வாசகர் மடல்

ஊர்தோறும்  “உண்மை” நமது நாட்டில் வார இதழ்கள் மற்றும் மாத இதழ்கள் நாள்தோறும் பல வண்ணங்களில் வகைவகையாய் வெளிவந்தவண்ணம் உள்ளன. ஆனாலும் அவை அனைத்தும் வர்த்தக ரீதியாக வலம் வந்துகொண்டிருக்கின்றன என்பது நடைமுறை உண்மை. எனவே, நாட்டு நடப்புகளை சமூகநலக் கண்ணோட்டத்துடனும் பகுத்தறிவுச் சிந்தனையுடனும் இளைஞர்களையும் மாணவர்களையும் நல்வழிப்படுத்துகின்ற வார இதழ்கள், மாத இதழ்களை மட்டுமே எனது கண்கள் தேடி அலைந்தன. அப்போது என் கண்களைக் காந்தமாய்க் கவர்ந்தது மாதமிருமுறை வெளிவருகின்ற ‘உண்மை’ இதழ்  மட்டுமே! தமிழர் […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்:”குட்டி கார்ப்பரேட் ரங்கநாதய்யர்”

கே:       “பிராமணர், ஷத்திரியர், வைசியர் என்று அழைப்பதை ஏற்கும்போது, சூத்திரர்களை ‘சூத்திரன்’ என்று அழைக்கும்போது மட்டும் எதிர்ப்பது ஏன்? என்ற பா.ஜ.க. எம்.பி. பிரக்யா தாகூரின் திமிரை எப்படிப் பார்க்கிறீர்கள்?                 – அ. தமிழரசி, மதுரை ப:          மாலேகான் குண்டு வெடிப்பு சதி வழக்கின் முக்கியக் குற்றவாளி _ ஜாமீனில் வெளியே வந்து எம்.பி. ஆன (பா.ஜ.க.வின்) பொது ஒழுக்கத்திற்கும் அரசியல் நடைமுறைக்கும் இது ஒரு ‘சாம்பிள்’) இந்த சாமியாரிணியின் திமிர்வாதம் _ மத்தியில் காவிக் […]

மேலும்....

கட்டுரை: புத்தாண்டும் உழவர் போராட்டமும்

முனைவர். வா.நேரு 2020ஆம் ஆண்டைக் கடந்து 2021-ஆம் ஆண்டில் நுழைகின்றோம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். 2020-ஆம் ஆண்டு உலகை அச்சுறுத்திய, அச்சுறுத்தும் கொரோனா என்னும் கொடுந்தொற்று பரவிய ஆண்டு. பலரைப் பாதிப்புக்கு உள்ளாக்கிய ஆண்டு. மன அளவில் பல மனிதர்களை முடக்கிய ஆண்டு. இதன் கொடுமையை உலகம் முழுவதும் மக்கள் உணர்ந்திருக்கின்றனர். கொரோனாவை ஒழிக்க வேண்டும் என்று உலக நாடுகள் பலவும் தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடித்துக் கொண்டுள்ளனர். தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள் […]

மேலும்....

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை! (69) : கோவில் நுழைவுப் போராட்டம் இன்றைய நிலை!

நேயன்   சாதாரண தாழ்த்தப்பட்ட மக்களை மட்டுமல்ல, தலைசிறந்த சிவபக்தரான நந்தனாரையே சிதம்பரம் கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுத்தனர். அவர் பிடிவாதமாக அடம் பிடிக்க பார்ப்பனர்கள் சதித் திட்டம் தீட்டி நந்தனை ஒழித்துக்கட்ட முடிவெடுத்தனர். நந்தனாரைப் பார்த்து, நாங்கள் வளர்க்கும் தீயில் மூழ்கி வந்து நடராஜப் பெருமானைச் சந்திக்கலாம் என்று அனுமதி அளித்தனர். நந்தன் கடவுள் மீதுள்ள நம்பிக்கையால் அதற்கு ஒப்புக் கொண்டார். கொழுந்துவிட்டு எரியும் நெருப்பில் புகுந்தார். சற்று நேரத்தில் சாம்பலானார். ஆனால், பார்ப்பனர்கள் அதை […]

மேலும்....

மருத்துவம் :விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! (21)

இரைப்பை, உணவுக்குழாய் பின்னோட்ட நோய் (GASTRO ESOCHAGAL REFLUX DISEASE – GERD) மரு.இரா.கவுதமன் குழந்தைகளுக்கு ஏற்படும் அறிகுறிகள்: மூன்றில் இரண்டு பங்கு குழந்தைகள், 4 மாத வயதில் இந்நோயினால் பாதிக்கப்படுகின்றனர். 10 சதவிகித, ஒரு வயதான குழந்தைகளும் இந்நோயால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. இயல்பாக குழந்தைகள், அரிதாக உணவை துப்புவதும், கக்குவதும் உண்டு. ஆனால், இதுவே அடிக்கடி நிகழ்ந்தால், அக்குழந்தைகள் மருத்துவரிடம் காட்டி, அறிவுரை பெற வேண்டியது முக்கியம். மற்ற அறிகுறிகள்: ¨           உணவை உண்ண […]

மேலும்....