ஆய்வுக் கட்டுரை: புலவர் மாவண்ணா தேவராசனின் ‘பெரியார் பிள்ளைத் தமிழ்’ (2)

எம்.எப்.ஜ.ஜோசப் குமார் ஆசிரியரே, தமது நூலுக்கு செறிவானதோர் ஒரு குறிப்புரையை எழுதியிருப்பது மிகவும் பாராட்டுதலுக்குரியது. பெரியார் தொடர்புடைய வரலாற்றுக் குறிப்புகள் அனைத்தும் இன்று திராவிட இயக்க வரலாறு பயில விழையும் மாணாக்கருக்கு மிகவும் உதவியாய் இருக்கும் என்பதில் அய்யமில்லை. மேலும் பெரியாரின் கொள்கைகளோடு உடன்படாதவர்கள், பின்னாளில், தனது செய்யுட் கருத்துகளைத் திரித்து எழுதிவிடுவரோ என்கிற அச்சத்தாலும், அவரே குறிப்புரையும் எழுதிவிட்டார் என்று எண்ணத் தோன்றுகிறது. இன்று பெரியார் சிலைக்குக் காவி வண்ணம் பூச முனையும் மடமையாளரை நோக்கும்போது, […]

மேலும்....

பெண்ணால் முடியும்: குமரியின் முதல் பெண் அய்.பி.எஸ் பிரபினா

இன்று நாட்டில் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் பெரிய அளவில் வளர்ச்சி பெற்று, ஒவ்வொரு துறையிலும் தங்களது முத்திரையைப் பதித்து வருகின்ற நிலையில் ஆளுமைத் திறமைமிக்க அய்.பி.எஸ். பணியில் அதிகளவில் பெண்கள் வெற்றிபெற்று சிறப்புடன் செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தின் தென்கோடி மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து குடிமைப் பணித் தேர்வின் மூலம், குமரியின் முதல் அய்.பி.எஸ். என்னும் பெருமை அடைந்து சிறப்பித்துள்ளார் பி.பிரபினா. சிறுவயது முதலே பிரபினாவுக்கு குடிமைப் பணி தேர்வு எழுதி அய்.ஏ.எஸ். ஆக வேண்டுமென்பது […]

மேலும்....

சிறுகதை: அப்பாவி விவசாயிங்க..!

சேது “என்ன, ராமசாமி! நான் சொன்னதைக் கேட்டிருந்தா இப்ப கையில ஒரு லட்ச ரூபாய் வந்திருக்குமில்ல? அந்தக் கம்பெனி கேட்ட மாதிரி உன் நிலத்தில போட்டிருக்கிற நெல்லுக்கு குவிண்டாலுக்கு 2000ன்னு 10 ஏக்கருக்கு 10 லட்ச ரூபாய் வருமில்ல. அதுல 1 லட்ச ரூபாய் முன் பணம் வாங்கி இருக்கலாமில்ல. இப்ப இப்படி ரூபாய் இல்லாம கஷ்டப்படுறயே.’’ “பாரு முனுசாமி, அவரு தோப்புல வர தேங்காய்க்கும், வீராசாமி அவர் போட்டிருக்கிற மிளகாய்க்கும் ஒப்பந்தம் போட்டு முன் பணம் […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில் ….: இயக்க வரலாறான தன் வரலாறு (259)

மத்திய அமைச்சர் சீதாராம் கேசரி முழக்கம்!    கி.வீரமணி 14.4.1995 அன்று பெண்ணாடம் அடுத்த செம்பேரி கிராமத்தில் கா.ராசேந்திரன் இல்ல மணவிழாவில் கலந்துகொண்டு செம்பேரி காசி _ கனகாம்பாள் ஆகியோரின் மகன் அண்ணாதுரைக்கும், புதுப்பாளையம் அரங்கசாமி _ மலர்க்கொடி ஆகியோரின் மகள் ராதாவுக்கும் வாழ்க்கை ஒப்பந்த உறுதிமொழியினைக் கூறச் செய்து, மண விழாவை தலைமையேற்று நடத்திவைத்தேன்.   சிறிய தாயார்  பட்டம்மாள் 15.4.1995 அன்று குளித்தலை மாநாடு முடிந்து திருச்சி பெரியார் மாளிகை வந்திருந்தபோது என் அன்னையார் […]

மேலும்....

முகப்புக் கட்டுரை : பண்பாட்டுப் படையெடுப்பை பகுத்தறிவால் முறியடிப்போம்!

 மஞ்சை வசந்தன்  தமிழர் வாழ்வு என்பது ஆரியர் வருகைக்குமுன் தரணிக்கே வழிகாட்டும் வகையில் தரமுடையதாய், நாகரிகம் மிகுந்ததாய் இருந்தது. ஆனால், ஆரியர் வந்து கலந்து ஆதிக்கம் செலுத்தியபின் எல்லாம் தகர்ந்தது; அவர்களின் பண்பாட்டை நோக்கி நகர்ந்தது. தமிழர் திருமணம்: மண வயது வந்த ஆணும் பெண்ணும் தனிமையில் சந்தித்து, காதல் வளர்த்து பின் அவர்களே கைப்படத் தொடுத்த மாலையை அணிவித்து இல்வாழ்வைத் தொடங்கினர். ஜாதி, மதம், உறவு என்ற எந்த வட்டத்திலும் அவர்கள் சிக்க வாய்ப்பே இல்லை. […]

மேலும்....