அறிவியல் தரும் வாய்ப்புகள்

— முனைவர் வா.நேரு — “இன்று உலகத்தின் வேறு பல பாகங்களில் உள்ளவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பல அற்புதங்களும், அப்பாகங்கள் அடைந்துள்ள முற்போக்குகளும் முதலாகியவை எல்லாம் -அந்நாட்டவர் பழையவற்றோடு திருப்தி அடைந்து, அதுவே முடிவான பூரண உலகம் என்று கருதி அப்பழையவற்றையே தேடிக் கொண்டு திரியாமல், புதியவற்றில் ஆர்வம் கொண்டு நடுநிலை அறிவோடு முயற்சித்ததன் பலனாலேயே ஏற்பட்டவை ஆகும். அவை இன்று எல்லா மக்களாலும் ஆதரவோடு அனுபவிக்கப்படுகின்றன. ஆகவே இதை உணர்ந்தவர்கள்தாம் இனிச் சில நூற்றுக்கணக்கான ஆண்டுகளில் எப்படிப்பட்ட […]

மேலும்....

சுதந்திரச் சூளுரை

லாகூரில் 1929இல் நடைபெற்ற ஆண்டு மகாநாட்டில் இந்திய தேசிய காங்கிரஸ் பூரண சுயராஜ்யம் (முழு விடுதலை) அடைவதே தன் லட்சியம் என்று தீர்மானம் நிறைவேற்றியது. ஆண்டுதோறும் ஜனவரி 26ஆம் நாள் சுதந்திர நாளாகக் கொண்டாடுவதென்று தீர்மானிக்கப்பட்டது. மறு ஆண்டு (1930) ஜனவரி 26 அன்று நாடெங்கிலும் நடைபெற்ற ஆயிரக்கணக்கான பொதுக்கூட்டங்களில் கீ¢ழ்வரும் சுதந்திரச் சூளுரை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. வேறெந்த மக்களையும் போலவே இந்தியர்களுக்கும் சுதந்திரமும், தம் உழைப்பின் பலனை அனுபவிக்கவும், வாழ்வின் தேவைகளை அடையவும், இவற்றின் மூலம் […]

மேலும்....

உடைந்த ஆசை

— இராம. அரங்கண்ணல் — ‘‘ஓவியம் என்றால் எனக்கு உயிர். வா, நண்பா வா!” என்று வருந்தியழைத்தான் நண்பன் நாகன். நெடுநாளைக்குப் பின் எங்கள் சந்திப்பு மலர்ந்திருந்தது. பள்ளிப் பருவத்து நண்பர்கள் நாங்கள்! அன்பின் அழைப்பை மறுக்க முடியுமா? ஒரு கோயில் விடவில்லை. ஊர்க்கோடி வரை சென்றோம். அங்கே, பாழடைந்த மண்டபம் ஒன்று விதவைபோலக் காட்சி தந்தது. அதனுள் சென்று பார்த்தோம். உடைந்து கிடந்தது ஒரு சிலை! உற்று நோக்கினோம் _ மிகமிகப் புராதன காலத்தது போலத் […]

மேலும்....

நான் விஞ்ஞானியானதற்குப் பின்புலம் தந்தை பெரியாரின் சிந்தனைகளே!

— விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை — சென்ற இதழ் தொடர்ச்சி… ஏனென்றால், இங்கே மேடையில் அந்தப் பெண் சொன்னாரே, ‘‘அப்பாதான் எனக்குப் பெரியாரை அறிமுகப்படுத்தினார்’’ என்று. என்னுடைய அப்பாவும் அப்படித்தான் அறிமுகப்படுத்தினார். எனக்கு அண்ணாதுரை என்று பெயர் வைத்ததற்கான காரணமும் அதுதான். நான், என்னுடைய அப்பாவிடம் கேட்பேன். ‘‘எதற்காக எனக்கு அண்ணாதுரை என்று பெயர் வைத்திருக்கிறீர்கள்?’’ என்று. அதைப் பற்றி பின்னால் பார்ப்போம். இப்போது, பந்தயக் குதிரைகளாக மாணவர்கள் இருக்கவேண்டும் என்ற பெரியாரின் கூற்றைப் பற்றி… ‘‘எதையும் […]

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்…

தமிழை வளர்த்தனரா பார்ப்பனர்கள்? நூல் குறிப்பு : நூல் பெயர் : ‘வெறுக்கத்தக்கதே பிராமணீயம்!’ ஆசிரியர் : கி. வீரமணி வெளியீடு : திராவிடர் கழக (இயக்க) வெளியீடு பக்கங்கள் : 160 நன்கொடை (குறைந்த அளவு) : ரூ.150/- தமிழுக்காகத் தொண்டு செய்யும் பார்ப்பனர்களைப் பட்டியலிட்டுக் காட்டி  – இவர்களையா எதிர்ப்பது என்று தோள் தட்டுகிறார் திருவாளர் ‘சோ’ ராமசாமி. பார்ப்பனர்கள் தமிழுக்குத் தொண்டு செய்ததைவிட துரோகம் செய்ததும், இழிவுபடுத்-தியதும் இடைச் செருகல் செய்ததும்தான் அதிகம்! […]

மேலும்....