பெண்ணால் முடியும்! : 26 வயதில் அய்.ஏ.எஸ். கனவை நனவாக்கியவர்!

இந்திய ஆட்சிப் பணித் தேர்வில் அகில இந்திய தர வரிசையில் 63ஆம் இடம் பெற்றிருக்கும் தீனா தஸ்தகீருக்கு தமிழ்நாட்டின் தேங்காய்ப்பட்டணம்தான் பூர்வீகம். தேங்காய்ப்பட்டணம் என்றால்உடனே நினைவுக்கு வருவது நாவல் ஆசிரியர், தோப்பில் முகம்மது மீரான் தான். ஆம். தோப்பில் முகம்மது மீரானின் பேத்திதான் தீனா தஸ்தகீர். அவரின் வெற்றிப் பயணத்தைப் பற்றிக் கூறுகையில், “அப்பா முகம்மது தஸ்தகீர் சவுதி அரேபியாவில் பெட்ரோலியம் ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தில் முதுநிலை ஆராய்ச்சி விஞ்ஞானியாக இருபது ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். அதனால் எனது […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள் : 2022இல் புது வழி பிறக்கும்!

கே1:     நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை வடமாநிலங்களில் இருப்பதால், அங்கும் மதச் சார்பற்ற அணியை வலுவுடன் அமைக்காமல், தமிழ்நாட்டை பாசிசப் பிடியிலிருந்து எப்படிக் காக்க முடியும்? – குமரன், நெய்வேலி ப1:        வடமாநிலங்களில் உள்ள எதிர்க்கட்சிகள் அரசியலுக்கும் பதவிப் போட்டிக்கும் தன்முனைப்புக்கும் கொடுக்கும் முன்னுரிமை, லட்சியங்களில் _- கொள்கைகள் அடிப்படையில் இல்லையே!                மதச்சார்புக்கு மேலும் போட்டிபோட்டு ஓட்டு வேட்டை ஆட நினைக்கும் அரசியல் தலைவர்கள் மத்தியில் கொள்கை அடிப்படையிலான அரசியல் பார்வை வந்தால்தான் அது சாத்தியப்படும். கே2: […]

மேலும்....

கட்டுரை : ஆசிரியர், தமிழர் தலைவர் பார்வையில் அய்யா தந்தை பெரியார்

முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன் தந்தை பெரியாரின் அணுக்கத் தொண்டர் எனில் ஆசிரியர் ஒருவரையே குறிப்பிட வேண்டும். அதுவும் அன்னை மணியம்மை-யாருக்கு அடுத்துத்தான். காரணம் _ தந்தை பெரியாரின் தொண்டுக்கென்றே, 1943இல் வந்தவர் அய்யாவின் உயிர் உடற்கூட்டை விட்டுப் பிரியும் வரை அகலாது, அணுகிக் காத்தவர். ஆசிரியர் வீரமணி அவர்கள், அய்யாவைப் பத்து வயதிலிருந்து வாசித்தவரும், சுவாசித்தவரும் ஆவார். 1944இல் நீதிக்கட்சி திராவிடர் கழகமாக மாற்றம் பெற்ற சேலம் மாநாட்டில் 11 வயதுச் சிறுவனாக, உணவு இடைவேளையில் மேடையேற்றி […]

மேலும்....

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (90)

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (90) பாரதியின் பாதையில் ஆர்.எஸ்.எஸ் நேயன் பசுவதைத் தடைச் சட்டம் என்று இன்று ஆர்.எஸ்.எஸ் வலியுறுத்தி, வன்முறையில் ஈடுபடுவதை, ஆர்.எஸ்.எஸ் தொடங்கப்-படுவதற்கு முன்னரே கூறியவர் பாரதி. 1917 நவம்பர் 8ஆம் தேதி சுதேசமித்திரன் ஏட்டில் பாரதியார் பசுவதைத் தடுப்பைப் பற்றி எழுதியுள்ளார் கீழ்க்கண்டவாறு: “பசுவின் சாணத்துக்கு நிகரான அசுத்த நிவாரண மருந்து உலகத்தில் அக்னியைத்தான் சொல்லலாம். வீட்டையும் யாகசாலையையும் கோவிலையும் நாம் பசுவின் சாணத்தால் மெழுகிச் சுத்தப்படுத்துகிறோம். அதனைச் சாம்பல் ஆக்கி அச்சாம்பலை […]

மேலும்....

கவிதை : எந்தமிழர் முகவரி

கவிச்சிம்மன் நால்வருணம் நாட்டில் நடமாட விட்டு மேல்வருணம் நானென்றும் மீதமுள்ள வர்கள் கீழ்வருணம் என்றும் கூறிவரும் எத்தரின் கால் ஒடிக்க வந்த கனல்வீரர் பெரியார்!   மதம்பிடித்து மக்களை மடமையில் ஆழ்த்தும் விதம்பிடித்து வாழ்ந்த வீணரின் கூட்டத்தைப் பதம்பிடித்து நாட்டில் பகுத்தறிவுத் தன்மையால் வதம்பிடித்து வாட்டிய மறவர் பெரியார்!   பலபள்ளி தனைமூடி பைந்தமிழ் மண்ணில் குலக்கல்வி முறையைக் கொண்டுவந்து தமிழரின் நலங்கொல்லி யான நயவஞ்சகச் சதியை வலம் வந்து விரட்டிய வண்டமிழர் பெரியார்!   வேதத்தைக் […]

மேலும்....