இளைய தலைமுறையே இனிதே வருக – 2 : ‘பாராட்டு’ கருதாமல் பொதுப் பணி புரிவோம்!

வீ.குமரேசன் தான் செய்திடும் பணிகளால் கிடைத்திடும் பலன்கள் தனக்கும், தன்னைச் சார்ந்தவர்களுக்கு மட்டும் கிடைத்திட வேண்டும் என்ற மனப்போக்கு பரவலாக மிகப் பலரிடம் உள்ளது. இப்படி ஒவ்வொருவரும் தனக்கு மட்டும் பலன்கள் கிடைக்க வேண்டும் என நினைக்கத் தொடங்கி விட்டால், மானுட இயக்கமே வெகுவாகச் சுருங்கிவிடும். முன்னேற்றம் தடைப்பட்டு விடும். அந்தந்த நிலன் சார்ந்த _ மக்கள் சார்ந்த நினைப்பே மேலோங்கி மற்றவர்களைப் பகைவர்களாகப் பார்க்கும் நிலை உருவாகிவிடும். மனித சமுதாயம் நாகரிகத்தில் முன்னேறி பல்வேறு பரிமாணங்களை […]

மேலும்....

நாளும் செய்தியும் : ஒரு வரிச் செய்திகள் (28.1.2021 முதல் 10.2.2021 வரை)

28.1.2021 – ஜெயலலிதா நினைவிடத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிச்சாமி. 28.1.2021 – டெல்லியில் கலவரம் ஏற்படக் காரணம், நடிகர் தீப்சிந்து – விவசாய சங்க பிரதிநிதிகள் குற்றச்சாட்டு. 29.1.2021 – சிதம்பரம் ராஜா முத்தையா சுயநிதிக் கல்லூரியாக மாற்றி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. 29.1.2021 – ஜெயலலிதாவின் பிறந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாடப்படும்  – எடப்பாடி பழனிச்சாமி 30.1.2021 – உத்தரகாண்ட் மாநில அல்மோரா மாவட்ட பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கு பாலியல் வன்கொடுமை […]

மேலும்....

உணவே மருந்து: உடலநலங் காக்கும் உணவுமுறை

உணவு என்பதே உடல் வாழ அடிப்படை. உயிர் வாழ மட்டுமன்றி, உடல் நலம், உடல் கேடு இவற்றிற்கும் அதுவே அடிப்படை. எந்த உணவுகளை உண்ணவேண்டும், எவற்றை விலக்க வேண்டும், எந்த அளவு உண்ண வேண்டும் என்பவை மிகவும் முதன்மையானவை. உடலுக்கு பல்வேறு சத்துகள் வேண்டும். எனவே, உணவும் பல்வேறு சத்துகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அதற்கு அரிசி உணவை எடுத்துக்கொள்வது போலவே, சிறுதானியங்களையும் தேவையான அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். காய்கறிகள், கீரை வகைகள் பழங்கள் அதிக அளவில் […]

மேலும்....

53ஆம் நாளிலேயே அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்

காந்தியார் கடைசிக் காலத்தில் நானே திருப்தி அடையும் அளவுக்கு மாறினார். அவர் கடைசியிலே காங்கிரசை ஒழிக்க வேண்டும் என்று, அவர் வாயினாலேயே சொல்லிப் போட்டார். நாம் எந்தக் காரியத்திற்காக காங்கிரஸ் ஏற்படுத்தினோமோ அந்த சுதந்திரம் வந்துவிட்டது. இனி காங்கிரஸ் தேவையில்லை என்று கூறினார். பிறகு கோயில்கள் எல்லாம் விபச்சார விடுதி என்று கூறினார்¢ விஜயராகவாச்சாரி போன்றவர்கள் எல்லாம் அவரைக் கண்டித்தார்கள். அது மட்டும் அல்ல, அரசியலில் மதம் கூடாது. அரசாங்கக் காரியங்களில் மதத்தைக் கலக்கக் கூடாது என்ற […]

மேலும்....

சிந்தனை : கோயில் நகரம் என்றால்…

திருமாலும் சிவனும் குருதிப்பலி எதுவும் கோரவில்லை. ஆனால், அவர்கள் பண்புக்கியைய அவர்கள் ஒரு கன்னிப்பலி கேட்கின்றனர். பல வழிகளில் – சில மிகவும் நடுக்கந்தரும் முறைகளில் – சிறு பெண்கள் தேடித் திரட்டப்பட்டு, இறைவனுக்குப் பணிவிடை செய்யும் தேவதாசிகள் ஆக்கப்படுகின்றனர். தென் இந்தியாவில், ஒரு நகர் எந்த அளவுக்குச் சமய முக்கியத்துவம் உடையதோ, அந்த அளவுக்கு மேக நோய்கள் அதில் மிகுதி. 1917இல் கும்பகோண நகரின் வாழ்க்கைப் புள்ளி விவரங்களை (Vital Statistics) ஆய்ந்து மதிப்பிடும் பணியைச் […]

மேலும்....