சிவகங்கை இராமச்சந்திரனார் நினைவு நாள் (பிப்ரவரி 26)

வல்லாண்மை மிக்க ‘குடி’யில் 1884ஆம் ஆண்டு எஸ். இராமச்சந்திரனார் பிறந்தார். “இனி இந்தக் கையால்ஒரு பார்ப்பனருக்காவது உத்தியோகம் கொடுக்கமாட்டேன்’’ என்று பொது மேடையிலேயே சூளுரைத்த சுயமரியாதைச் செம்மல் ஆவார். சிவகங்கை சீமைப் பகுதிக்கு மட்டுமின்றி, தென்னகத் திராவிடர் அனைவருக்குமே இனநல வழிகாட்டியாக விளங்கினார். நெல்லையில் 21.7.1929 அன்று நடந்த சுயமரியாதை மாநாட்டிற்குத் தலைமையேற்று, இவர் தொலைநோக்குடன் ஆற்றிய பேருரையில், சுயமரியாதை இயக்கத்தின் இறுதிப் பலன்களாக “உலகத்திலுள்ள சொத்துகள் பூமிகள் எல்லாம் மக்களுக்குச் சொந்தமாகும்; மனித ஆயுள் இரட்டித்துவிடும்; […]

மேலும்....

கடவுளின் கதை – கடவுளும், சிக்கலும்!

வி.சி.வில்வம் கடவுளின் கதை குறித்துப் பேசச் சொல்கிறார்கள். தலைப்பிலே கதை வருவதால், கடவுளும் கதைதான் என்பதை அறியலாம். பொதுவாகக் கடவுளின் கதைகளை எழுதவே எனக்கு வாய்ப்பு இருந்தது. யாரும் பேச அழைத்ததில்லை. ஒருவேளை சிக்கல் வரக்கூடும் என நினைத்திருக்கலாம். உலகில் மாறாதவை இரண்டு! உலக வரலாறுகளை நான் வாசிக்கத் தொடங்கிய நேரம், அது நிறைய செய்திகளை யோசிக்கக் கொடுத்தது. ஆண்டான் அடிமை யுகத்தைவிட, நிலப்பிரபுத்துவம் சிறந்தது. நிலப்பிரபுத்துவ யுகத்தைவிட, முதலாளித்துவம் சிறந்தது என உலகம் மாறிக்கொண்டே வந்திருக்கிறது. […]

மேலும்....

மாறுதலுக்கு நாமும் தயாராவோம்!

முனைவர் வா.நேரு “மின்சாரத்தின் உபயோகம் எல்லா மக்களுக்கும் பயன்படக்கூடிய விதமாகவும், மக்கள் வாழ்க்கை வசதிகளுக்குத் துணை செய்யும் விதமாகவும் விரியும்-, பெருகும்’’ என்றார் தந்தை பெரியார் 85 ஆண்டுகளுக்கு முன்பு (‘இனி வரும் உலகம்‘). 50 ஆண்டுகளுக்கு முன்பு மின்சாரம் இல்லாமல், வீடுகளில் சின்ன விளக்குகளை வைத்துப் படித்த நம்மைப் போன்றவர்களுக்கு நம் வாழ்வில் மின்சாரமும் கணினியும் புதிய புதிய கண்டுபிடிப்புகளும் கொடுத்திருக்கும் மாற்றங்கள் மிகப்பெரும் வியப்பை அளிக்கின்றன. வீட்டில் மின்சாரம் வந்தது, கையில் துவைக்கும் பழக்கம் […]

மேலும்....

ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் செயல்பாடு என்ன?

அதன் மூளையாகச் செயல்படுவது யார்? இதன் தலைவர் நேதன் ஆண்டர்சன் ஆவார். கன்னெக்ட்டிகட் பல்கலைக் கழகத்தில் இண்டர்நேஷனல் பிசினஸ் படிப்பை முடித்துவிட்டு மான்ஹாட்டன் பகுதியில் வாழ்ந்து வந்தார் நேதன் ஆண்டர்சன். படித்த படிப்புக்கு ஏற்ப FactSet Research Systems Inc என்ற நிறுவனத்தில், பொருளாதாரத் துறையில் தனது பணியைத் தொடங்கினார். இஸ்ரேலில் சில காலம் ஆம்புலன்ஸ் ஓட்டுநராகவும் இவர் பணியாற்றியதாக ராய்ட்டர்ஸ் தளம் தெரிவிக்கிறது. இந்த அனுபவம் நேதனுக்கு அழுத்தமான சூழ்நிலைகளில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும், சிந்திக்கும் கூர்மைத் […]

மேலும்....

மருத்துவம் – மரணம் (4)

மருத்துவர் இரா.கவுதமன் “நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்திவ் உலகு’’ என்னும் வள்ளுவரின் குறளுக்கேற்பத்தான் மனிதரின் வாழ்க்கை அமைந்துவிடுகின்றது.. “நல்வழி’’யில் அவ்வையார் குறிப்பிட்டதைப் போல், “ஆற்றங் கரையின் மரமும் அரசரியவீற்றிருந்த வாழ்வும் விழுமன்றோ’’ என்பதுதான் வாழ்வியலின் உண்மை. உயிருள்ள அனைத்து உயிரிகளும் ஒருநாள் முடிவெய்தித்ததான் தீர வேண்டும் என்பதுதான் இயற்கை நியதி. மனித அறிவு வளர்ச்சியடையும் காலத்திற்கு முன் மரணம் என்பதையே ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையே மனிதர்களிடம் இருந்தது அதனாலேயே ஆரம்ப காலங்களில் பிணத்தைப் […]

மேலும்....