இவர்கள் யார் ?

பொதுவாக, பார்ப்பனர்கள் தங்கள் மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்கு, காலத்திற்கு ஏற்ற பலவகைக் கட்டுக்கதைகளையும், புனைவுகளையும் ஏற்படுத்தத் தவற மாட்டார்கள். வரலாறு நெடுகிலும் அவ்வாறு புனையப்பட்ட அனைத்துமே பார்ப்பனர் அல்லாத மக்களை அடிமைப்படுத்துவதற்கான காரணிகளாக அமைந்திருக்கின்றன. அவ்வகையில், எவை எல்லாம் பார்ப்பனரல்லாத மக்களுக்கு ‘அறிவினை’ வழங்குமோ அவை அனைத்தையும் அம்மக்களுக்கு எட்டாக்கனியாக மாற்றுவதற்கு அனைத்து விதமான சூழ்ச்சிகளையும் பார்ப்பனியம் மேற்கொண்டு இருக்கிறது. ஒன்றை உயர்வாகக் காட்டி, அதன் மேல் ஒரு புனிதத் தன்மையைப் பூசி இவையெல்லாம் அணுகக் கூடாதவைகள்; […]

மேலும்....

மனமின்றி அமையாது உலகு!(6) மனநோய்கள்…

மருத்துவர் சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர் மனம் குறித்த பல்வேறு அடிப்படைத் தகவல்களைப் பற்றிப் பார்த்தோம். அதே போலவே மனநலம் என்பது குறித்தும், அதன் முக்கியத்துவம் குறித்தும் பல்வேறு மனநலமின்மைகள் குறித்தும் சில புரிதல்களுக்கு வந்திருக்கிறோம். இன்றைய காலத்தில் மனநோய்கள் அல்ல, மனநலமின்மைகளே அறைகூவல் விடுவனவாக இருக்கின்றன, மிக எளிமையாகச் சரி செய்து கொள்ளக்கூடிய மனநலப் பிரச்சினைகள் கூட, மனம் மீதான எதிர்மறையான பார்வையின் காரணமாகப் புறக்கணிக்கப்படுகின்றன. அதன் விபரீதமான விளைவுகளை அண்மைக் காலங்களில் அதிகமாகப் பார்க்கிறோம். […]

மேலும்....

தலை நிமிர்வோம் இரா. அழகர்

‘டேய்! புல்லட் வாத்தியார் வந்துட்டு இருக்காரு. எல்லாரும் அமைதியா இருங்க; இல்லேன்னா வெளுத்துப்புடுவாரு” – வகுப்பறையில் தினேஷ் குரலில் அறையே அமைதி ஆனது. ஏறக்குறைய மூன்றாம் வகுப்பு மாணவர்கள் முதல் எட்டாம் வகுப்பு மாணவர்கள் வரை அந்தப் பள்ளியில் கண்டு பயப்படும் ஒரே ஆசிரியர் புல்லட் வாத்தி என்று மாணவர்களால் பெயர் சூட்டப்பட்ட நடேசன் வாத்தியாராகத்தான் இருப்பார். முறுக்கு மீசையுடன் புல்லட்டில் அவர் மிடுக்காக, கம்பீரமாக வரும் தோரணையே மாணவர்களை மிரளச் செய்யும். பாடம் நடத்துவதோடு நின்று […]

மேலும்....

போலி அறிவியலும் ( Pseudo Science) ஆன்மிகவாதிகளும்! குமரன் தாஸ்

முழுப் பொய்யைவிட, அரை உண்மை ஆபத்தானது என்று சொல்லப்படுவது உண்மைதான் என்பதை நாம் இப்போது பார்த்து வருகிறோம். ஆம், இப்பொழுதெல்லாம் மூடக் கருத்துகளைப் பேசுவோர் அறிவியலைத் துணைக்கழைத்துக் கொண்டு, தாம் பேசும் கருத்து அறிவியல் ஆய்வில் நிரூபிக்கப்பட்ட ஒன்று என்று அடித்துப் பேசுவதைப் பார்க்கிறோம். ஏனென்றால், தமிழ்நாட்டு மக்களிடம் கடந்த காலத்தினைப் போல கடவுளின் சக்தி, மந்திர சக்தி என்று சொல்லி எதையும் ஏற்றுக்கொள்ளச் செய்ய முடியாத காரணத்தினால் அறிவியல் விளக்கம் ஒன்றைச் சொல்லி, ஆகவே இது […]

மேலும்....

தந்தை பெரியார் பொதுக்கூட்ட உரையை இறுதிவரை காரில் அமர்ந்து கேட்டு மகிழ்ந்தவர் “குன்றக்குடி அடிகளார்”!- சாமி திராவிடமணி

குன்றக்குடி அடிகளார் என்று தமிழ்ப் பெருமக்களால் அன்புடன் அழைக்கப்படும் திருவண்ணாமலை ஆதீனம் சார்ந்த குன்றக்குடி மடத்தின் 45ஆம் ஆதீனகர்த்தரான தவத்திரு. குன்றக்குடி தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அவர்கள் தந்தை பெரியார் மீது பேரன்பும் மதிப்பும் கொண்டவர். தந்தை பெரியாரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களும் அவ்வாறே அடிகளார் மீதும் மதிப்புக் கொண்டவர்கள். தந்தை பெரியார் அவர்கள் காரைக்குடி நகருக்கு ஒவ்வோர் ஆண்டும் கழகப் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களுக்கு வருவார்கள். 1960இல் என் தந்தையார் என்.ஆர்.சாமி அவர்கள் […]

மேலும்....