தகவல்

கூகுள் பிறந்தது எப்படின்னு தெரியுமா? ‘கூகுள்’ – இந்த வார்த்தையை பயன்படுத்தாதவர்களையே காண முடியாது என்ற அளவுக்கு நமது அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாகி இருக்கிறது. எந்த சந்தேகமாக இருந்தாலும் கூகுளை நாடலாம். ‘கூகுளை நம்பினோர் கைவிடப்படார்’ என்றும் கூறலாம். பல்வேறு சந்தேகங்களுடன் தன்னை தேடி வருபவர்களை கூகுள் ஒரு நாளும் ஏமாற்றியதில்லை. பல சமயங்களில் நமக்கு ஆசானாக இருக்கும் கூகுள் தேடுபொறி அறிமுகமாகி 20 ஆண்டுகள் ஆகின்றன. ஸ்டேன்ஃபோர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த லேரி பேஜ் மற்றும் […]

மேலும்....

நூல் மதிப்புரை

நூல்: பார்வைபெற ஆசிரியர்: கவிஞர் கோ.கலைவேந்தர் பதிப்பகம்: தேங்கனி பதிப்பகம், 17, புதுநகர், குத்தாலம் – 609801 நாகப்பட்டினம் மாவட்டம், தொலைபேசி: 8940230310 பார்வை பெற… மனிதநேயச் சிந்தனைகளையும், பகுத்தறிவுக் கருத்துகளையும், பொதுவுடைமைச் சிந்தனைகளையும், கவிதை வரிகளின் மூலம் கொண்டு செலுத்தும் அருமையான படைப்பு. ‘பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்’, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, ‘வாடிய பயிரைக் கண்டு வாடினேன்’ என்னும் தமிழர்தம் வாழ்வியல் பண்பாட்டு மரபுநிலை குறித்துச் சிந்திக்க வைக்கிறது. மானுட வாழ்வில் கொள்ள வேண்டியவை எவை, […]

மேலும்....

பெண் விடுதலை : நான் கண்ட முதல் பெண்ணியவாதி!

நான் கண்ட முதல் பெண்ணியவாதி! கார்த்திகா, மருத்துவர், கோவை (தந்தை பெரியார் சிந்தனைகளைப் படித்த அளவில், இன்றைய தலைமுறையின் சிந்தனையில் எந்த அளவிற்கு மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதற்கு இக்கட்டுரையாளர் சான்று) நான், இவர் குடும்பத்தில் பிறக்கவில்லை, இவருக்கு உறவினரும் இல்லை, இவருடைய ஊரும் இல்லை, இவர் வாழ்ந்த காலகட்டத்தில் நான் வாழவுமில்லை. நான் வளர்ந்த சூழலில் ஒரு காந்தி, தாகூர் என்று சில தேசியத் தலைவர்களின் புகழ்ச்சி வரலாறுதான் பள்ளியிலோ வீட்டிலோ அதிகம் ஒலித்துக் கொண்டிருக்குமே தவிர, […]

மேலும்....

மஞ்சளின் நன்மைகள்

மஞ்சள் பலநூற்றாண்டுகளுக்கு மேலாக இந்திய துணைக் கண்டத்திலும், மேற்கு ஆசியாவிலும், பர்மா, இந்தோனேஷியா, சீனா ஆகிய நாடுகளிலும் தினசரி உணவில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. கிருமி எதிர்ப்பு, வீக்கத் தணிப்பு ஆகிய மருத்துவக் குணங்களும் உள்ளதாக அறியப்பட்டுள்ளன. அல்செமியர் எனும் மறதி நோய்க்கும் இது குணமளிக்கிறது என்கிறது. ஹெல்த்லைன்.காம் (www.healthline.com) இது குறித்து மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்கிறார் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் கட்டுரையாளர் டி.பாலசுப்ரமணியன். அவர் மேலும் கூறுவதாவது: அண்மையில் மும்பையைச் சேர்ந்த கே.எஸ்.பவார் என்கிற […]

மேலும்....