அய்யாவின் அடிச்சுவட்டில் …:இயக்க வரலாறான தன் வரலாறு(260) – பாவலரேறு பெருஞ்சித்திரனார் மறைவு!

கி.வீரமணி 10.5.1995 தஞ்சை மாவட்ட திராவிடர் கழகச் சார்பில் ஊருணிபுரத்தில் எழுச்சியுடன் ஜாதி ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. மாபெரும் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியின் முடிவில் ‘தீ மிதி’ நிகழ்ச்சியும், வீதி நாடகமும் நிகழ்த்தப்பட்டது. முன்னதாக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பெரியார் செல்வம் கொடியினை ஏற்றிவைத்து மாநாட்டைத் தொடங்கிவைத்தார். மாநாட்டு மேடையில் பசும்பொன் மாவட்டம் துவார் கிராமம் ந.தமிழரசன் _ த.சிகப்பி ஆகியோரின் மகள் லதாவுக்கும், செவ்வூர் கிராமம் பழனியப்பன் _சின்னம்மாள் ஆகியோரின் மகன் குமார் ஆகியோருக்கு வாழ்க்கை […]

மேலும்....

மருத்துவம்: விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! (22)

          இரைப்பை அழற்சி (GASTRITIS) மரு.இரா.கவுதமன் ‘இரைப்பை அழற்சி’ (Gastritis) மிகவும் அதிக அளவில் காணப்படும் ஓர் நோய். இந்தியாவில் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் இந்நோயால் பாதிக்கப்படுகின்றனர். பொதுவாக இரைப்பை அழற்சி பல காரணங்களால் ஏற்படும். இரைப்பைச் சுவர்களில் ஏற்படும் அழற்சியையே (Inflammation of the lining of the stomach) இந்நோய்க்குக் காரணம். இரைப்பைப் புண்கள் ஏற்படக் காரணமான நுண்கிருமிகளே இரைப்பை சுவர் அழற்சிக்குக் காரணிகளாக பெரும்பாலும் உள்ளன. […]

மேலும்....

பெண்ணால் முடியும்

கோவை கே.எம்.சி.எச். மருத்துவக் கல்லூரிக்கு ஏழை மாணவி சவுமியா மருத்துவப் படிப்பிற்குத் தேர்வாகி அனைவருக்கும் முன் மாதிரியாகத் திகழ்கிறார். மிகவும் பின்தங்கிய சமூகமான லம்பாடி சமூகத்திலிருந்து தேர்வாகி உள்ள முதல் மாணவி இவர்தான். அவரின் இலட்சியப் பயணத்தைப் பற்றிக் கூறுகையில்,  “எனக்குப் படிப்பு நன்றாக வரும். 10ஆம் வகுப்பில் 461 மதிப்பெண்களும் +2வில் 410 மதிப்பெண் கிடைத்தது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் அரட்டவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் வழியில் +2 வரை படித்தேன். ரொம்ப […]

மேலும்....

சிறுகதை: சிக்கனத் திருமணம்

ஆறு.கலைச்செல்வன் குமாருக்கு கோபம் கோபமாக வந்தது. “திருமணத்தை சிக்கனமாக நடத்த வேண்டுமாம். நம்மிடம் பணம் இல்லையா? அப்பா இன்னமும் அவர் காலத்திலேயே இருக்கார்’’ என அவன் வாய் முணுமுணுத்தது. மேசையின்மீது அச்சடிக்கக் கொடுப்பதற்காக அவன் எழுதிவைத்த திருமண அழைப்பிதழின் மாதிரி கிடந்தது. அதை முறையாக எழுதி முடிக்க வேண்டும். ஆனால், அவனுக்கு அப்போது எதிலும் ஈடுபாடு இல்லாத நிலையில் அப்படியே படுக்கையில் விழுந்து உறங்கிவிட்டான். குமாருக்கு திருமணம் நிச்சயமாகியிருந்தது. அவனது குடும்பம் வசதியானது. அப்பா மூர்த்தி சொந்தமாகத் […]

மேலும்....

சிந்தனை: திருவள்ளுவர் நாள் சிந்தனை

முனைவர் வா.நேரு உண்மை வாசகர்கள் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் திருநாள், திருவள்ளுவர் தின வாழ்த்துகள். உலகமெங்கும் இருக்கும் திராவிடர்கள் மனமகிழ்ந்து, தங்களின் ஜாதி, மதங்களை மறந்து கொண்டாடும் தமிழர் திருநாளைக் கொண்டாடும் அதே வேளையில் ஜனவரி -15அய் திருவள்ளுவர் நாளெனக் கொண்டாடுகிறோம். டாக்டர் கலைஞர் அவர்கள் தமிழக முதல்வராக இருந்தபோது, 1971ஆம் ஆண்டு முதன் முதலாக திருவள்ளுவர் தினம் அறிவிக்கப்பட்டது. பொங்கல் பண்டிகையை ஒட்டி, திருவள்ளுவர் தினத்தைக் கொண்டாடும் நாம், இன்று திருக்குறளை நமது பரம்பரை […]

மேலும்....