பெண் நீதிபதிகள் எண்ணிக்கையும் திராவிட இயக்கத்தின் பங்கும்!

சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் நியமிக்கப்பட்ட வரலாறும், அதற்கு நீதிக்கட்சியும், திராவிடர் கழகமும் செய்த பங்களிப்பையும் யாரும் எளிதில் புறம்தள்ள முடியாது. அதற்கு நம் கடந்த கால வரலாறும், இந்தக் காலத்தில் பணியில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கையும் மற்றும் இடஒதுக்கீட்டையும் அறிந்து கொண்டால் நல்லது. 1898 முதல் 1930 வரை சென்னை உயர்நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்ட 9 ‘இந்திய’ நீதிபதிகளில் 8 பேர் பார்ப்பனர், ஒருவர் நாயர். தமிழர் ஒருவர்கூட இல்லாத நிலையில், 1948ஆம் ஆண்டுதான் முதன்முதலில் என்.சோமசுந்தரம் என்ற […]

மேலும்....

அரசியல் களம்: ஆன்மிக அரசியலின் திரைக்குப் பின்னால்?

கவிஞர் கலி.பூங்குன்றன் பாவம் பா(மா)லன்கள்! மிகவும் ஏமாந்து போய்தான் இருக்கிறார்கள். தி.மு.க.வால் அறிமுகமாகி, திமுகவால் தனிப்பட்ட முறையிலும்கூட பலன் பெற்ற மாலன்கள் ஒரு நடிகர் வருவார் வருவார் என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து, கண்கள் பூத்து, கண்கள் பூத்து கடைசியில் கானல் நீராகி விட்டதே என்று கதறாத குறைதான் – கண்ணீர் விட்டு ஆற்றாமையைப் போக்குகிறார்கள். மாலன் என்றால், ‘தினமணி’, ‘தினமலர்’, ‘துக்ளக்‘, பா.ஜ.க. – சங்பரிவார்கள் – பார்ப்பன வட்டாரத்தின் ஒரு குறியீடு என்று எடுத்துக் கொள்ள […]

மேலும்....

முகப்புக் கட்டுரை: திராவிடர் திருநாளைப் பண்பாட்டு மீட்பாகக் கொண்டாடுவோம்!

மஞ்சை வசந்தன் உலகின் தொன்மையான மொழி தமிழ் மொழி. தொன்மையான இனம் தமிழ் இனம். உலக மொழிகள் பலவற்றுக்கும் மூலமொழி தமிழ். உலகின் தொன்மையான பண்பாட்டுக்கும் நாகரிகத்துக்கும் உரியவர்கள் தமிழர்களே! தமிழர்களிடம் ஜாதியில்லை, மதம் இல்லை, மூடநம்பிக்கைகள் இல்லை, பகுத்தறிவின் பாற்பட்ட பண்பாட்டுடன் கூடிய சிறப்பான, செம்மையான வாழ்வை வாழ்ந்தார்கள். ஆரியர் நுழைவால் அனைத்தும் பாழ் கலப்பின்றி ஒரே இனமாய் தமிழினம் வாழ்ந்த பகுதியில், பிழைப்புக்காக ஆரியர்கள் நுழைந்து பரவிய பின், தமிழரின் அனைத்தும் அழிக்கப்பட்டு, ஆரிய […]

மேலும்....

கவிதை: தமிழர் திருநாள்

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தைம்மதி பிறக்கும் நாள்; தமிழர்தங்கள் செம்மை வாழ்வின் சிறப்புநாள்; வீடெலாம் பாலும் வெல்லப் பாகும் பருப்பு நெய் ஏலமும் புதுநெருப் பேறி, அரிசியைப் பண்ணிலே பொங்கப் பண்ணித் தமிழர் எண்ணிலே மகிழ்ச்சி ஏற்றும் இன்பநாள்! புதிய பரிதியைப் புகழ்ந்து வாழ்த்தி இதுதான் வல்லான் எழுதிய தமிழோ எனும்படி இறக்கிய இளஞ்சூட்டின்சுவைப் பொங்கல் இலைதொறும் போட்டுத் தேன்கனி, செங்கரும்பின் சாறும் சேர்த்தே அள்ளூர அள்ளி அள்ளிப் பிள்ளைகள் தெள்ளு தமிழ்ப் பேச்சுக் கிள்ளைப் பெண்டிர் தலைவரொ […]

மேலும்....

பெரியார் பேசுகிறார்: பொங்கல் புதுநாள் தோன்றியது ஏன்?

தந்தை பெரியார் உழுது பாடுபட்ட பாட்டாளி உழு பயன் காணும் நாள்! உலகம் மகிழும் நாள்! மழையென்றும் வெய்யில் என்றும் பாராமல், மனைவி மக்கள் ஆகிய முழுக் குடும்பத்துடனும் மாட்டுடன் போட்டி போட்டுழைத்து, எதிர்பார்த்தும் – எதிர்பாராமலும் வரும் எல்லாவகைக் கேட்டினையும் சமாளித்து, இரத்தத்தை வியர்வையாகப் பிழிந்து, அதுபோதாமல் அட்டைகளுக்கும் பாம்பு-களுக்கும் பச்சை ரத்தம் பரிமாறிய உழவன், நெளியும் நெற்குலைகண்டு நீண்ட நெட்டுயிர்ப்-போடு, ஆனந்தப் பரவசனாய் அடையும் அமைதிக்கு எதனைத்தான் எடுத்துக்காட்டாகச் சொல்லமுடியும்? இரட்டைப் பிள்ளைகளைச் சுமந்து […]

மேலும்....