செய்தியும் சிந்தனையும் : திருப்பதியில் விபசார அழகிகள் நடமாட்டமா?

எய்ட்ஸ் தடுப்பு அதிகாரியின் கருத்துக்கு அனைத்து கட்சிகள் கண்டனம் திருப்பதியில் விபசார அழகிகள் நடமாட்டம் இருப்பதாக ஆந்திர எய்ட்ஸ் தடுப்பு அதிகாரி கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. அதிர்ச்சித் தகவல் திருப்பதி திருமலையில் அமைந்துள்ள ஏழுமலையான் கோவில், இந்துக்களின் உலகப் பிரசித்தி பெற்ற புனிதக் கோவிலாகத் திகழ்கிறது. இந்தியாவிலிருந்தும், வெளிநாட்டி லிருந்தும் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்தக் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டுச் செல்கிறார்கள். இந்த நிலையில், திருமலையில் விபசார […]

மேலும்....

கங்கையின் சுத்தம் இதுதான்!

மோடி வெற்றிபெற்ற நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசி மற்றும் அதற்கு மேற்கே உள்ள உன்னாவ் போன்ற பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக 200க்கும் மேற்பட்ட பிணங்கள் மிதந்தன. அடையாளம் தெரியாத இந்தப் பிணங்களால் அந்தப் பகுதி மக்களிடம் அச்சம் மிகுந்து காணப்படுகிறது. சில பிணங்கள் நாய் மற்றும் காகங்கள் சிதைத்து விட்டதால் மிகவும் கோரமாக காட்சியளிக்கின்றன. இதுகுறித்து உன்னாவ் மாஜிஸ்ட்ரேட் கூறியதாவது, “எங்களுக்கு சில மீனவர்கள் மூலம் கங்கை நதியில் பிணங்கள் அதிக அளவு மிதந்து வருவதாகத் தகவல் […]

மேலும்....

தகவல்

பெண் குழந்தைகளைப் போற்றும் பெருமைமிகு கிராமம்! அய்தராபாத்திலிருந்து 70 கி.மீ தூரத்தில் இருக்கிறது அரிதாஸ்பூர் கிராமம். 300க்கும் குறைவான மக்களே வசிக்கும் இந்தக் கிராமத்தில் பெண் குழந்தைகள் பிறந்துவிட்டால் ஒட்டுமொத்த கிராமமும் விழாக் கோலம் பூண்டு விடுகிறது. ஊரே ஒன்று திரண்டு கிராமத்தை மின்விளக்குகளால் அலங்கரிக்கிறது. பெண் குழந்தை பிறந்துள்ளதை மேளதாளத்துடன் வீடு வீடாகச் சென்று அறிவித்து இனிப்பு வழங்கிக் கொண்டாடுகின்றனர். பிறந்த பெண் குழந்தையின் பெயரில் ‘சுகன்யா சம்ருதி யோஜனா’ திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கு […]

மேலும்....

கவிதை : வாழ்வின் ஒளி!

இறையரசன் இழிவெலாம் ஒழித்தாய்; நாட்டின்                ஏற்றமே எண்ணி வாழ்ந்தாய்! பழியெலாம் களைந்தாய்; எம்மைப்                பாரிலே உயர்த்தி வைத்தாய்! விழியெலாம் அன்பைத் தேக்கி                விளித்தனை தம்பி என்றே! வழியெலாம் காட்டி எங்கள்                வாழ்வொளி விளக்கம் ஆனாய்!   கோடியாய் இன்னல் ஏற்றுக்                குலைந்தநம் அன்னை நாட்டை நாடியே நலிவு நீக்கி                நலம்பெறு வழிகள் கண்டாய்! பாடியே புலவர் ஏத்தப்                பாரினில் உயர்ந்தாய்! ஆய்ந்தே தேடிய அறிவைப் போலெம்                […]

மேலும்....