அயோத்திதாச பண்டிதர் – 20.5.1845-5.5.1914

பேராசிரியர் சுப.வீ. 1845ஆம் ஆண்டு சென்னை தேனாம்பேட்டையில், கந்தசாமி என்பவருக்கு மகனாகப் பிறந்தார் அயோத்திதாச பண்டிதர். சிறந்த ஆய்வு நுட்பங்கொண்ட மருத்துவர். தென்னநாட்டில் புத்தம் மறுமலர்ச்சியடையக் காரணமாய் அமைந்தவர். ஜாதி, மதம், தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராய் மிகத் தீவிரமாகப் போராடியவர். ஆதிதிராவிடர்கள் தொடக்கத்தில் பவுத்தர்களே என்பதை வரலாற்றுத் தடயங்களோடு உறுதி செய்தவர். அயல் நாடுகளிலிருந்து வந்தேறிய ஆரியப் பார்ப்பனர்களின் ஆதிக்கத்திற்கு எதிராய் உறுதியுடன் போராடியவர். சென்னை அடையாறு பகுதியில் ‘தியோசபிகல் சொசையிட்டி’யை 1884இல் நிறுவக் காரணமாக அமைந்தவர். […]

மேலும்....

எச்சரிக்கைத் தொடர்

இந்தியாவில் இலைமறை காயாக ஃபாசிசம்! எச்சரிக்கை! இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். உருவாக்கப்பட்டதே ஆரிய பார்ப்பன ஆதிக்கத்தை உருவாக்கி, ஆரிய மேன்மையை மேலாண்மையை நிலை நிறுத்திக்கொள்ளவே. இவர்கள் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பை உருவாக்க ஹிட்லரிடமிருந்தும், முசோலினியிடமிருந்தும் கொள்கைகளை, செயல்திட்டங்களைப் பெற்றனர். யூத பயங்கரவாதம் என்னென்ன நோக்கங்களை, கொள்கைகளை, செயல்திட்டங்களைக் கொண்டு செயல்பட்டதோ அதையே ஆர்.எஸ்.எஸ்ஸும், ஆட்சியிலுள்ள பி.ஜே.பியும் பின்பற்றிச் செயல்படுவதை ஒப்பிட்டு, உணர்த்தி, எச்சரிக்க இக்கட்டுரைத் தொடர். அனைவரும் ஆழ்ந்து படித்து, விழிப்பு பெறுவதோடு, பாசிச பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளை அறவே அகற்ற, […]

மேலும்....

கட்டுரை – மனபலமும்! பலவீனமும்!!

– வி.சி.வில்வம் மனபலம் என்பது நமக்கு நாமே உருவாக்கிக் கொள்வது! மன பலகீனம் என்பது பிறர் நமக்கு ஏற்படுத்துவது! பகுத்தறிவும், சிந்திக்கும் திறனும் இருப்பவர்கள் அதிகமான மன பலத்தைப் பெறுவர்! மற்றவர்கள் பிறரால் அடிக்கடி மன பலகீனம் அடைவர்! உதாரணமாக பார‘தீய’ ஜனதா கட்சியின் பிரச்சார முறை இதுதான்! அவர்களுக்கென்று எந்தக் கொள்கையும் இல்லாததே இதற்குக் காரணம். தகவல்களைப் பொய்யாக உருவாக்கி,அதற்குள் பிரமிப்பைச் செலுத்தி, கூடவே மூளைச் சலவை செய்து, ஒரு கூட்டத்தை நம்ப வைத்துவிடுவார்கள். பிறகுஅதுவே […]

மேலும்....

பிள்ளைப் பருவமும் பிற்கால வாழ்வும்!

சில பிள்ளைகள் பதின் பருவத்தில் பெரும்பாலும் விளையாட்டுப் பிள்ளை களாகவே இருப்பார்கள். பொறுப்பற்று இருப்பார்கள். அவர்களைப் பற்றிய கவலை பெற்றோருக்கு இருக்கும். மேலை நாட்டில் ஒரு தாய்க்கு அப்படியொரு கவலை இருந்தது. எப்போது பார்த்தாலும் என் பிள்ளையை உங்கள் மகன் அடித்துவிட்டான். எங்கள் பிள்ளையை அவன் தள்ளிவிட்டுவிட்டான் என்கிற புகர்களோடு அக்கம் பக்கத்தில் இருப்பவர்களும் மற்றவர்களும் வீட்டு வாசலில் வந்து நிற்பார்கள். இந்த பிள்ளை உருப்படவே மாட்டானோ என்கிற கவலை பெற்றோருக்கு இருந்தது. அவன் தன் நண்பன் […]

மேலும்....

வரலாற்றுச் சுவடுகள் – அகில இந்திய சங்கீத மகாநாட்டில் பார்ப்பனிய விஷமம்

– தந்தை பெரியாரின் சமூக நீதிச் சிந்தனைகள் சென்னையில் கிறிஸ்துமஸ் வாரத்தில் அகில இந்திய சங்கீத மகாநாடு என்பதாக ஒன்றைக் கூட்டுவதாக சில பார்ப்பனர்கள் ஏற்பாடு செய்து சங்கீத வித்வான்களுக்கெல்லாம் அழைப்புக் கடிதம் எழுதியதுடன், அங்கு பாட வேண்டுமென்றும் சில பிரபல சங்கீத வித்வான்களைக் கேட்டுக் கொண்டார்கள். அவர்களுள் தென் இந்திய சங்கீத மணியாகிய ஸ்ரீமான் காஞ்சிபுரம் சி. சுப்ரமணியபிள்ளை அவர்களும் ஒருவர். ஆனால், அவர் பார்ப்பன சங்கீத வித்துவான்களால் பலவித துன்பமும் இடையூறும் அனுபவித்துப் பழகியவரானதால் […]

மேலும்....