ஈரோட்டுச் சூரியன் – 12

மணமானவள் என சமுதாயம் இனங் காணவேபெண்ணவள் கழுத்தில் கட்டப்படுகிறது தாலி; பெண்ணவளின் சுதந்திரத்தையும்ஆசைகளையும் சிறைப்பிடித்துஆணுக்குப் பெண் அடிமையெனமார்தட்டிக் கொண்டேயிருக்கும்அத் தாலி,மர்ம முடிச்சிட்ட மஞ்சள் நிற வேலி; தாலிதான் கணவனின் உயிரைத் தாங்கிப் பிடிக்கும் ஆயுதம்; அதுவேகணவனை வாழவைக்கும் ஆண்டுகள் ஆயிரம்; இப்படியானமுதுகெலும்பில்லாத மூடநம்பிக்கைகள்முக்கியத்துவம் பெற்றிருந்தன;மங்கையர் மனங்களும்அவற்றைக் கற்றிருந்தன; கணவனைக் காட்டிலும்தாலியின் மீதுபெண்டிர்  வைத்திருந்தமரியாதையும் பக்தியும்இராமசாமிக்கு ஆச்சர்யத்தை அளித்தது;தாலி வெறும் அடிமைக் கயிறு என இவர் சொல்லும்வார்த்தைகள்கேட்பவர்களுக்குப் புளித்தது; சமுதாயத்தில்சம்மணம் போட்டிருந்த சம்பிரதாயத்தைஅம்மணமாக்க முனைந்தார்இராமசாமி… சாதாரணப் பெண்டிரேதாலியைத் தெய்வமாகக் […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில் – (92) – கி.வீரமணி

இந்த ஆண்டு (1974) செப்டம்பர் 17 தந்தை பெரியார் அவர்கள் இல்லாத செப்டம்பர் 17 (1974). கடந்த ஆண்டு இதே தேதியில் இதே சென்னை மாநகரத்தில் தந்தை பெரியார் அவர்கள் தனது பிறந்த நாளில் அளவளாவிக் களித்த காட்சிகள் எல்லாம் நம் மனத்திரையில் காட்சி அணிவகுப்புகள் நடத்துகின்றன.

மேலும்....

மாற்றம்

வேதனை தரும் அந்தச் செய்தியைக் கேட்டதில் இருந்து நல்லசிவத்தின் இதயத்துடிப்பு வேகம் அதிகரித்துக் கொண்டே போனது. சில நேரங்களில் நெஞ்சை இடது கையால் பிடித்துக் கொண்டார். பரம்பரையா வாழ்ந்த இடம்… மன்னார்குடிக்கும் பட்டுக்கோட்டைக்கும் போடப்போற ரயில்வே பாதை குறுக்கே வர்றதால அரண்மனை மாதிரி இருக்கிற வீட்டை இடிக்கப் போறாங்களே… அது நடந்தா நான் செத்துடுவேன் கருப்பையா. வேலைக்காரன் கருப்பையனிடம் தன் மன பாரத்தை இறக்கி வைத்தார் நல்லசிவம். அய்யா மனசத் தளர விடாதீங்க. எல்லாத்தயும் அந்த வீதியோர […]

மேலும்....

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி : கச்சத் தீவை மீட்க சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளது நடைமுறையில் சாத்தியமாகுமா?_ எஸ்.கோவிந்தசாமி, பெரம்பலூர் ஆசிரியர் பதில் : கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்தது செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில்  திராவிடர் கழகம் சார்பில் போட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. முதல் அமைச்சர் அவர்களும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குப்போட்டு அதுவும் கிடப்பில் உள்ளது! வழக்குகள் சட்டப்படி வெற்றி பெற்றால் நிச்சயம் சாத்தியமாகும்! கேள்வி : முன்னாள் மத்திய அமைச்சர் […]

மேலும்....

கல்விச் சந்தை – மதிப்பெண் மட்டும் போதுமா?

– க.அருள்மொழி

சமச்சீர் கல்விக்காக சமர் பல நடத்தி உச்ச நீதிமன்றம் சமச்சீர் கல்விதான் வழங்க வேண்டுமென்று தீர்ப்புச் சொல்லி விட்ட பிறகும் அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் இடையே ஒரு பனிப் போர் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

மேலும்....