பிரிவினையை வேரறுக்கப் பிறந்த பொங்கல்!

பாவலர் செல்வ மீனாட்சி சுந்தரம் புராணத்தின் பொய்க்கதைகள் பேசாப் பொங்கல்! புகழ்தமிழர் மரபினிமை பேசும் பொங்கல்! முரணாக மதப்பற்றைப் பாராப் பொங்கல்! மொழியால்நாம் தமிழரெனப் பார்க்கும் பொங்கல்! உரங்கூட்டா வேற்றுமைகள் பேணாப் பொங்கல்! உறவாய்த்தம் காளைகளைப் பேணும் பொங்கல்! உறவெல்லாம் ஒன்றுகூட வாய்க்கும் பொங்கல்! உலகாளும் ஆதவன்சீர் போற்றும் பொங்கல்! உழக்குவிதை நிலம்விதைத்துக் கதிர்வ ளர்த்தே உற்றபசி அற்றொடுங்க ஊட்டும் பொங்கல்! உழவர்களின் உன்னதத்தை உரைக்கும் பொங்கல்! உலகமுண்ண உழைப்பார்சீர் ஓதும் பொங்கல்! உலகுயிர்த்த உயிரெல்லாம் ஒக்கு […]

மேலும்....

தமிழர் திருநாள்

முனைவர் கடவூர் மணிமாறன் தமிழர்தம் புத்தாண்டுத் தொடக்கம் ‘தை’யே! தமிழறிஞர் எல்லாரும் கருத்தால் ஒன்றி அமிழ்தனைய சிந்தனையைப் பகிர்ந்தார் அந்நாள்; அறுவடைநாள் பொங்கல்நாள் எல்லாம் சேர்ந்து திமிர்ந்தெழவே உழவரினம் உவகை பொங்கத் திரண்டுள்ள கதிர்விளைச்சல் கண்டு நெஞ்சில் அமிழ்தின்பம் ஊற்றெடுக்கும் இனிய நாளில் அகமகிழ்ந்து கொண்டாடி மகிழ்வோம் நாமே! சித்திரையைப் புத்தாண்டின் தொடக்கம் என்போர் சிறுமதியோர்! வரலாற்றை அறிந்து கொள்ளார்! எத்திக்கும் இந்நாளில் வாழு கின்ற எந்தமிழர் இக்குமுக அறத்தை வேட்பர்! முத்தனைய சமத்துவத்தை விழைவர்; என்றும் […]

மேலும்....

அவாள் ஏடுகளுக்குச் சவால் திராவிட இயக்கப் பொங்கல் மலர்கள்!

கோவி.லெனின்   நமஸ்காரம் என்பது வணக்கம் என மாறியதிலும், ஸ்ரீமான் – ஸ்ரீமதி போன்றவை திரு – திருமதி என்ற வழக்கத்திற்கு வந்ததிலும், விவாக சுபமுகூர்த்தப் பத்திரிகை என்பது திருமண விழா அழைப்பிதழ் என அச்சிடப்பட்டதிலும் திராவிட இயக்கத்தின் பங்களிப்பு எந்தளவு சிறப்பானதாக உள்ளதோ அதுபோலத்தான் சங்கராந்தி எனப் பஞ்சாங்கம் பார்த்துச் சொல்லப்பட்டு வந்த நம் பொங்கல் நன்னாளை, பண்பாட்டுப் பெருமை மிக்க தமிழர் திருநாள் என உலகெங்கும் வாழும் தமிழர்கள் கொண்டாடி வருவதிலும் திராவிட இயக்கத்தின் […]

மேலும்....

ஆரிய ஊடுருவலை அகற்றி தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் விழாக்களைக் கொண்டாடுவோம்!

மஞ்சை வசந்தன் தமிழரின் பண்பாட்டுச் சிறப்புகளை அழிப்பதிலும் திரிப்பதிலும் ஆரியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில் தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாள் என்பதை மாற்றி, சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்று திரித்து, சமஸ்கிருதப் பெயரைத் தமிழ் ஆண்டின் பெயர் என்று திணித்து, தமிழர் பண்பாட்டை அழித்தனர். நன்றியின்பாற்பட்ட பொங்கல் விழாக்களை புராணக் கதைகள் மூலம் மகரசங்கராந்தி போகி என்று மாற்றியும், திரித்தும் மூட விழாக்களாக்க முயற்சி செய்கின்றனர். தமிழ்ப் புத்தாண்டை மாற்றிய மோசடி […]

மேலும்....

எனது பொங்கல் பரிசு – தந்தை பெரியார்

பெரியார் பேசுகிறார் தீபாவளிப் பண்டிகை ஆரியர் உயர்வுக்கும், திராவிடர் இழிவுக்கும் ஆகவே கற்பிக்கப்பட்டது என்றும், அதைத் திராவிடர் கொண்டாடுவது தன்மானமற்ற இழிசெயல் என்றும், சற்றேறக்குறைய 25 ஆண்டுகளாக சுயமரியாதை இயக்கம் மக்களிடையே செய்துவந்த வேண்டுகோளுக்குத் தன்மானத் தமிழர்கள் பலர், தீபாவளியைக் கொண்டாடுவது மானமற்றதும், அறிவற்றதுமான செய்கைதான் என்றாலும் மக்கள் இன்பத்துக்குப் பண்டிகை ஒரு சாதனமாக இருப்பதால் தமிழர்கள் அவர்களது குடும்பம் கூடிக்குலாவி இன்பமடைய ஏதாவது ஒரு பண்டிகை வேண்டுமே அதற்கென் செய்வது? என்று கேட்ட காலத்தில் பொங்கல் […]

மேலும்....