முகப்புக் கட்டுரை – செவ்வாய் தோஷம்? மெச்சத் தகுந்த உச்சநீதிமன்ற ஆணை

– மஞ்சை வசந்தன் உத்தரபிரதேசத்தில் உள்ள அலகாபாத் உயர்நீதிமன்றம் பல நேரங்களில் பரபரப்பான தீர்ப்புகளை வழங்கிய முக்கியமான நீதிமன்றம். அண்மையில் அந்த நீதிமன்றத்தில் ஒரு வழக்கு. உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக் கூறி, ஒரு பெண்ணை வன்புணர்வுக்கு உட்படுத்தினார். ஆனால், அந்தப் பெண்ணை திருமணம் செய்துகொள்வதைத் தவிர்த்து, தொடர்ந்து ஏமாற்றி வந்தார். பாதிக்கப்பட்ட அப்பெண் புகார் அளித்ததை அடுத்து அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். பிணை கோரி, அவர் அலகாபாத் […]

மேலும்....

ஜாதி வித்தியாசமும் தீண்டாமையும் – தந்தை பெரியார்

பெரியார் பேசுகிறார் மக்களில் ஜாதி வித்தியாசம் என்பதுகற்பிக்கப்பட்டதே ஒழிய தானாகஏற்பட்டதல்ல. வலுத்தவன் இளைத்தவனை அடக்கி வைக்கும் தர்மமே ஜாதி வித்தியாசமாகும். இது இன்னும் நிலைத்திருப்பது என்றால் இந்த நாடு மிருகப் பிராயத்தில் இருந்து மனிதப் பிராயத்திற்கு இன்னமும் வரவில்லை என்பதைத்தான் காட்டுகின்றது. எதற்காக ஒரு மனிதன் உயர்ந்த ஜாதியாகவும் மற்றொரு மனிதன் தாழ்ந்த ஜாதியாகவும் கருதப்படுகின்றான் என்பதற்கு ஏதாவது காரணங்கள் இருக்கின்றனவா? மனிதர்களை எடுத்துக்கொண்டால் ஜாதியின் காரணமாக பிறவியிலாவது வாழ்க்கையிலாவது ஒழுக்கங்களிலாவது அறிவிலாவது வித்தியாசங்கள் காணப்படுகின்றனவா? ஒன்றுமே […]

மேலும்....

ஜாதி-தீண்டாமையை ஒழித்து சட்டம் ஒழுங்கு நிலைநாட்ட காவல்துறையில் தனிப்பிரிவு அமைத்திடுக!

தலையங்கம் தமிழ்நாடு ஜாதி ஒழிப்புக்கும், தீண்டாமை அழிப்புக்கும் முன்னோடி யான சமத்துவப் போராட்டம் தொடரும் மண். பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் இந்தியாவிற்கே வழிகாட்டிக் கொண்டுள்ளது! ‘திராவிட மாடல்’ ஆட்சி, முதலமைச்சர் மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் சீரிய தலைமையில் நடைபெற்று, அமைதிப் புரட்சியாக நூற்றாண்டு நாயகர் மானமிகு கலைஞர் அவர்களால் தமிழ்நாடெங்கும் பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் உருவாக்கப்பட்டு, இந்தியாவிற்கே வழிகாட்டிக் கொண்டுள்ளது! 1969 இல் ஒன்றிய அரசால் – லால்பகதூர் சாஸ்திரி அவர்கள் பிரதமராக இருந்தபோது அமைக்கப்பட்ட, […]

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

விதவைப் பெண்கள் வேறு சாதியில் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்பதற்காக பார்ப்பனர்கள் உடன்கட்டை ஏறுதல் முறையை அமல்படுத்தினார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....