மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (37)

சிறுநீரகங்களும் நோய்த் தொற்றும் (  KIDNEYS & INFECTIONS ) மரு.இரா.கவுதமன் சிறுநீரகங்கள் அமைப்பும், பாகங்களும் : சிறுநீரகங்கள் பக்கத்திற்கு ஒன்றாக, உடலின் முதுகுப் புறம், வயிற்றுப் பகுதியில், விலா எலும்புகளால் பாதுகாக்கப்பட்டு பத்திரமாக அமைந்துள்ளது. சிறுநீரகங்கள், இரண்டு வரிசையில் கொழுப்புப் படிவங்களால் ஆன உறை போன்ற அமைப்புகளால் பாதுகாக்கப்பட்டுள்ளது. முதுகெலும்பின் மார்பு எலும்புகளின் 12ஆம் எலும்பிற்கும் (T12), இடுப்பெலும்பின் 3ஆம் எலும்பு வரை (L3) பரந்துள்ள சிறுநீரகங்கள் சட்டென்று அடிபடாதவாறு பாதுகாப்பான இடத்தில் பொருந்தியுள்ளது. வலது சிறுநீரகம், இடது […]

மேலும்....

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (83)

தமிழை தரம்  தாழ்த்தும் பாரதி நேயன் அகத்தியர் போன்ற ஆரிய முனிவர்கள் தமிழ் இலக்கணம் செய்த பின் தான் தமிழ்மொழி ஏற்கனவே உயர்ந்து விளங்கிய ஆரிய மொழியான சமசுக்கிருதத்திற்கு நிகராக விளங்கியதாம். பாரதியார் கருத்திது. நம்புபவர்கள் எத்தனையோ பேர் இருப்பர். “ஆன்ற மொழிகளி னுள்ளே – உயர் ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன்” _ என்பது அவர் கூற்று. இப்படி எழுதப் பாரதியார் வரலாறு தெரியாதவராக இருக்க வேண்டும்; அல்லது வரலாற்றை மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்க வேண்டும். […]

மேலும்....

பெண்ணால் முடியும்! : உலகிற்கு தடுப்பூசி தந்த பெண்கள்!

தகவல் : சந்தோஷ் கொரோனா ஒன்றாவது அலை, இரண்டாவது அலை, மூன்றாவது அலை என மனித குலத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்-கிறது. இந்த நிலையில் தடுப்பூசி போட்டுக்-கொண்டவர்கள் தப்பித்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை, மக்களிடையே உருவாகி இருக்கிறது. குறுகிய காலத்தில் ஒரு நோய்த் தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது என்பது மருத்துவ உலக வரலாற்றில் இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்தத் தடுப்பூசிகளைக் கண்டு-பிடிப்பதற்கு உழைத்த விஞ்ஞானிகள் யார் யார் என்பதை கொஞ்சம் அறிவோம். ‘கோவிஷீல்டு’ என்ற தடுப்பூசிக்கு […]

மேலும்....

சிறுகதை : பாமா விஜயம்

அறிஞர் அண்ணா தந்தை பெரியார் நடத்திய ‘குடிஅரசு’ ஏட்டில் 1939ஆம் ஆண்டு வெளிவந்தது  இச்சிறுகதை. தமிழ்நாட்டுக்கு திராவிடர் கழகம் செய்த மிகப் பெரிய பங்களிப்புகள் பல. அவற்றில் பெண்களின் மன உணர்வுகளை முன்னிலைப்படுத்தி விதவைத் திருமணங்களை ஓர் இயக்கமாகவே நடத்தியவர் தந்தை பெரியார். தனது இதழில் அண்ணா அவர்கள் மூலம் பதியப்பட்ட அன்றைய வரலாற்று வாழ்வியலைப் பிரதிபலிக்கும் முக்கிய சிறுகதைதான் இது. படியுங்கள்! உணருங்கள்! * * * “சரசா மிகப் பொல்லாதவள்! படித்த பெண்! ஆகவே, […]

மேலும்....

கவிதை : நான்கடி இமயம்

கவிப்பேரரசு வைரமுத்து     சரித்திர மடியில் தங்கிக் கிடந்த கருப்பிருள் போக்கிய காஞ்சி விடியலே   அழுகையை உலர்த்திய அண்ணனே உன்றன் எழுதுகோல் துப்பிய எச்சிலே எங்கள்   தாகங் களுக்குத் தடாக மானது சோக நெருப்பைச் சுட்டுத் தீய்த்தது   ஆயதோர் காலையில் ஆலய வீதியில் நாயக னேஉன் நாத்திகம் கேட்க   தெய்வங்க ளெல்லாம் தேர்களில் வந்தன பொய்தான் தாமெனப் புலம்பிப் போயின   அரிதாய்க் கிடைத்த அமுத சுரபியே பெரிய சாவுனைப் […]

மேலும்....