தலையங்கம் – ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்துக்கு இடஒதுக்கீட்டின்மீது இவ்வளவு கரிசனம் ஏன்?

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் அவர்களுக்குத் திடீரென்று ‘‘சமூகநீதி – ஒடுக்கப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு மீது திடீர்ப் பற்று, பாசம் பொங்கி வழிய ஆரம்பித்துவிட்டது! ‘‘2000 ஆண்டுகளாக அநீதி இழைக்கப்பட்ட, ஒடுக் கப்பட்ட மக்களான எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி, முதலிய வர்களுக்கு அரசமைப்புச் சட்டப்படி உள்ள சமூகநீதி அவசியம் கொடுக்கப்பட்டே தீரவேண்டும் என்பதாக சண்டப் பிரசண்டம் செய்து ‘ஸனாதனம்’ ஏற்படுத்திய கொடுமையை நேரிடையாக இல்லாவிட்டாலும், மறைமுகமாக ஒப்புக்கொள்வதாகப் பேசியுள்ளார்! பாரதம், இராமாயணம் கூறும் தர்மம் என்ன? வேட்டுவ […]

மேலும்....

தந்தை பெரியார் 145ஆம் ஆண்டு பிறந்தநாள்

பகுத்தறிவுப் பகலவனாகவும், பார் வியக்கும் சுயமரியாதைச் சிங்கமாகவும், உயர் சிந்தனையாளராகவும் விளங்கியவர் என்றென்றும் காலத்தை வென்ற தலைவர் அறிவு ஆசான் தந்தை பெரியார் ஆவார். ஒப்பாரும் மிக்காரும் இல்லாத புரட்சியாளர். தமது அறிவாயுதத்தின் மூலமே தனது லட்சிய வெற்றிகளை அமைதி வழியில் துளி ரத்தம் கூடச் சிந்த விடாமல் லட்சியப் போரில் வெற்றி கண்டு, அதைத் தமது வாழ்நாளிலேயே கண்ட வியத்தகு தலைவர் ! – கி.வீரமணி

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

பெண்களுக்காக உழைத்தவர்களில் ஈ.வெ.ரா.தான் உலகிலேயே முதலிடம் பெற்றவர். அந்த அளவிற்கு வேறு எவரும் சிந்தித்ததும் இல்லை. உழைத்ததும் இல்லை. இதை நன்குணர்ந்த பெண்கள், தங்களின் நன்றிப் பெருக்கால், 1938ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் நாள் சென்னை ஒற்றவாடைத் திரையரங்கில் நடைபெற்ற தமிழ்நாட்டு பெண்கள் மாநாட்டில் ‘பெரியார்’ என்ற பட்டத்தை அவருக்குத் தீர்மானம் நிறைவேற்றி வழங்கினர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....