இந்திப் பாம்பும் தடியெடுக்கும் தமிழ்நாடும்

முனைவர் வா.நேரு “மொழி என்பது உலகப் போட்டி போராட்டத்துக்கு ஒரு போர்க் கருவியாகும்” என்றார் தந்தை பெரியார். வர்ணத்தின் அடிப்படையில் ஜாதிக்கொடுமையால் படிக்கக்கூடாது என்று தடுக்கப்பட்ட சூத்திரர்களும் பஞ்சமர்களும் இன்றைக்கு உலகப் போட்டியில் வெற்றி பெறுவதற்கு, தாங்களும் சுயமரியாதை உணர்வு மிக்க மனிதர்களாக ஆவதற்கான கருவியாகத் தந்தை பெரியார் வழியில் கல்வியைக் கையில் எடுத்திருக்கிறார்கள். தாங்கள் படித்து முன்னேறுவது மட்டுமல்ல, தங்களைப் போல இருக்கும் ஒடுக்கப்பட்ட மாணவர்கள் முன்னேறுவதற்கான வழிகாட்டுதல்களையும் கொடுப்பவர்களாக மாறுகின்றார்கள். ஆங்கிலேயர் ஆட்சியில் தாங்கள் […]

மேலும்....

தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு

-கவிக்கோ துரை வசந்தராசன் தனித்திருந்த மவுனம்தான் வாய்தி றந்து தந்தமொழி செந்தமிழ்தான்! என்னும் மண்ணில் தனித்தியங்கும் தனிமொழியோ தமிழே தானே! தனித்தியங்கும் மனத்தி னன்யார் தமிழன் தானே! சதிநுழைந்த காரணத்தால் சித்தி ரைக்குத் தாவிவிட்ட தமிழனைநாம் மீட்கும் நாளாய் இனிக்கின்ற கரும்புத்‘தை’ நாள்புத் தாண்டு! இறுத்துங்கள் இதைநெஞ்சில்!இனிக்கும் யாண்டும்! தைதொடங்கி ஆனிவரை ஆறு மாதம் கதிரவன்தன் வடசெலவை நிகழ்த்து கின்றான்! பைநிறைய விதைவிதைக்கும் ஆடி மாதம் பகலவன்தன் தென்செலவை தொடங்கும் மாதம். தைக்கின்ற பனிக்குளிரின் மார்க ழிக்குள் […]

மேலும்....

பொருளாதார லாபங்களுக்காகப் போர்கள்

(யூதர்களின் இரகசிய அறிக்கை) நம்முடைய நோக்கம் நிறைவேறும் பொருட்டு, தவிர்க்க முடியாத போர்கள் செய்ய வேண்டி வந்தால், முடிந்தவரை அதை நாடு பிடிக்கும் நோக்கில் செய்ததாகக் காண்பிக்கக்கூடாது. பொருளாதார லாபங்களுக்காகச் செய்யப்பட்ட தாக்குதலைப் போல்தான் அவை இருக்க வேண்டும். அந்தப் போரில் நாம் ஆற்றிய பங்கைக் காணுகின்ற உலக நாடுகள், நாம் எவ்வளவு பலசாலிகள் என்பதைப் புரிந்துகொள்வார்கள். போர்மூலம் கைப்பற்றப்பட்ட அந்த நாட்டின் அரசியல் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் யாவும், நம்முடைய சர்வதேச ஏஜெண்டுகளின் தயவிலேயே நடைபெறும். […]

மேலும்....

நான் விஞ்ஞானியானதற்குப் பின்புலம் தந்தை பெரியாரின் சிந்தனைகளே!

-விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை சென்ற இதழ் தொடர்ச்சி… இந்த உரை மூலம் நாம் சொல்வது என்னவென்றால், இந்த விதை… விதை என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்கிறேன். இந்த விதை இந்த நிமிடத்தில், இந்த நொடியில் விதைக்கப்பட்டாலும், அது இன்னொரு வீரமுத்துவேலாக (அவையில் பல இடங்களைக் காட்டி) – இங்கே, இங்கே, இங்கேகூட விருட்சமாக வரும் என்பதற்காகச் சொல்கிறேன். அதற்காக எல்லோரும் விண்ணுக்குப் போகவேண்டும்; எல்லோரும் நிலவுக்குப் போகவேண்டும் என்கிற அவசியம் இல்லை. எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும், எந்த […]

மேலும்....

காட்டுமிராண்டி மொழி என்றவர்தான் கணினி மொழியாக்கினார்!

– வி.சி.வில்வம் “தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று சொல்லிவிட்டார்”, எனப் பல ஆண்டுகளாய் குதிக்கிறார்கள் போலித் தமிழ்த் தேசியவாதிகள். சமஸ்கிருதமே உயர்ந்தது என்கிறது ஒரு கூட்டம். அதற்கு இவர்கள் பதில் சொல்வதில்லை. தமிழை நீஷ பாஷை (இழிந்த மொழி) என்கிறது அக்கிரஹாரம். அதற்கும் இவர்கள் பதில் சொல்வதில்லை; உணர்ச்சியற்றுக் கிடக்கிறார்கள்! ஆனால், வளர்ச்சிப் பார்வையில், ஆய்வு நோக்கில் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்றார் பெரியார்! உடனே குதிக்கிறார்கள். பெரியார் எப்படிச் சொல்லலாம் என 50 ஆண்டுகளாய்க் கதறுகிறார்கள். […]

மேலும்....