நம்மை நமக்கு அடையாளம் தெரியவேண்டும்! 

வி.சி. வில்வம் “கோபத்தோடு எழுகிறவன் நட்டத்தோடு உட்காருவான்,” என்பது பொன்மொழி. “கோபம் என்பது தற்காலிக பைத்தியம்“, என்பதும் இன்னொரு பொன்மொழி! கோபத்தில் இருக்கும் போது, மனநிலை சரியில்லாதவர்கள் போல நடந்து கொள்வோம் என்பது இதற்குப் பொருள்! கோபத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஏராளமான பொன் மொழிகளும், எண்ணற்ற பழமொழிகளும் காணக் கிடைக்கின்றன. ஒரு மனிதர் திறமைக் குறைவாக கூட வாழ்ந்துவிடலாம். கோபம் இருந்தால் அழிவு பலவகைகளில் ஏற்படும்! கோபம் வரும் போது நிதானம் குறைகிறது, வார்த்தைகளில் கடுமை […]

மேலும்....

நலம் சேர்த்த உயர் தலைவா..!

முனைவர். கடவூர் மணிமாறன் முத்தமிழைக் கற்றுணர்ந்த அறிஞர்; பொன்றா முத்துவேலர் அஞ்சுகத்தாய் ஈன்ற செல்வர்! ஒத்துணர்வால் ஒப்புரவால் உலகம் போற்றும் உயரியநம் தமிழினத்தின் தலைவர் ஆனார்! கத்துகடல் சூழுலகில் எங்கும் வாழும் கவின்தமிழர் நெஞ்சமெலாம் நிறைந்து வாழ்வில் முத்திரையைப் பதித்தவரோ மொய்ம்பு சோன்ற முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஆனார்! நூற்றாண்டு விழாவைக்கொண் டாடு கின்றோம்! நுவலரிய அருவினைகள் பலவும் நாளும் ஆற்றியவர்; அண்ணாவின் தலைமை ஏற்ற அடுக்குமொழிப் பேச்சாளர்; பெரியார் தம்மைப் போற்றியவர்; அவர்நினைத்த யாவும் ஆட்சிப் […]

மேலும்....

முதல் சந்திப்பு லக்னோ சந்திப்பு

1916ஆம் ஆண்டு லக்னோவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிற்கு இருபெரும் சிறப்புகள் உண்டு. அந்த மாநாட்டிலேதான் மதச் சிறுபான்மையினருக்கும் உரிய உரிமைகளை வழங்குவது என்ற ஜனநாயக முடிவை இந்திய தேசிய காங்கிரசும், இந்திய முஸ்லிம்லீக்கும் சேர்ந்து எடுத்தார்கள். அதைத்தான் நாம் இப்போதும் லக்னோ ஒப்பந்தம் (Lucknow Fact) என்று அழைக்கிறோம். அந்த மாநாட்டுக்கு இருக்கிற இன்னொரு சிறப்பு என்னவென்றால் அந்த மாநாட்டிலேதான் முதன்முதலாக காந்தியாரும் நேருவும் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொண்டார்கள். அது குறித்து ஜவஹர்லால் நேரு தன் சுயசரிதையிலே […]

மேலும்....

பெண்களுக்குத் தற்காப்பு

– தந்தை பெரியார் பெண்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் பொருட்டு, அவர்களுக்கு ஆயுதம் கொடுக்கப்படுமா, என்று மத்திய சட்டசபையில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில் “மாகாண சர்க்கார் அவசியமானதைச் செய்யும்’’ என்று உள்நாட்டு மந்திரியான தோழர் பட்டேல் கூறியிருக்கிறார். மாகாண சர்க்கார்கள் இத்துறையில் எதுவும் செய்யும் என்ற நம்பிக்கை நமக்கில்லை. ஏனெனில், பெண்களை அடிமைப் பிறவிகளாக நினைக்கும் வைதீக மனப்பான்மை படைத்தவர்களே பெரிதும் மாகாண மந்திரிகளாயிருக்கின்றனர். ஆங்காங்கு இரண்டொரு பெண்களும் மந்திரிகளாயிருக்கின்றனர் என்றாலும், இவர்கள் “எங்களுக்கு எந்த விடுதலையும் […]

மேலும்....