அரசியலுக்கு வந்தது ஏன்? அண்ணா அறிவிப்பு!

“என்னுடைய நண்பர்கள் எல்லாம், நான் பிரிந்து சென்று விட்டேன் என்று குறிப்பிட்டார்கள். இருக்க வேண்டிய கடினமான நாட்களில் இருந்தேன். பிரிந்தேன் என்பது கூட தவறு. இந்த நாடு, அரசியலை நமக்கு நேர் மாறான கருத்துடையவர்களிடம் கொடுத்து விட்டு அவர்களுக்கு நாம் ஆளாகி இருப்பதைப் போக்க வேண்டும் என்பதற்காக, அரசியலில் நுழைந்து அதனைக் கைப்பற்றியும் இருக்கிறேன். . . . . . இவரது கொள்கைகளை நிறைவேற்ற என்னால் இயன்றவரை பாடுபடுவேன். இந்த ஆட்சியால் பயனில்லை, எதுவும் செய்ய […]

மேலும்....

செவ்வாய் மனிதர்கள்… – செந்துறை மதியழகன்

ஆண்டு 2050 செவ்வாய் மண்டலம், மரினர் பள்ளத்தாக்கின் விளிம்பு முகாம். “அந்தப் ப்ளாட் 145இல் தண்ணீர்ப்பாசனம் சரிவர இல்லையாம், நெற்பயிர் வாடிவிட்டதாக அதிகாலையே குறுந்தகவல் புகார்” என்ற துணை அதிகாரி அகிலனைக் கோபமாக ஏறிட்டான் நித்திலன். “யாருப்பா புகார் சொன்னது, அந்த… இந்திய அமைச்சர் தானே? இந்தியாவில் இருக்கும் வாடிக்கையாளர்களில் இந்த அமைச்சரிடம் இருந்துதான் நிறைய புகார் வருகிறது. வாடிக்கையாளர்க்கு நம்மால் முடிந்த அளவு சேவையைத் தருகிறோம். மற்றவர் நம் தொழில் நேர்மையைச் சந்தேகிப்பதை எக்காரணம் கொண்டும் […]

மேலும்....

தடைகளை உடையுங்கள் ! தன் காலில் நில்லுங்கள் ! – சிகரம்

பெண்கள் தங்கள் நிலையை உயர்த்திக் கொள்ளவும், அடிமை மற்றும் ஆதிக்கத் தளையிலிருந்து விடுவித்துக் கொள்வதும், அவர்கள் தங்களது நிலையை, தகுதியை, அறிவை, படிப்பை உயர்த்திக்கொள்வதும் தற்சார்பு நிலையை அடைவதும் அவசியம். சார்ந்தே வாழ வேண்டும் என்ற நிலைதான் ஒருவரை மற்றவருக்கு அடிமையாக்குகிறது. அந்தப் பலவீனத்தைப் பயன்படுத்தித்தான் ஆதிக்கம் செலுத்துகின்றவர்களும் ஆதிக்கம் செலுத்துகின்றனர். எனவே, சுயமாகச் சம்பாதிக்கின்ற தகுதியை, வாய்ப்பைப் பெண்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். உயர்கல்வி படித்த பெண்கள் கூட, திருமணமானவுடன் தனது தகுதிகள் அனைத்தையும் ஓரங்கட்டிவிட்டு […]

மேலும்....

ஈடி அலுவலர்கள் மோடியின் ஈட்டிக்காரர்களா ?

சி.பி.ஐ, அமலாக்கத் துறை, வருமான வரித்துறை ஆகியவற்றை பிளாக்மெயில் அரசியலுக்கே பாஜக அரசு பயன்படுத்தி வருகிறது. கட்சிகளை உடைக்கவும், பிற கட்சி எம்.எல்.ஏக்களை வளைத்துப்போடவுமே பெரும்பாலும் புலனாய்வு மற்றும் நிதி நிர்வாகப் பயன்படுத்தி வந்தது வெட்டவெளிச்சமான நிலையில் தற்போது புதிய பயன்பாடும் வெளிவரத் தொடங்கியுள்ளது. தேர்தல் பத்திரங்கள் பா.ஜ.க. திட்டம் மூலம் அதிகபட்ச நிதியைப் பெற்றது பாரதிய ஜனதா கட்சியாகும். அந்தக் கட்சிக்கு மட்டும் கடந்த 2017-18 முதல் 2022-23ஆம் ஆண்டு வரை மொத்தம் ரூ.6570 கோடி […]

மேலும்....

பாரீர் ! நமது பன்னீர் செல்வங்கள் ! – – வி.சி.வில்வம்

“கடவுள் இல்லை” என்கிறார் பெரியார்! எப்படி அவர் சொல்லலாம்? நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் நடுங்குகிறது. கடவுள் இல்லாமல் நாம் எப்படி உயிர் வாழ முடியும்? கடவுள் இல்லை என்று சொன்னால் நம் உயிர் போய்விடாதா? என்று கடும் பயத்தில் வாழ்ந்த மக்கள் ஒரு காலத்தில் இருந்தனர். இப்போது அந்த எண்ணம் வெகுவாகக் குறைந்து போனது. அதேபோல நீ எப்படி கடவுள் இல்லை என்று சொல்லலாம்? உன்னைப் போல நிறைய பேரைப் பார்த்துவிட்டோம், கடைசி காலத்தில் ஆன்மிகத்திற்கு வந்துதான் […]

மேலும்....