முகப்புக் கட்டுரை : பிற்படுத்தப்பட்டோருக்கு பி.ஜே.பி. அரசின் துரோகங்கள்!

மஞ்சை வசந்தன்  சமூகநீதிக்கும் இடஒதுக்கீட்டிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அதே போல், இடஒதுக்கீட்டிற்கும் ஜாதிவாரி கணக் கெடுப்பிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. காரணம், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் ஜாதி அடிப்படையில் ஒடுக்கப்பட்டவர்கள் இந்தியாவில் வாழும் 90% மக்கள். எனவே, ஜாதிவாரி கணக்கீடு என்பது இடஒதுக்கீட்டிற்கு அடிப்படை. அப்படியிருக்க மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதிவாரி கணக்கெடுப்பு (பிற்படுத்தப்பட்டோர் கணக்கெடுப்பு) தேவையில்லை என்ற மத்திய அமைச்சரவையின் முடிவு –  இடஒதுக்கீட்டை, குறிப்பாக பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை ஒழிப்பதற்கான முதல் முயற்சியாகும். இதை தமிழர் […]

மேலும்....

பெரியார் பேசுகிறார் : பகுத்தறிவு வளர்ந்தால்…

பகுத்தறிவுக் கழகம் இன்றைய தினம் ஏற்பாடாகிறதென்றால் ஒரு புதிய மனித சமுதாயத்தை உண்டாக்குகிறோம் என்பதுதான் பொருள் என்பதோடு, இப்போதுதான் நம்மில் பலர் மனிதராகிறோம் என்பதும் பொருளாகும். உலகில் மனிதன் ஒருவனுக்குத்தான் பகுத்தறிவு உண்டு. மற்ற எந்த ஜீவராசிகளுக்கும் பகுத்தறிவு கிடையாது. மனிதனைத் தவிர, உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்தும் 1,000, 2,000 வருடங்களுக்கு முன் எப்படி இருந்தனவோ, அதுபோல்தான் இன்றும் இருக்கின்றன. மனிதன் ஒருவன்தான் மாற்றத்திற்கு, சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டு வந்திருக்கின்றான்; மாறிக்கொண்டு வருகிறான். நம் […]

மேலும்....

தலையங்கம் : பெரியாரிசத்தை ஒழிக்க பா.ஜ.க. கால் பதிக்கிறதா?

காற்றை விதைத்துப் புயலை அறுவடை செய்யும் பா.ஜ.க.! பா.ஜ.க.வின் கருநாடக எம்.பி. ஒருவர் (தேஜஸ்வி சூர்யா என்பவர்) ‘‘தமிழகத்தில் பா.ஜ.க. போட்டியிடுவது பெரியாரிசத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்குத்தான்’’ என்று கூறி, தங்களது முக்கியப் பணியாக எது இப்போது இருக்கிறது என்பதை வெளியே காட்டியுள்ளார்! நாளும் நாளும் பெரியார் தமிழ்நாட்டைத் தாண்டி இந்தியாவையே ஆட்கொண்டுவரும் மானுட குலத்தின் மகத்தான தத்துவமாக மாறி வருகிறார்! பெரியாரிசம் என்பது வாணவேடிக்கை அல்ல; ஒரு சமூக விஞ்ஞானம்! பெரியாரிசம் என்பது வெறும் கிள்ளுக்கீரை […]

மேலும்....