விழிப்புணர்வு

சாலையைக் கடக்கிற போது கைப்பேசி பேசிக் கொண்டே போகிறவர்கள் தங்களுக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள். சீனாவில் இப்படி பொறுப்பின்றி கைப்பேசி பேசிக்கொண்டோ, தகவல் அனுப்பிக்கொண்டோ, படம் பார்த்துக் கொண்டோ சாலையைக் கடந்தால் 50 யுவான் வரையில் அபராதம் செலுத்தத் தயாராக இருக்க வேண்டும்.   விநோத சட்டம் மாபெரும் பொருளாதார வீழ்ச்சிக்கும் இரண்டாம் உலகப் போருக்கும் பிறகு ஆஸ்திரேலியாவில் உணவுப் பொருள்கள் தட்டுப்பாடு ஏற்பட்ட சூழலில் ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி ஒருவர் தனது […]

மேலும்....

வரலாற்றுச் சுவடு : மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்

தேவதாசி முறை ஒழிப்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்! திருவாரூருக்கு அருகில் பாலூரில் 1883ஆம் ஆண்டு கிருஷ்ணசாமி – சின்னம்மாளின் மகளாகப் பிறந்தார். கிருஷ்ணசாமி மனவேதனையில் வீட்டை விட்டுச் சென்றுவிட, வறுமையில் வாடிய சின்னம்மாள் குழந்தையை (இராமாமிர்தத்தை) 10 ரூபாய் பணத்துக்கும் ஒரு பழைய புடவைக்கும் தாசிகுல பெண்ணிடம் விற்றுவிட்டார். அப்போது இராமாமிர்தத்திற்கு வயது 5 இவருக்கு 7 வயதானதும் தாசித் தொழிலில் ஈடுபடுத்த சடங்கு செய்தனர். மூவலூரில் உள்ள திண்ணைப் பள்ளியில் படித்தார், கூடவே சுயம்பு பிள்ளையிடம் […]

மேலும்....

இணையவெளி : இந்தியா முழுவதும் பார்ப்பனர்களா

பார்ப்பன சாம்ராஜ்யம் 2 மாத கடின உழைப்பிற்குப் பிறகு இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பார்ப்பன மக்கள் தொகை எவ்வளவு உள்ளதென்பதை அறிய முயற்சித்துள்ளது. இதனடிப்படையில் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.பார்ப்பனர்கள் தங்கள் பலமறிந்து ஒற்றுமையாகச் செயலாற்றுவார்கள். (1)          ஜம்மு காஷ்மீர்: 2 லட்சம் + 4 லட்சம் புலம் பெயர்ந்தவர்கள். (2)          பஞ்சாப் : 9 லட்சம் பார்ப்பனர்கள். (3)          அரியானா: 14 லட்சம் பார்ப்பனர்கள். (4)          ராஜஸ்தான் : 78 லட்சம் பார்ப்பனர்கள். (5) […]

மேலும்....

சிந்தனை : மக்கள் நலன் சார்ந்த இயக்கங்களா

¨           ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. _ மக்கள்- நலன் சார்ந்த இயக்கங்கள் இல்லை. அவை அநாகரிக அகோரிகளின் வன்முறைக் கும்பல். ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் தீவிரமாகச் செயல்பட்ட தேவர் சமூகத்தைச் சார்ந்த நண்பர் ஒருவர் அந்த அமைப்பில் இருந்து விலகி இருப்பது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. ¨           அதிலிருந்து விலக அவர் சொன்ன காரணம் தான் மிக மிக முக்கியமானது. ¨           “இந்து’’ என்ற காரணத்தினால் அதில் சேர்ந்தேன். 8 ஆண்டுகளாக தீவிரமாகப் பணி செய்தேன். ¨           இட ஒதுக்கீடு […]

மேலும்....

உணவு முறை

ஆரோக்கியம் காக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நம் உடல் செல்களால் ஆனது. இரண்டு செல்கள் இணைந்து இணையாக இருக்கும். ஓர் இணையில் எட்டு எலெக்ட்ரான்கள் இருக்கும். செல்களுக்குள் நடக்கும் செயல்பாட்டில், ஒரு எலெக்ட்ரானை இழந்துவிடுகிறது. இதனால், அந்தச் செல் தனித்துவிடப்படும். இதை ஆக்ஸிடன்ட் என்கிறோம். ஒரு எலெக்ட்ரானை இழந்த நிலையில், அருகில் இருக்கும் இணையிடம் இருந்து எலெக்ட்ரானைக் கவர முயற்சிக்கும். வைட்டமின் சி போன்ற நுண்ணூட்டச் சத்துகள் தன்னிடம் இருந்து ஒரு எலெக்ட்ரானை அந்தச் செல்லுக்குக் கொடுத்து, ஈடுகட்டும். இவ்வாறு […]

மேலும்....