முற்றம்

நூல் நூல்    :    பாம்பின் கண் தமிழ் சினிமா ஓர் அறிமுகம் ஆசிரியர்    :    சு.தியோடர் பாஸ்கரன் தமிழில்    : லலிதானந் வெளியீடு    :    கிழக்கு பதிப்பகம், 177/103, முதல் தளம், அம்பாள் பில்டிங், லாயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை, சென்னை-_14தொலைப்பேசி    :    044_4200 9603பக்கங்கள்    :    280 விலை: ரூ.190. பல்வகை நவீனத் தொழில்நுட்பங்களுடன் நாம் இன்று திரையரங்குகளில் அமர்ந்து பார்த்து ரசிக்கும் தமிழ்த் திரைப்படங்களின் தோற்றமும், படிப்படியாகப் பெற்ற வளர்ச்சி நிலையும் விளக்கப்பட்டுள்ளது. தமிழ்த் திரையுலகின் […]

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்

பூசை : ஆகம ஆதாரங்கள் இல்லை நூல்: கோயில்கள் ஆகமங்கள் மாற்றங்கள் ஆசிரியர்:    நீதியரசர் ஏ.கே. ராஜன் வெளியீடு: சேது பப்ளிஷர்ஸ், ஷி – 79, அண்ணாநகர், சென்னை – 600 040. தொலைப்பேசி: 044 – 2626 7992 பக்கங்கள்: 88    விலை: ரூ.40/- ஆகம முறைகளும் வைதீக முறைகளும்: தெய்வங்களுக்கு உணவு படைக்கும்போது, உணவு வகைகளை நேரே தெய்வத்திற்குக் காட்டுவதால் (படைப்பதால்), அத்தெய்வங்கள் அவற்றை உண்டுவிடுவதாகக் கருதப்படுவது, செய்முறை வழக்கமாகும்.  அவை நிவேதனம், நைவேத்யம் […]

மேலும்....

ஜேம்ஸ் வாட்சன்

ஜேம்ஸ் வாட்சன் ஓர் உயிரியலாளர்; மரபுக்கூறு வல்லுநர்; டி.என்.ஏ. (D.N.A.) என்ற மரபு அணுவின் அமைப்பை பிரான்சிஸ் கிரீக் என்ற மற்றொரு அறிவியலாளருடன் சேர்ந்து 1953ஆம் ஆண்டு கண்டுபிடித்தவர். 1962ஆம் ஆண்டில், வாட்சன், கிரீக் மற்றும் மாரிஸ் வில்கின்ஸ் ஆகிய மூவருக்கும் சேர்த்து, உடலியலுக்கான (Physiology) நோபல் பரிசு கொடுக்கப்பட்டது. வாழும் பொருட்களில் (Living material)  செய்தி மாற்றங்களுக்கு நியூக்லிக் ஆசிட்டால் ஆன மோலிக்யூலியா அமைப்பும் அதன் குறிப்பிடத்தக்க செயல்பாடும் என்ற அவரது கண்டுபிடிப்புகளைப் பாராட்டி, அவருக்கு […]

மேலும்....

புதுப்பாக்கள்

காக்கும் கடவுள்? பெருத்துப் போய்கோயிலின்உண்டியல் வயிறுகள்,கசங்கிய கச்சையில்ஏழை பக்தனின்யாசக பிரார்த்தனை.ஆண்டாண்டு காலமாய்கல்லாகவே இருப்பதைஎப்படி நம்புவது ?காக்கும் கடவுளென்று ……. – செல்வன்   வேறுபாடு உண்டு கொழுத்தவன்திண்ணையைத் தேடுவான்ஊரை ஏய்ப்பவன்கோவிலை நாடுவான். – கவிமுகில்   வருமோ வாட்டம் பல தெய்வம் உண்டென்று பக்தராய் எங்கும் கூட்டம், அதில் குல தெய்வம் எமதென்று குடும்பம் குடும்பமாய் ஓட்டம் சில தெய்வம் உண்டென்று சிந்தனையில் இல்லை நாட்டம் உள தெய்வம் அறிவென்று உணர்ந்தால் ஒரு நாளும் வருமோ வாட்டம்! […]

மேலும்....

மன்றல்

இனியனும் அரசியும் ஒரே கிராமத்துவாசிகள். ஒரே பள்ளியில் படித்தவர்கள். நண்பர்களாய்ப் பழகியவர்கள். கல்லூரிதான் மாற்றம். நட்பில் மாற்றமில்லாச் சந்திப்புகள். இனியன் முதுகலைப் பட்டதாரி. வேலை தேடும் வேலை. இளங்கலைப் பட்டத்துடன் ஆசிரியப் படிப்பின் இறுதியாண்டு மாணவி அரசி. தேர்வு முடிந்த இறுதி நாள். தற்செயலாக, நேரமிருந்தால் வா என்று தனது இல்லத்திற்கு இனியனை அழைத்திருந்தாள். அழைப்பை ஏற்று வந்தான். பேசினார்கள்…. பேசினார்கள்….. படிப்பின் போக்குப் பற்றி, பணி தேடும் பணி பற்றி, தங்களின் நட்பின் ஆழம் பற்றித் […]

மேலும்....