு முன் பஞ்சாபிலிருந்து என்னைப் பார்க்க சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் வந்தார். திரும்பிப் போவதற்கு முன் என்னைப் பார்த்து 20 ஆண்டுகளுக்கு முன் உங்களைச் சந்தித்திருந்தால் கொன்றிருப்பேன். அப்போது கோபமோ கோபம். இப்போது கோபம் தணிந்துவிட்டதாகக் கூறி என்னைத் தழுவிக் கொண்டார். கோபம் […]

மேலும்....

இதுதான் பார்ப்பனீயம்!

திருவாளர் சோ என்று ஒருவர் இருக்கிறார். நடுநிலைக்கே அவர்தான் குத்தகைதாரர் என்று பார்ப்பன ஊடகங்களால் முடிசூட்டப் பட்டவர். நம்ம சூத்திர முண்டங்கள் சிலதுகளும் இதனை வழிமொழிவதுண்டு. இரட்டைநாக்குப் பேர்வழியான இந்தப் புளுகுணி தன் இனத்தின் நலனை மட்டுமே முன்னிறுத்திப் பேசும்; எழுதும். பல நூறுமுறை இதன் பார்ப்பனக் குள்ளநரித்தனத்தை நாம் தோலுரித்திருக்கிறோம். இதோ இது அண்மையில் நடந்தது. அக்டோபர் 18 அன்று பா.ஜ.க.வைச் சேர்ந்த நரவேட்டை மோடி சென்னை வந்திருந்தார். சென்னைப் பல்கலைக் கழக மண்டபத்தில் வடநாட்டு […]

மேலும்....

விதவையர்க்கும் மரியாதை!

– கர்நாடகத்தில் ஓர் மாற்றம்!

கோவில் கருவறைக்குள் பெண்கள் நுழையவே அனுமதியில்லாத நம் நாட்டில் விதவைப் பெண்களான இந்திரா சாந்தி, லட்சுமி சாந்தி என இருவர் அர்ச்சகராகியுள்ளனர்.

மேலும்....

புதுமை இலக்கிய பூங்கா

செவ்வாயுலக யாத்திரை – புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் நாங்கள் ஆறு நண்பர்களும் திட்டம் போட்டபடி எங்கள் ஆகாய விமானத்தை செவ்வாயுலகத்தை நோக்கி முடுக்கினோம். அது பறந்துபோய் குறித்த இடத்தை அடைந்தது. மனிதர்கள் சிவப்பு நிறமுடையவர்கள்; நம்மினும் சிறிது உயரமுடையவர்கள். இந்த இரண்டு அம்சங்கள் தவிர செவ்வாயுலகத்தவர் எல்லா விஷயத்திலும் நம்மையொத்தவர்களே. ஆனால் அம்மனிதர்களனைவரும் எப்போதும் தங்கள் தலையின்மேல் ஒரு பெரிய கல்லைச் சுமந்தபடி இருந்தார்கள். எங்கள் விமானம் செவ்வாயுலகத்தில் ஒரு கிராமத்தின் வயற்புறத்தில் இறங்கிற்று. நாங்கள் முதலிற் […]

மேலும்....