வினையன் கவிதைகள்

சாதீ: பக்கத்து வூட்டு மாட்டுக்கும்சேத்து புண்ணாக்கு தவுடுகரைக்கிற அப்பனுக்கும்கீழத்தெரு மொட்டையமூட்டுஆட்டையும் ஆசுபத்திரிஓட்டிட்டு போற பெரியப்பனுக்கும்உசுரு மேல அன்பு.!மனுசம்மேல எப்பஅப்பாடிகளா.?***** (சா)மி (தி)ருவிழா: கிடாய்களின் உதிரம் துடைத்ததோடுமுடிந்தது திருவிழா..!யாருமே கவனிக்கவில்லை.?யார் இழுப்பார் என்ற சண்டையில்தேர் சக்கரத்தில் தெளித்த ரத்தத்தை.*****படையல் : கொலசாமி கோயிலுக்கு படையலுக்குபோனோம்நடுத்தெரு மாசிலாமணி கிட்ட ரெண்டுபாக்கெட்சாராயம் கடன் வாங்கி…!வழுக்க செட்டியார் கடைல சுருட்டு சகிதம்…ஆரஞ்சு, மஞ்சள், பச்சை என கலர் கலராரொட்டி பாக்கெட் மூணு…இலைய விரிச்சி எல்லா படையல் சாமானையும்அதுல போட்டு…!!வெராக்குடி வீரன முதல்ல அழைச்சா.?குதிரைக்கு […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

கேள்வி : டாஸ்மாக் கடை மூடுவதில் கலைஞர் மவுனம் சாதிப்பது ஏன்? மூடினால் கள்ளச்சாராயம் பெருகும்; அரசுக்குக் கிடைக்கும் வருவாய் தனிப்பட்டவருக்குப் போகும் என்று எண்ணுகிறாரா? தங்கள் கருத்து என்ன? – தி.பொ.சண்முகசுந்தரம், திட்டக்குடி பதில் : டாஸ்மாக் ஏற்படுத்திய விளைவு கொடுமையானது. குடிப்பழக்கம் குழந்தைக்கும்  வரவேண்டும் என்று எண்ணுகிற நல்ல குடிமகன்கள் உள்ள நிலையில், மதுவிலக்கும் அதேநேரத்தில் கள்ளச் சாராயத் தடுப்புக்குரிய சரியான நடவடிக்கைகளும் _ சட்டங்களும் _ கண்காணிப்பும் பல்முனைத் தாக்குதல்போல் நடத்தப்பெற வேண்டும் […]

மேலும்....

வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?

– புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் காமம் இது வடசொல் என்றே கூறிப் பொய்ப்பர். ஏனெனில் வடமொழி நூற்களில் பெரிதும் வருவதான ஒரு சொல் இது. தமிழினின்று திருடியது. காமக்கணிப் பசலியார் என்பது ஒரு பெண்பால் புலவர் பெயர். இதுல் காமம்,கண் என்பன முதலிரு சொற்களாகும். இது காமாட்சி என்பதனின் தமிழ் மொழி பெயர்ப்பு. இவ்வாறு மொழி பெயர்த்தவர் சங்கப் புலவர் என்க. சாம்பூநதம் என்னும் ஒருவகைப் பொன்னை, நக்கீரனார் நாவலொடு பெயரிய பொலம் என்று தமிழிற் பெயர்த்ததும் காண்க. […]

மேலும்....

சொன்னது சொன்னபடி

இடதுசாரி சனநாயக முன்னணி வேண்டும் வகுப்புவாத சக்திகளை எதிர்ப்பதுடன், அந்த சக்திகளின் பிற்போக்கான பொருளாதாரக் கொள்கைகளை எதிர்ப்பதுதான் நமக்குமுன் உள்ள மிகப் பெரிய சவாலாகும். இந்தப் பிரச்சினைகளை முன்வைத்து இடதுசாரிகள் நடத்தும் போராட்டம் நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளன. வகுப்புவாத சக்திகளை முறியடிக்க ஓர் இடதுசாரி சனநாயக முன்னணியை உருவாக்க வேண்டும்.  – என்.சங்கரய்யா ஏன் இந்த மவுனம்? இலஞ்சம் வாங்கவும் மாட்டேன்; வாங்க அனுமதிக்கவும் மாட்டேன் என்ற பிரதமர் நரேந்திர மோடி, ஊழல் நடைபெற்றால் அதைப் பற்றி […]

மேலும்....

மக்கள் மனசு

மக்கள் மனசு ஜாதி மறுப்பு மணம் சரியா? உண்மை வாசகர்களிடம் முகநூல் வாயிலாகக் கேட்டதற்கு அவர்கள் அளித்த பதில்கள் இங்கு தரப்பட்டுள்ளன். ராமநாதன்: சாதி மறுப்பு மணங்களுக்கு அரசு அதிகமான சலுகைகள் கொடுத்து ஊக்கம் கொடுத்தால் சாதி ஒழிய வாய்ப்புள்ளது. மணிவாஸ் டிவிகே: சாதி மனிதனை சாக்கடையாக்கும்.சாதி மறுப்பு திருமணங்கள் தகர்க்கப்படுவது தவறானது. கார்த்திகேயன் பழனிவேலு: சாதி மறுப்பு மணங்களை எதிர்ப்பது சரியல்ல. பாபு பாபு: ஜாதி இல்லையென்றால் நம் தேசம் இயங்காது. ஏனென்றால், அரசியலுக்கு துருப்புச் […]

மேலும்....