டாக்டர் அம்பேத்கர்

டாக்டர் அம்பேத்கர்

– தந்தை பெரியார்

டாக்டர் அம்பேத்கர் அவர்கள் இந்திய அரசாங்க நிர்வாக சபை மெம்பர் என்கின்ற முறையில் சென்னைக்கு வந்து 4, 5 நாள்கள் தங்கி இருந்து பல இடங்களில் பேசிவிட்டுப் போய் இருக்கிறார்.

அப்படி அவர்கள் பேசிய பேச்சுகளில் பார்ப்பனர்கள் பெரிய உத்தியோகங்களில் பதவிகளில் இருந்தால் எப்படி பார்ப்பனிய ஆதரவுக்கும் நலத்துக்கும் துணிகரமாய் வெள்ளையாய் பேசுவார்களோ அதுபோலவே பச்சையாய் பேசுகிறார் என்பது மிகுதியும், அதிசயப்படவும், பாராட்டத்தக்கதுமான காரியமாகும்.

மேலும்....

கருத்து

கேரளாவின் அதிரபள்ளியில் நீர்மின் நிலையம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளிக்கக்-கூடாது. இதனால் சுற்றுச்-சூழலுக்குப் பெரும் கேடு ஏற்படும். இந்த விசயத்தில் முடிவு எடுப்பதற்கு முன் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் நீர்மின் நிலையம் அமைக்கப் போவதாகக் கூறப்படும் இடத்துக்கு வந்து நிலைமையை ஆய்வு செய்ய வேண்டும். – ஜெய்ராம் ரமேஷ், காங்கிரஸ் மூத்த தலைவர். குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்கக்-கூடிய சட்டம் நம் நாட்டில் இப்போது இல்லை. தற்போது உள்ள சட்டம் 14 […]

மேலும்....

லீக்வான்யூ மறைவு, உலகிற்கே பேரிழப்பு!

உலகின் தலைசிறந்த நிர்வாக மேதையும், சிறந்த அரசியல் ஞானியும், நவீன சிங்கப்பூரின் ஆற்றல் மிகு தந்தையுமான பேரறிஞர் லீக்வான்யூ அவர்கள் தனது 91ஆவது வயதில்  (23.3.2015) அன்று காலை காலமானார் என்ற செய்தி சிங்கப்பூர் நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல; உலகின் அறிவு சார் மனித குலத்திற்கே ஒரு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். பெரும்பான்மையினர் சீனர்கள்தான் என்றா லும், தமிழர் திராவிடர் அடங்கிய இந்தியர், மலாய்காரர்கள், யூரேசியர்கள் வெகு குறைவான எண்ணிக்கையினர்தான் என்றாலும், பெரும் பான்மை சிறுபான்மை […]

மேலும்....

ஒரு நாணயத்தின் 2 பக்கங்கள்

டாக்டர் அம்பேத்கர் 125வது பிறந்த நாள்

ஒரு நாணயத்தின் 2 பக்கங்கள்

– கவிஞர் கலி.பூங்குன்றன்

பார்ப்பனர் பற்றி…………..

தந்தை பெரியார் பேசுகிறார்!

ஆங்கிலோ – இந்தியர்கள் எப்படியோ அதே போலத்தான் இந்நாட்டுப் பார்ப்பனர்களும். ஆங்கிலோ இந்தியர்கள் நம் நாட்டுத் தாய்மார்கள் ஈன்றெடுத்தவர்கள் தாமே! ஆனால் அவர்களுக்கு சற்றாவது நம் நாட்டு உணர்ச்சி இருக்கிறதா? நமது மக்களைப் பார்த்தால் டேய், டமில் மனுஷா என்று கேவலமாகத்தானே கூறுகின்றனர். அவர்கள் யார்?

எந்த நாட்டில் பிறந்தவர்கள் என்ற வரலாற்றை அறியாமல், தான் ஏதோ அய்ரோப்பாவில் பிறந்து இங்கு குடியேறியதுபோல ஜாதி ஆணவத்துடன் அல்லவா நடக்கிறார்கள்?

அதைப் போலவே இந்நாட்டுப் பார்ப்-பனர்களும் மேல்நாட்டில் இருந்து வந்து குடியேறிய ஆரியர்களுக்கும், நம் நாட்டவர்-களுக்கும் பிறந்தவர்களாய் இருந்தும்கூட ஆரிய ஜாதி முறைகளையும், அதற்கான ஆணவத்தையும் கொண்டு நாட்டுக்குரிய நம்மைக் கீழ் ஜாதிகளாக, அடிமைகளாக மதித்து நடத்துகிறான்.

– (குடிஅரசு 28.6.1949)

அண்ணல் அம்பேத்கர் பேசுகிறார்!

தனது மூதாதையர்கள் உருவாக்கிய பார்ப்பனீய தத்துவத்தை ஒவ்வொரு பார்ப்பானும் நம்புகிறான். இந்து சமுதாயத்திலே அவன் ஒரு அன்னியனாக இருக்கிறான். பார்ப்பானை ஒரு பக்கம் நிறுத்தி, மற்றொரு பக்கம் சூத்திரர்கள், தீண்டத்தகாதவர்கள் என்று கருதப்படுபவர்களையும் நிறுத்தி ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த இரண்டு பிரிவினரும் இரு வேறு அயல்நாட்டினரைப் போல்தான் தோன்றும். ஒரு ஜெர்மானியனுக்கு ஒரு பிரெஞ்சுக்காரன் எப்படி அன்னியனோ, ஒரு வெள்ளைக்காரனுக்கு ஒரு நீக்ரோ எப்படி அன்னியனோ, அதுபோலவே பார்ப்பான் சூத்திரர்களுக்கும், தீண்டப்படாதவர்களுக்கும் அன்னியனாவான்.

(காந்தியும் காங்கிரசும் தீண்டப்படாதோருக்குச் செய்தது என்ன? என்ற நூலின் பக்கம் 215)

மேலும்....

இணையதளங்களில் கருத்துரிமையைத் தடுக்கும் சட்டப் பிரிவு ரத்து உச்ச நீதிமன்றத்தின் பாராட்டத்தக்க தீர்ப்பு

தகவல் புரட்சி யுகம் என்று அழைக்கப்படும் புதுமையான மின்னணுப் புரட்சியால், உலகத்தின் ஒரு கோடி அல்லது மூலையில் உள்ள செய்தி, அடுத்த சில நொடிகளில் மற்றொரு கோடிக்கோ, மூலைக்கோ பரவும் வண்ணம் வேகமான மின்னஞ்சல் வசதி -_ அதையொட்டிய முகநூல், டுவிட்டர், வாட்ஸ் அப் எத்தனை எத்தனையோ! அவற்றின்மூலம் ஏராளமான கருத்துப் பரிமாற்றங்கள் சுதந்திரமாக நடைபெற்று வருகின்றன உலகெங்கும்! ஆனால், ஆட்சியாளர்கள் – இந்தக் கருத்துரிமை வெளிப்பாட்டின் கழுத்தை நெரிக்கவே புதிய சட்டங்களையும், திருத்தங்களையும், தங்களுக்குள்ள ஆட்சி, […]

மேலும்....