மனமின்றி அமையாது உலகு!-மருத்துவர் சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர்

மனம் என்றால் என்ன? அது எங்கிருக்கிறது? உடலின் மற்ற பாகங்களைப் போல மனம் அதிகமாகப் புரிந்துகொள்ளப்படாததற்குக் காரணம் அதற்கு உருவமோ அல்லது அமைப்போ இல்லாததே!. மனதிற்கும் ஒரு உருவம் இருந்திருந்தால் அதை ஸ்கேன் செய்து பார்த்து நன்றாக இருக்கிறதா இல்லையா என்று எளிதாகச் சொல்லிவிடலாம். ஆனால், அப்படி எந்த உருவமும் இல்லாமலிருப்பதால்தான் அது நன்றாக இருக்கிறதா இல்லையா என்று கண்டுபிடிப்பதே அத்தனை குழப்பமானதாக இருக்கிறது. மனதிற்கு உருவமில்லையென்றால் அது என்னவாக இருக்கிறது? எங்கிருக்கிறது? மனது என்று ஒன்று […]

மேலும்....

பாதை – ஆறு. கலைச்செல்வன்

மாதவா, என்ன ஏதோ தீவிரமான சிந்தனையில் இருக்க போலிருக்கே”, என்று கேட்டுக்கொண்டே நண்பன் மாதவன் வீட்டுக்கு வந்தான் தமிழ்ப்பிரியன். “வா தமிழ்ப்பிரியன், நீ சொல்றது உண்மைதான். நான் அடுத்த வாரம் மதுரைக்குப் போக வேண்டும். எந்தப் பாதை வழியாகப் போகலாம்னுதான் யோசனை பண்றேன். பல நேரங்களில் நான் தவறாக முடிவெடுத்து சிக்கலில் மாட்டிக்கொள்கிறேன்” என்றான் மாதவன். “இதில் மட்டுமல்ல, எல்லாவற்றிலும் நீ சரியான முடிவினை எடுப்பதில்லை. நான் சொல்லும் யோசனையையும் கேட்பதில்லை. சரி, இப்ப உனக்கு நான் […]

மேலும்....

ஒரு சாமியும் காப்பாத்தலே…- – கவிஞர் ஆன்மன்

மலைகளடர்ந்த ஸ்தலத்தின்டே யானையை உருட்டிப் பந்து செய்ததுபோல் திரண்ட பாறையொன்று உருண்டுவிடாமல் உச்சியில் ஒய்யாரமாய்க் கிடக்கிறது இதுதான் “தங்ஙள்பாறா” பெரிய முஸ்லிம் பெரியவர் அடங்கி இருக்காராக்கும் ஒட்டிய அடுத்த குன்றில் மயிலும் குமரனும் இடது புறம் தேவனின் ஆலயம் மும்மதத்தவரும் பக்தியால் மலையேறும் முக்திபெற்ற ஸ்தலம் பரமபிதாவின் பரம விசுவாசிகள் மொத்தமாய்க் குவிந்து தங்ஙள் பாறாவை தங்கள் பாறாவாக்கிய குறுத்தோலை ஞாயிறன்று அவசரத்திற்கு மலைச்சரிவில் ஒதுங்கிய விசுவாசியொருவர் என்ட அம்மே என்றலறினார் எட்டிப் பார்த்தால் கந்தலாகிக் கிடந்தாளொரு […]

மேலும்....

குன்னூர் டாக்டர் கவுதமன் !- வி.சி.வில்வம்

டாக்டர் கவுதமன் அவர்கள் 1949 இல் பிறந்தவர். வயது 75 ஆகிறது. அப்பா பெயர் இராமமூர்த்தி. “பென்னாகரம் இராமமூர்த்தி” என அழைக்கப்பட்டவர். அம்மா பெயர் சாந்தா. இராமமூர்த்தி அவர்கள் மிகச் சிறந்த பெரியார் தொண்டர். சுயமரியாதைக் குடும்பத்தின் வார்ப்பு, வளர்ப்பு கவுதமன் அவர்கள். தத்துவ விளக்கம்! டாக்டர் கவுதமன் அவர்களின் தந்தை, அந்தக் காலத்திலேயே இன்டர்மீடியட் முடித்தவர்கள். மேனாள் அமைச்சர் க.இராஜாராம் அவர்களின் வகுப்புத் தோழர் ஆவார். சேலம் அரசுக் கல்லூரியில் படித்த போது, கல்லூரி முதல்வர் […]

மேலும்....

வாழ்க்கைத் தரத்தைப் போல உள்ளத் தரத்தையும் அரசு உயர்த்த வேண்டும் ! – குமரன் தாஸ்

காரைக்குடியில் ஒரு (அரசு) நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் இருந்து மாலையில் பள்ளி முடிந்து வெளியே வரும் (இரு பால்) மாணவர்களையும் காண்பது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியான ஒன்றாகும். தினமும் அவர்களைக் கவனிக்கிறேன். தனியார் பள்ளி மாணவர்களுக்கு நிகராகச் சீருடை, கழுத்திலே டை, காலுக்கு ஷூ அணிந்து, நல்ல புத்தகப் பைகளைச் (bags) சுமந்தவாறு பிள்ளைகள் பேசிச் சிரித்து மகிழ்ந்து வெளியே வருகின்றனர். அவர்களுக்காக பெற்றோர்கள் அதிலும் குறிப்பாக பெரும்பாலான தாய்மார்கள் இரு சக்கர வாகனத்தில் வந்து காத்திருந்து பிள்ளைகளை […]

மேலும்....