ஆசிரியர் அறிக்கை

இந்த 21ஆம் நூற்றாண்டில் அறிவியல் வளர்ச்சியின் வேகம் மிகவும் வியக்கத்தக்கது. விண்வெளியில் இது வரை கதைகளாகவும், மூட நம்பிக்கைகளாகவும் இருந்தவற்றை மாற்றி, செவ்வாய் கிரகத்தை அடைவதும், அதில் உயிரினங்கள் இருந்தனவா என்பது தொடர்பான ஆய்வுக்காகவும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, “பெர்சவரன்ஸ் ரோவர்’’ விண்கலத்தைக் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 30 ஆம் தேதி செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி வைத்தது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை ஆய்வு செய்யவும், அங்கிருந்து மண் மற்றும் கற்களை பூமிக்குத் திரும்பி […]

மேலும்....

ஒரு வரிச் செய்திகள் (11.2.2021 முதல் 25.2.2021 வரை)

11.2.2021   –  12 துறைமுகங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் – நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம். 11.2.2021   –  தொழிலாளர்களுக்கு வாரத்தில் இனி 4 நாட்களுக்கு மட்டுமே வேலை  – மத்திய அரசு திட்டம். 12.2.2021    – கீழடியில் 7ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் 12.2.2021   – ஹைதராபாத் மாநகராட்சி வரலாற்றில் முதன்முதல் மேயர், துணை மேயராக 3 பெண்கள் தேர்வு. 13.2.2021   – ஜாதி மறுப்புத் திருமணம் செய்த பெற்றோரின் இருவரில் ஒருவரின் ஜாதியின்படி குழந்தைக்கு சான்றிதழ் – அரசாணை வெளியீடு. […]

மேலும்....

பெண் உரிமை

¨   பெண்களே! வீரத் தாய்மார்களாக ஆக விருப்பப்படுங்கள். நீங்கள் மாறினால் உங்கள் கணவன்மார்களும் மற்ற ஆண்களும் மாற்றம் அடைவது வெகு சுலபம். ஆண்கள் உங்களைத்தான் பிற்போக்காளிகள் என்று உங்கள்மீது பழிசுமத்தி வருகிறார்கள். அப்பழிச் சொல்லுக்கு ஆளாகாதீர்கள். எதிர்காலத்தில்  இவள் இன்னாருடைய மனைவி என்று அழைக்கப்படாமல், இவர் இன்னாருடைய கணவன் என்று அழைக்கப்பட வேண்டும்.                                                              (‘குடிஅரசு’ 5.6.1948)

மேலும்....

உலக வர்த்தக அமைப்புக்கு முதல் பெண் தலைவர்

உலக வர்த்தக அமைப்பின் (WTO) முதல் பெண் தலைவராக நிகோசி ஒகோஞ்சோ இவேலா (66) நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் உலக வர்த்தக அமைப்பின் ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த முதல் பெண் நபர் என்ற சாதனையை இவேலா படைத்துள்ளார். 164 உறுப்பு நாடுகளைக் கொண்ட உலக வர்த்தக அமைப்பு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் தொடர்பான விதிகளை முடிவு செய்கிறது. “கரோனா தொற்று பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள சர்வதேச பொருளாதாரத்தை மீண்டும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முக்கியத்துவம் கொடுக்கப்படும்‘‘ என இவேலா கூறியுள்ளார்.

மேலும்....

திராவிடம் என்பது தமிழ்ச் சொல்லெ!

ஆரிய ஆதிக்கத்தின் விளைவாய், இந்த மண்ணின் பெரும்பான்மை மக்கள் (97% மக்கள்) தாங்கள் சூத்திரர்கள் என்று அழைக்கப்படுவதை மறுத்து, திராவிடர்கள் என்னும் சொல்லால் தங்களை அழைத்து, ஆரியப் பார்ப்பனர்களிலிருந்து மாறுபட்டவர்கள் தாங்கள் என்பதைக் காட்டிக்கொள்ள திராவிடர் என்னும் சொல்லாட்சியே பொருத்தமாய்ப் பயன்பட்டது. தமிழர் என்னும்போது தாங்களும் தமிழர்கள்தான் என்று ஆரியப் பார்ப்பனர்கள் உள்ளே நுழைந்து இனப் பகுப்பைச் சிதைத்து விடுகின்றனர். தமிழினத்தின் பரம்பரைப் பகையினமான ஆரியப் பார்ப்பனர்களுள் தமிழர்கள் என்றால், இதைவிட இன மோசடியும், இனக் கட்டின் […]

மேலும்....