100கிலோ மூட்டையை தானே தூக்கும் அய்ம்பத்தைந்து வயது பெண்ணின் அதிசய உழைப்பு!

“பூ, காய்கறி, பாத்திரம் மட்டுமல்ல… சித்தமருந்துக் கடைகளின் குடோனில் உள்ள மூலிகை, வேர்வகைகள், மரப்பட்டைகள் அடங்கிய 100 கிலோ எடையுள்ள மூட்டைகளைக்கூட அய்ந்து கி.மீ. தூரத்துக்கு அப்பால் உள்ள லாரி செட்களுக்கு தனி ஆளாகச் சென்று ஏற்றி இறக்கி வருவேன்’’ என்று கூறும் சுசிலாமேரி. “திண்டுக்கல் அருகில் உள்ள கோமையம்பட்டி கிராமம்தான் பொறந்த ஊரு. வாக்கப்பட்ட ஊரு திண்டுக்கல் முத்தழகுபட்டி. வீட்டுக்காரர் ஜோசப். இப்ப என் இரண்டு பெண் பிள்ளைகளோட திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் எதிரில் […]

மேலும்....

நெசந்தானுங்க .

கடல்லயே இல்லையாம்! (இந்திய ஒலிம்பிக்கும், வண்டுமுருகன் ஜாமினும்) உலகெங்கும் ஒலிம்பிக் நாள் கொண்டாடப்படுகிறது. நீங்களும் கலந்து கொள்ளுங்கள்.. ஒலிம்பிக் அருங்காட்சியகத்தைப் பார்க்கும் வாய்ப்பை வெல்லுங்கள் அப்படின்னு ஒரு விளம்பரம். சரி, நாமளும்தான் என்ன போட்டின்னு போய்ப் பார்க்கலாமேன்னு பார்த்தேன். உங்களுக்குப் பக்கத்தில எங்க விழா நடக்குதோ, போட்டி நடக்குதோ அங்க போய் கலந்துக்கங்கன்னு போட்டிருந்துச்சு. சரி, நம்மளுக்குப் பக்கத்திலன்னா சென்னை இல்ல பெங்களூரு-வா இருக்கும்னு ஆவலா எடுத்துப் பார்த்தா… அடப் பாவிகளா… வஞ்சர மீன் இருக்குன்றான்… வால […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

கேள்வி : தமிழ்ப் பாடங்களில் இறை வாழ்த்துப் பாடல்கள் அவசியமா? இலக்கியப் பகுதியில் காப்பியங்கள், பக்திப் பாடல்கள் என்ற தனிப் பிரிவும் இருக்கிறது. அதே வேளையில் பாடத்தின் தொடக்கமாக இறைவாழ்த்தை வைப்பது தகுமா? எந்த மதம் என்பதை அடையாளப்படுத்தாமல் பொதுவாகக் கடவுள் என்றே அப்பாடல்கள் இருந்தாலும், இந்துமதத்தையொட்டிய பாடலாகத்தான் அவை அமைகின்றன. மத அடையாளமே இல்லாவிடினும் இறை வாழ்த்துகள் தேவையா?_ அ.பாவேந்தன், திருச்சி பதில் : தேவையே இல்லை; மதச்சார்பற்ற நாட்டில் கடவுள் என்பது மதத்தின் ஒரு […]

மேலும்....

புதுமை இலக்கியப் புங்கா ஓ மனிதா!

தமிழ் இலக்கிய உலகில் புதுமைச் சிந்தனையை விதைத்தவர்களுள் முக்கியமானவர்  விந்தன். இவரது பல படைப்புகள் மனிதனின் முரண்களை விமர்சிக்கும். சிந்தனையைத் தூண்டும் கேள்விகளைத் தொடுக்கும். படிக்க விறுவிறுப்பாகவும், காலம் கடந்தும் வாசிக்க இலகுவான எழுத்து நடையும் விந்தனுக்கே உரிய கைவந்த கலை.அவரது முத்திரை பதித்த இரண்டு படைப்புகள் இங்கே… குரங்கு கேட்கிறது மனம் ஒரு குரங்கு என்று சொல்லிக் கொள்வதோடு மனிதர்களான நீங்கள் நிற்பதில்லை; ஆதியில் என்னிலிருந்து வந்ததாகவே நீங்கள் சொல்லிக் கொள்கிறீர்கள். அதையும் சாதாரணமாகச் சொல்லிக் […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில் . . – (96)

சென்னையில் “சுயமரியாதைத் திருமண நிலையம்” உருவாக்கம் (Self Respect Marriage Bureau)

– கி.வீரமணி

 

சீர்திருத்தத் திருமணங்களில் இரண்டுவித சீர்திருத்தம் என்பது ஏற்பட்டிருக்கிறது. அவற்றுள் ஒன்று தமிழர் திருமணம், மற்றொன்று சுயமரியாதை அல்லது பகுத்தறிவுத் திருமணம் என்பதாகும். தமிழர் திருமணம் என்பது வகுப்பு உணர்சி காரணமாய் ஏற்பட்டது. சுயமரியாதைத் திருமணம் என்பது அறிவு ஆராய்ச்சியின் காரணமாய் ஏற்பட்டது என்று தந்தை பெரியார் அவர்கள் கூறுவார்கள்.

மேலும்....