ஆதிக் குடியிலிருந்து ஓர் அரு மருத்துவர்!

ஜாதியின் வெற்றிக்கான காரணம் அதன் படிக்கட்டு முறையில்தான் இருக்கிறது என்பதைத் தெளிவாகக் கண்டுணர்ந்து சொன்னவர் அண்ணல் அம்பேத்கர். இந்துமதத்தைப் பொருத்தளவில் எந்த இரண்டு ஜாதிகளும் இணையானவையல்ல; எல்லாமே மேல் அல்லது கீழ்தான். ஒன்றுக்குக் கீழ் ஒன்று என்ற இந்தப் படிக்கட்டு முறையின் காரணமாகத்தான், தனக்கு மேலே ஆயிரம் ஜாதிகள் இருந்தாலும், அவர்களால் தாம் நசுக்கப்பட்டாலும், நமக்கும் கீழே உள்ளவர் கோடி என்று நினைத்துப் பார்த்து நிம்மதி நாடுகிறார்கள்; அவர்களை அடக்கியாளத் துடிக்கிறார்கள். பார்ப்பனர்கள் பிற ஜாதிகளையும், அதற்கடுத்த […]

மேலும்....

அந்தச் சவாலை தொடர்ந்து செய்வோம்

  – வே.மதிமாறன் ஜாதி வெறியர்கள், சமூக விரோதிகள், கிறிஸ்துவ (தலித் அல்லாத) இந்து மத வெறியர்கள் போன்ற பிற்போக்காளர்களால் கடுமையாக நேரடியாக வெறுக்கப் படுகிறவரும், இந்தக் கும்பல் என்ன காரணங்களுக்காக வெறுக்கிறதோ, அதே காரணத்திற்காகவே பல முற்போக்காளர் களாலும் புறக்கணிக்கப்-படுகிறவர் அநேகமாக இந்தியாவில் டாக்டர் அம்பேத்கர் மட்டுமே. தலித் விரோதம் கொண்ட, ஜாதி வெறியர்களின் அம்பேத்கர் மீதான வெறுப்பை, சிலை உடைப்பு போன்ற நடவடிக்கைகளால், நேரடியாக உணர முடிகிறது. ஆனால், இந்த முற்போக்காளர்களின், இலக்கியவாதிகளின் அம்பேத்கர் […]

மேலும்....

திராவிடம் என்பது பொய்யா?

“நாம் நினைவிற் கொள்ள வேண்டிய மற்றொரு விஷயம் திராவிடர் என்னும் சொல் ஒரு மூலச்சொல் அல்ல என்பதாகும். தமிழ் எனும் சொல்லின் சமஸ்கிருத வடிவமே இந்தச் சொல். தமிழ் என்னும் மூலச்சொல் முதன்முதலில் சமஸ்கிருதத்தில் இடம்பெற்ற-போது ‘தமிதா’ என்று உச்சரிக்கப்பட்டது; பின்னர் ‘தமில்லா’ ஆகி முடிவில் ‘திராவிடா’ என்று உருத்திரிந்தது. ‘திராவிடா’ என்னும் சொல் ஒரு மக்களது மொழியின் பெயரே அன்றி, அந்த மக்களது இனத்தைக் குறிக்கவில்லை. நாம் நினைவில் கொள்ள வேண்டிய மூன்றாவது செய்தி தமிழ் […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

கேள்வி : தமிழகத்தில், காங்கிரஸ் ஆட்சி செய்த காலத்திலிருந்து இன்றைய திராவிடக் கட்சி ஆட்சி வரை, தேர்தலில் தோல்வி அடைந்த கட்சி எதுவாக இருந்தாலும், ஜனநாயகம் தோற்றது. பணநாயகம் வென்றது என சொல்வது இன்னும் நின்றபாடில்லையே. இப்படி ஓலமிடுவது எப்போது நிற்கும்? இதுபோன்று, பிற மாநிலங்களில் தேர்தலில் தோல்வி அடைந்த கட்சியினர், இப்படிச் சொல்வது உண்டா? இதுகுறித்து தங்கள் கருத்து?– தி.பொ.சண்முகசுந்தரம், திட்டக்குடி பதில் : பிற மாநிலங்களில் இவ்வளவு பணம் தேர்தலில் விளையாடியதே இல்லை. முன்பு […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்…. 127 ஆம் தொடர்

  ஆரியத்தின் ஜம்பம் பலிக்குமா? விடுதலை அலுவலகப் பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டதற்குப் பிறகு நிகும்பன் என்ற பெயரில் முதுபெரும் பெரியார் தொண்டர் ஒருவர் பாராட்டி எழுதிய  கடிதத்தை 03.06.1978 அன்று விடுதலையின் மூன்றாம் பக்கத்தில் வெளியிட்டிருந்தோம். அதனை அப்படியே இங்கே தருகிறேன். சிக்கெனப் பிடித்தோம்! ( நிகும்பன் ) (தந்தைக்குப் பிறகு தாய் -_ தாய்க்குப் பிறகு தளபதியாக இயக்கம் வளையாது, நெளியாது வீறுநடை போட்டு வரும் உறுதிப்பாட்டை உணர்ச்சியோடு படம் பிடித்துக் காட்டுகிறார், ஒரு […]

மேலும்....