ஆசிரியர் பதில்கள்

கேள்வி : முஸ்லீம் தீவிரவாதியை 4 ஆண்டுகளில் தூக்குக்கயிறில் தொங்கவிட்ட மத்திய அரசு பாபர் மசூதியை இடித்த இந்துத் தீவிரவாதிகளைக் கண்டுகொள்ளவில்லையே? _ குமார் முருகேஷ், அன்னவாசல் பதில் : இதுதான் புரியாத புதிராக பலருக்கும் உள்ளது; 40 லட்ச ரூபாயில் ஜஸ்டிஸ் லிபரான் கமிஷனின் அறிக்கை செல்லரித்துக் கொண்டிருக்கிறது! பதில் :முற்போக்காளர் அமைப்புகளும், இதுகுறித்து நியாயம் கேட்டு ஆர்ப்பாட்டம், போராட்டம் பல நடத்தியும் இன்னமும் சட்டம் குறட்டைவிட்டுக் கொண்டுள்ளது. காங்கிரஸ் கட்சியும் காவிமயமாகி விட்டதோ என்ற […]

மேலும்....

களப்பிரர் ஆட்சி இருண்ட காலமா?

களப்பிரர் ஆட்சியால் தமிழகத்தில் விளைந்தவை யாவை? அமைதி கெட்டது; கலகங்கள் தோன்றின; மக்கள் வாழ்க்கை சீர்குலைந்தது; தமிழ் மரபு நூல்கள் அழிந்தன போன்ற குற்றச்சாட்டுகளே களப்பிரர் ஆட்சியைப் பற்றிக் கூறப்படுகின்றன. சைவத்தில் நாட்டம் கொண்டவரே இத்தகைய குற்றச்சாட்டுகளைக் கூறுகின்றனர். களப்பிரரால் தமிழ்க் கழகம் அழியவில்லை. ஏற்கெனவே கழகக் காலம் முடிந்து, கழகமருவிய காலம் தொடங்கியிருந்தது. களப்பிரர் வேற்று மொழியினர்; சமண, சாக்கிய சமயங்களைப் பின்பற்றியவர்கள்; அவர்கள் தமிழகத்தில் ஆளுமை பெற்ற போது இச்சமயங்கள் சாய்காலுடன் இருந்தன. ஆகவே, […]

மேலும்....

மாற்றம்

வயல்வெளிநிலங்களில்,வரப்புகள் விரிந்துசந்துகளானது,வாய்க்கால் சுருங்கிவாறுகால் ஆனது.நாற்று நட்டஇடங்களிலெல்லாம்நடு கற்கள்பாத்திகட்டியஇடங்கள்வீடு கட்டியநிலங்களாய்,உயிர்கள்அடைக்கலமானது,பயிர்களோஅடக்கமானது! -ஆல.தமிழ்ப்பித்தன், புனல்வேலி

மேலும்....

மனுதர்ம நீதியும் – கரிகாலன் நீதியும்

நீதிமன்றத்திற்கு அரசன் வர இயலாதபோது அரசனது இருக்கையில் பிராமணன் அமர்ந்து நீதி வழங்கலாம். அந்தப் பிராமணன் வேத விதிமுறைகளைக் கல்லாதவனாயினும் சரியே. மிகமிக இழிந்த பிராமணனாயினும் சரியே! அவன் எப்படிப்பட்டவனாயினும் அதுபற்றிக் கவலையில்லை! அவன் பிராமணனாயிருக்க வேண்டும். அவ்வளவுதான்! ஆனால் நான்காம் வருணத்தவன் (சூத்திரன்) அரசனது இருக்கையில் அமர்ந்து நீதி சொல்லக் கூடாது; அவன் அறிஞனே என்றாலும் சூத்திரன் ஆகையால் அரசன் சார்பாக நீதியுரைக்கக் கூடாது. “The judicial officer of a king must be […]

மேலும்....

இனம் : திராவிடம்

திராவிடம் என்னுஞ் சொன்மூலம் பழைய காலத்தில் நாட்டுப் பெயர்களும் மொழிப்பெயர்களும் பெரும்பாலும் அம் ஈறு பெற்றுத் தமிழில் வழங்கின. கா: ஈழம், கடாரம், சீனம், யவனம். தமிழம் _ த்ரமிள(ம்) _ த்ரமிட(ம்) _ த்ரவிட(ம்) _த்ராவிட(ம்) என்னும் முறையில், தமிழம் என்னும் சொல்லே திராவிடம் என்று திரிந்ததாகும். தமிழம் என்பது தமிள _ தவிள _ தவிட என்று பிராகிருதத்தில் திரிந்தபின்பு, தமிள தவிட என்னும் வடிவங்கள் த்ரமில, திரமிட, த்ரவிட என்று வடமொழியில் திரிந்ததாக, […]

மேலும்....