விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! (24) – குடலவால் அழற்சி (APPENDICITIS)

நம்மில் பெரும்பாலோருக்கு மிகவும் சாதாரணமாக ஏற்படும் நோய் ‘குடல்வால் அழற்சி’ (Appendicitis). நன்றாக இயங்கிக் கொண்டிருப்பவருக்கும், சோம்பலான வாழ்க்கை வாழ்பவர்களுக்கும், முதியவர்களுக்கும், இளைஞர்களுக்கும், குழந்தைகளுக்கும், ஆண்களுக்கும், பெண்களுக்குமென எந்த வேறுபாடும் இன்றி வருகின்ற நோய் இது. சிலருக்கு திடீரென்றும், சிலருக்கு நாள்பட்ட (chronic) நோயாகவும் இது வரலாம். தகுந்த நேரத்தில் கண்டறிந்து மருத்துவம் செய்யாவிட்டால் சில நேரங்களில் உயிருக்கே கூட ஆபத்து ஏற்படக் கூடும். ஆனால், ஆரம்பத்திலேயே கண்டறிந்து உரிய மருத்துவம் செய்து கொண்டால் எந்த ஆபத்தும் […]

மேலும்....

சிறுகதை : சுப சகுனம்

தத்துவமேதை டி.கே.சீனிவாசன் “விடு என் கையை!’’ “என்னம்மா கோபம்?’’ “தனியாப் போற பெண்ணைக் கையைப் பிடிச்சு_’’ “கையைப் பிடிச்சா இழுத்தேன்? காதலைச் சொன்னேன்’’ “தெய்வந்தான் உன்னைக் கேக்கணும்’’ “கேக்காதம்மா… வள்ளி திருமணம் பார்த்திருக்கியா?’’ “கதை பேச இது நேரமில்லை, வழி விடு.’’ “பேச வேண்டாம், கேளு. வள்ளியை முருகர் இப்படித்தானே_’’ “வள்ளிக்கு முருகர்மேலே முன்னமேயே காதல்’’ “முன்னமேயே காதல் சரி. பின்னே வேலன் வேடனாவானேன், வேடன் விருத்தனாவானேன்?’’ “முருகனுக்கு அது தெரியாது.’’ “அதுபோலத்தான் ஒன் மனசு எனக்கும் […]

மேலும்....

கவிதை – சமூக விடுதலை

சரியான புரிதல் சரியான                 சிந்தனைக்கு இட்டுச் செல்கிறது; சரியான சிந்தனை சரியான                 மொழிக்கு இட்டுச் செல்கிறது; சரியான மொழி சரியான                 செயலுக்கு இட்டுச் செல்கிறது; சரியான செயல் சரியான                 வாழ்க்கைக்கு இட்டுச் செல்கிறது; சரியான வாழ்க்கை சரியான                 முயற்சிக்கு இட்டுச் செல்கிறது; சரியான முயற்சி சரியான                 விழிப்புணர்வுக்கு இட்டுச் செல்கிறது; சரியான விழிப்புணர்வு சரியான                 மனஓர்மைக்கு இட்டுச் செல்கிறது; சரியான மனஓர்மை சரியான                 அறிவுடைமைக்கு இட்டுச் […]

மேலும்....

வரலாற்றுச் சுவடு : நீதி பரிபாலனம் நூறு ஆண்டுகளுக்கு முன்

சு.அறிவுக்கரசு 1920 இன்றைய ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள நெல்லூர் சென்னை மாகாணத்தில் இருந்தபோது ஒரு வழக்கு. கோயில் ஒன்றின் தர்மகர்த்தாக்கள் மூவரையும் பதவி நீக்கம் செய்யக் கோரிய வழக்கு. கோயில் சொத்துகளைச் சரிவரப் பாதுகாக்காமல் நட்டம் ஏற்படுத்தி, நம்பிக்கைத் துரோகம் செய்ததாக வழக்கு. தொடுத்தவர்கள் தர்மரட்சண சபாவின் தலைவர் சுப்ரமணிய அய்யர், குருவா ரெட்டி, ராமி ரெட்டி, சீராமுலு ஆகியோர். எதிர்த் தரப்பினர் சேஷாத்ரி ரெட்டி, சுப்பராம ரெட்டி, பிச்சி ரெட்டி ஆகியோர். இவர்களின் வழக்குரைஞர் ராகவ […]

மேலும்....

உடல் நலம் : குடல் புண்ணா?

பழைய சோறு போதும்.. அறுவை சிகிச்சை வேண்டாம்! அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இரைப்பை குடல் அறுவை சிகிச்சை துறை தலைவர் ஜெஸ்வந்த் இதனை முன் எடுத்துள்ளார். பழைய சோறு குடல் புண்ணாகி (Ulcer) அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் இருக்கும் நோயாளிகளை அறுவை சிகிச்சை செய்யாமலே பழைய சோறு காப்பாற்றி வருகிறது. பழைய சோற்றின் மருத்துவ குணங்கள் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. குடல் அழற்சி தற்போது பரவலாக 100க்கு 30 பேரிடம் காணப்படுகிறது. […]

மேலும்....