மக்களாட்சி உரிமைகளைக் காக்க ‘இந்தியா ’ கூட்டணிக்கு வாக்களிப்போம் ! பாசிச பா.ஜ.க.வை வீழ்த்துவோம்! – மஞ்சை வசந்தன்

நடக்க இருக்கு நாடாளுமன்றத் தேர்தல் வழக்கமான தேர்தல் அல்ல அது ஒரு பெரும் போர். ஜனநாயகத்திற்கும் எதேச்சாதிகாரத்திற்கும் இடையேயான போர். பாசிசத்தை, சனாதனத்தை, மதவெறியை, கார்ப்பரேட் ஆதரவை, ஒற்றைக் கலாச்சாரத்தை, ஒற்றை ஆட்சி முறையை, ஒரே மதத்தைக் கொள்கையாகக் கொண்ட ஆர்.எஸ்.எஸ். முன்னிறுத்தும் பா.ஜ.க. அணிக்கும், மத இணக்கம், சமத்துவம், சமூகநீதி, சமஉரிமை, மக்களாட்சி, மனிதநேயம் இவற்றைக் கொள்கையாகக் கொண்ட இந்தியா அணிக்கும் இடையிலான இப்போர், ‘இந்திய’ வரலாற்றில் மிக முக்கியமானது. எதேச்சாதிகாரம் வெற்றி பெற்றால், நாடே […]

மேலும்....

உயிரைக் கொடுத்தும் சமதர்மம் காப்போம் ! – தந்தை பெரியார்

சமதர்மம் என்பது பேத தர்மத்துக்கு மாறான சொல். இந்த இடத்தில் நாம் அதை எதற்குப் பயன்படுத்துகின்றோம் என்றால், மனித சமுதாய வாழ்க்கைக்கு – மனுதர்மத்திற்கு எதிர்தர்மமாகப் பயன்படுத்துகின்றோம். மனித சமுதாயத்தில் பேதநிலை இருக்க வேண்டும் என்பதற்காகவே மனுதர்மம் செய்யப்பட்டது. பேத நிலைக்குக் காரணம் என்ன? சமுதாயத்தில் பேத நிலையானது இரண்டு விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. ஒன்று : மனிதன் பிறவியில் உயர் ஜாதியாய் அல்லது தாழ்ந்த ஜாதியாய்ப் பிறக்கின்றான் என்பது. இரண்டு : […]

மேலும்....

ஊடகங்கள் உருவாக்கும் பொய்யான கருத்துத் திணிப்பை உடைத்து நொறுக்கிய குரேஷி! -ஆசிரியர் கி.வீரமணி

‘‘400-ன்னு சொல்றாங்க, மே கடைசி வரை காத்திருக்க அது 250 ஆகக் குறையும். ஜூன் முதல் வாரம் 175-200 ஆகும். நான் அரை டஜன் அல்போன்சா மாம்பழ விலையைச் சொன்னேன்.” இது, மேனாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி தனது ‘எக்ஸ்’ தளத்தில் செய்துள்ள பதிவு. பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. (ஆர்.எஸ்.எஸ்.) அரசின் பத்தாண்டுகால மக்கள் விரோத, ஜனநாயக ஒழிப்பு, இந்திய அரசமைப்புச் சட்ட ஒழிப்பு ஆட்சி முடிவுக்கு வருவதுபற்றி இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் வரும் […]

மேலும்....

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் மறைவு : 21.4.1964

‘‘வள்ளுவரைவிட புதுமையான புரட்சி யான கருத்துகளை- மக்களை பகுத்தறிவு வாதிகளாக்கக்கூடிய கவிதைகளை எழுதி யவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். அவரது கவிதைகள் மனிதனை சிந்திக்கத் தூண்டுகின்றன. ஒவ்வொரு துறையிலும் சிறந்த கருத்துகளை நம்முடைய இயக்க முறையைவிட தீவிரமாகக் கூட எடுத்து விளக்கி இருக்கிறார். கடுகளவு அறிவுள்ளவன் கூட அவர் கவிதையைப் படித்தால் முழுப் பகுத்தறிவுவாதியாகிவிடுவான்.’’ – தந்தை பெரியார் (’விடுதலை’ 29.04.1971)

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

நீதிக்கட்சித் தலைவர் சர்.பிட்டி தியாகராயர் அவர்கள் சென்னை மாநகர முதல் மேயராகத் தேர்ந்தெடுக் கப்பட்ட காலகட்டத்தில்தான் சென்னை மாநகரில் கட்டாய ஆரம்பக் கல்வியும், பார்வையற்றோர் பள்ளியும் பிச்சைக்கார மறுவாழ்வு இல்லமும் உருவாக்கப்பட்டன என்ற வரலாற்றுச் செய்திகள் உங்களுக்குத் தெரியுமா?    

மேலும்....