சிறுகதை : அர்த்தநாரீஸ்வரி

கவிப்பேரரசு வைரமுத்து அவள் பெயர் ஈசுவரி. அவளை அறிந்தவர்கள் அனைவரும் அவளைப் பற்றிச் சொல்லும் முதல் வார்த்தை ‘பாவம்‘. இரண்டு பொருள்கொண்ட அந்தப் ‘பாவம்’ இரக்கத்தையும் குறிக்கலாம்; குற்றத்தையும் குறிக்கலாம். அந்தச் சொல் அவள் மீது இரக்கத்தையே காட்டுகிறதென்றால் அதை அவள் விரும்பவில்லை; குற்றத்தையே குறிக்கிறதென்றால் அதற்கு அவள் பொறுப்பில்லை. ஒரே ஓர் எழுத்தில் அவள் தலையெழுத்தே மாறிப்போனது. “சீ’’ இருக்க வேண்டிய இடத்தில் “ஙீ’’ வந்துவிட்டது. அதனால் அவள் ஒட்டு மொத்த வாழ்வும் கேள்விக்குறியானது. பதவி, […]

மேலும்....

பகுத்தறிவுப் பாவேந்தர் : உலக மானுடம் காணாத ஒப்பற்ற கவிஞர்!

முனைவர்.வா.நேரு தமிழகத்தில் திராவிட இயக்கத்தைச் சார்ந்த இளைஞர்கள் மட்டுமல்லாது பொது நிலையில் உள்ள இளைஞர்களும் இன்று தேடிப் படிக்கும் தத்துவம் பெரியாரியல் ஆகும். வலதுசாரி எண்ணம் கொண்ட ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி.யை எதிர்க்க நினைக்கும் எல்லோரும் இன்றைக்குத் தந்தை பெரியாரைப் படிக்கிறார்கள். தந்தை பெரியாரைப் படிக்கும் இளைஞர்கள், மாணவ, மாணவிகள் தவறாமல் படிக்க வேண்டிய படைப்பு புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் கவிதைகளாகும். புரட்சிக்கவிஞரின் கவிதைகள் பத்தோடு பதினொன்றல்ல. அவரது கவிதைகள் தனித்துவமானவை. தன்மானத்தையும் இனமானத்தையும் படிப்பவர்க்கு  ஊட்டுபவை. உணர்ச்சியை, […]

மேலும்....

பெண்ணால் முடியும் : தமிழகத்தின் ஒழிம்பிக் நம்பிக்கை வீராங்கனை!

இந்தியத் தடகள அரங்கில் நமக்குக் கிடைத்திருக்கும் புதிய நம்பிக்கைக் கீற்றாய், திருச்சியின் வயல்வெளிகளில் ஓடிக் கொண்டிருந்த கால்கள் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் 24ஆவது தேசிய பெடரேஷன் கோப்பைக்கான தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டு பெண்கள் பிரிவு 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளார். இந்தச் சாதனையின் சிறப்பான விஷயம் தனலட்சுமியை இந்திய ஒலிம்பிக் அமைப்பினரையே திரும்பிப் […]

மேலும்....

விழிப்புணர்வு : பெற்றோர் அறிந்து கொள்ளவேண்டிய சட்டம்

அண்மைக் காலமாக இந்தியாவில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்த வண்ணமுள்ளன. இந்த வன்முறைகள் குழந்தைகளுக்குப் பள்ளிகளில் ஆசிரியர் மூலமாகவும், நெருங்கிய உறவினர்கள் மூலமாகவும், நண்பர்கள் மூலமாகவும் நிகழ்ந்தபடி இருக்கின்றன. நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் பற்றி பிள்ளைகளுக்கு எடுத்துக்கூறி சில பேரிடம்  நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தாது இருக்கவும், பெற்றோர்கள் அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். கரோனா காலத்தில் இதுபோன்று குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் வன்முறை அதிகரித்து உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. […]

மேலும்....

செய்தியும், சிந்தனையும்…தூங்கு மூஞ்சிக் கடவுள்!

செய்தி : 1 தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் சனி பகவான் மனைவி ஜேஷ்டா தேவியை வணங்கினால் தூக்கம் வரும். ஜேஷ்டா தேவிக்குக் கோவில் ஹரிகேசவநல்லூரில் உள்ளதாம். இதைச் சொன்னவர் ஜோதிடர் ஹரிகேசவநல்லூர் வெங்கட்ராமன். – ‘மங்கையர் மலர்’ – 16.03.2021, (‘கல்கி’, குழுமம்) சிந்தனை : ஓ, தூங்குமூஞ்சிக் கடவுள் என்று சொல்லுங்கள். தூங்குவதற்கு ஒரு கடவுள், விழிப்பதற்கு ஒரு கடவுள், சாப்பிடுவதற்கு ஒரு கடவுள், செரிமானத்துக்கு ஒரு கடவுள் _ கடவுள்களில்தான் எத்தனை எத்தனை டிபார்ட்மெண்ட்? […]

மேலும்....